அடிப்படைக் கொள்கை
எந்தவொரு இணையுமில்லாத தனித்தவன் அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி, அவனல்லாது வணங்கப்படுவதை மறுப்பதில் மனிதர்களுக்கு அனுப்பப்பட்ட அனைத்து இறைத்தூதுகளும் ஏகோபித்துள்ளன. இதுதான் லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் எனும் திருக்கலிமாவின் யதார்த்தமே இதுதான். இவ்வார்த்தை மூலம்தான் ஒரு மனிதன் அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைகின்றான்.
துணைத் தலைப்புக்கள்
இரு ஷஹாதாக்கள்
லாஇலாஹ இல்லல்லாஹு (உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை) எனும் ஏகத்துவ வார்த்தைக்கு இஸ்லாம் பாரிய இடத்தை வைத்துள்ளது. இது தான் ஒரு முஸ்லிமின் முதல் கடமையாகும். இஸ்லாத்தில் நுழைய விரும்புபவர் அதனை உறுதியாக ஏற்று மொழிய வேண்டும். அல்லாஹ்வுக்காக முழுநம்பிக்கையுடன் இதனை மொழிந்தவரை அது நரகிலிருந்து காக்கும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "அல்லாஹ்வுக்காக லாஇலாஹ இல்லல்லாஹு எனும் கலிமாவை மொழிந்தவருக்கு அவன் நரகை ஹராமாக்கி விடுகின்றான்" (புஹாரி 415.)
இறைநம்பிக்கை
எந்தவொரு இணையுமில்லாத தனித்தவன் அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி, அவனல்லாது வணங்கப்படுவதை மறுப்பதில் மனிதர்களுக்கு அனுப்பப்பட்ட அனைத்து இறைத்தூதுகளும் ஏகோபித்துள்ளன. இதுதான் லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் எனும் திருக்கலிமாவின் யதார்த்தமே இதுதான். இவ்வார்த்தை மூலம்தான் ஒரு மனிதன் அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைகின்றான்.
வணக்கம்
வணக்கம் என்பது நேசத்துடனும், கண்ணியத்துடனும், பணிவுடனும் பொதுவாக அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாகும். இது அல்லாஹ்வுக்கு மாத்திரம் அடியார்கள் செய்ய வேண்டிய கடமையாகும். அல்லாஹ் விரும்பி, பொருந்திக் கொண்டு, அவன் ஏவி, மக்களைத் தூண்டிய அனைத்தையும் வணக்கம் உள்ளடக்குகின்றது. இதில் தொழுகை, ஸகாத், ஹஜ் போன்ற வெளிப்படையான வணக்கங்களாக இருந்தாலும் சரி, அல்லது உள்ளத்தால் அல்லாஹ்வை நினைவுகூர்தல், அவனுக்கு அஞ்சுதல், அவனிடம் பொறுப்புச் சாட்டுதல், அவனிடம் உதவி தேடுதல் போன்ற உள்ரங்கமான வணக்கங்களாக இருந்தாலும் சரி.