வணக்கம்
வணக்கம் என்பது நேசத்துடனும், கண்ணியத்துடனும், பணிவுடனும் பொதுவாக அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாகும். இது அல்லாஹ்வுக்கு மாத்திரம் அடியார்கள் செய்ய வேண்டிய கடமையாகும். அல்லாஹ் விரும்பி, பொருந்திக் கொண்டு, அவன் ஏவி, மக்களைத் தூண்டிய அனைத்தையும் வணக்கம் உள்ளடக்குகின்றது. இதில் தொழுகை, ஸகாத், ஹஜ் போன்ற வெளிப்படையான வணக்கங்களாக இருந்தாலும் சரி, அல்லது உள்ளத்தால் அல்லாஹ்வை நினைவுகூர்தல், அவனுக்கு அஞ்சுதல், அவனிடம் பொறுப்புச் சாட்டுதல், அவனிடம் உதவி தேடுதல் போன்ற உள்ரங்கமான வணக்கங்களாக இருந்தாலும் சரி.