கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் இணைவைப்பு

அல்லாஹ்வின் இறைமையை விசுவாசிப்பதற்கு இணைவைப்பு முரண்படுகின்றது. இது பாவங்களில் மிகப் பெரியதாகும். இணைவைப்பின் அர்த்தம், விபரீதம், வகைகளை இப்பாடத்தில் கற்போம்.

  • இணைவைப்பின் அர்த்தத்தை அறிதல்
  • இணைவைப்பின் விபரீதத்தை அறிதல்
  • இணைவைப்பின் வகைகளை அறிதல்

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

இந்தப் பாடத்தின் மொழிபெயர்ப்பு பின்வரும் மொழிகளில் கிடைக்கிறது:

இணைவைப்பின் அர்த்தம்

அல்லாஹ்வுடைய பரிபாலனக் கோட்பாடு, இறைமை, பெயர், பண்புகளில் அவனுக்கு நிகராக இன்னொருவரை வைப்பதே இணைவைப்பாகும்.

இணைவைப்பிற்கு சில உதாரணங்கள்

١
பரிபாலனக் கோட்பாட்டில் இணைவைப்பு : அல்லாஹ் அல்லாத இப்பிரபஞ்சத்தை படைத்த ஒருவன் உள்ளான் என்றோ, அவனுடன் சேர்ந்து அவற்றை நிர்வகிப்பவன் ஒருவன் உண்டெனவோ எண்ணுதல்.
٢
இறைமையில் இணைவைப்பு : அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குதல், அல்லது அழைத்துப் பிரார்த்தித்தல்.
٣
அல்லாஹ்வின் பெயர், பண்புகளில் இணைவைப்பு : அல்லாஹ்வை அவனது படைப்பினங்களுடன் ஒப்பிடுதல்.

இணைவைப்பின் விபரீதம்

அல்லாஹ்வின் இறைமையை விசுவாசிப்பதற்கு இணைவைப்பு முரண்படுகின்றது. அல்லாஹ்வின் இறைமையை விசுவாசித்து, அவனுக்கு மாத்திரம் அனைத்து வணக்கங்களையும் செலுத்து பிரதான, மகத்தான கடமை என்றால் அதற்கு மாற்றமான இணைவைப்பு தான் அவனிடத்தில் மிகப் பெரிய பாவமாகும். அல்லாஹ் ஓர் அடியான் மரணிக்க முன் தவ்பாச் செய்யாமல் மன்னிக்காத ஒரேயொரு பாவம் இணைவைப்புத் தான். அவன் கூறுகின்றான் : "நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்.” (நிஸா : 48). அல்லாஹ்விடத்தில் மிகப் பெரிய பாவம் எதுவென நபியவர்களிடம் வினவப்பட்ட போது அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க நீ அவனுக்கு நிகர் ஏற்படுத்துவதாகும் என்றார்கள். (புஹாரி 4477, முஸ்லிம் 86).

இணைவைப்பு வணக்கங்களை சீர்குழைத்து, அவற்றை அழித்து விடும். அல்லாஹ் கூறுகின்றான் : "அவர்கள் இணைவைத்தால் அவர்கள் செய்த அனைத்து (நற்)செயல்களும் அவர்களை விட்டும் அழிந்து விடும்". (அன்ஆம் : 88).

இணைவைப்பு அதனுடையவனை நரகில் நிரந்தரமாக இருக்கச் செய்து விடும். அல்லாஹ் கூறுகின்றான் : "நிச்சயமாக யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் சுவனத்தைத் தடுத்துவிட்டான். அவன் ஒதுங்குமிடம் நரகமே". (மாஇதா : 72).

இணைவைப்பின் வகைகள்

١
பெரிய இணைவைப்பு
٢
சிறிய இணைவைப்பு

1. பெரிய இணைவைப்பு

ஒரு வணக்கத்தை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செய்வதே பெரிய இணைவைப்பாகும். எனவே அல்லாஹ் விரும்பக்கூடிய வணக்கங்களில் எந்தவொரு சொல், செயலாயினும் அவை அவனல்லாதோருக்கு நிறைவேற்றப்பட்டால் அது இணைவைப்பாகவும், இறை நிராகரிப்பாகவும் உள்ளது. உதாரணம் : ஒரு மனிதன் அல்லாஹ் அல்லாதவர்களிடம் தனது நோயைக் குணப்படுத்துமாறோ, வாழ்வாதாரத்தில் விஸ்தீரண் ஏற்படுத்துமாறோ பிரார்த்தித்தல், அவனல்லாதோரிடம் தனது விடயங்களைப் பொறுப்புச் சாட்டுதல், அவனல்லாதோருக்கு சிரம்பணிதல் போன்றனவாகும்.

١
அல்லாஹ் கூறுகின்றான் : "உங்கள் இறைவன் கூறுகிறான்: “என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்". (ஃகாபிர் : 60).
٢
அல்லாஹ் கூறுகின்றான் : " நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்". (மாஇதா : 23).
٣
அல்லாஹ் கூறுகின்றான் : " ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்யுங்கள், அவனையே வணங்குங்கள்.". (நஜ்ம் : 62).

இது போன்ற பிரார்த்தனைகள், செயல்கள் மூலம் அல்லாஹ் அல்லாதவர்களை முன்னோக்குதல் இணைவைப்பாகவும், இறை நிராகரிப்பாகவும் உள்ளது. ஏனெனில் நோய் நிவாரணி, வாழ்வாதாரம் அல்லாஹ்வின் பரிபாலனக் கோட்பாட்டுக்கு சொந்தமானதாகும். அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுவதும், அவனுக்கு சிரம் பணிதலும் இறைமையின் யதார்த்தங்களில் உள்ளதாகும்.

2. சிறிய இணைவைப்பு

பெரிய இணைவைப்பிற்கு இட்டுச் செல்லும் அனைத்து சொல், செயல்களும் சிறிய இணைவைப்பாகும்.

சிறிய இணைவைப்பிற்கு சில உதாரணங்கள்

١
இலகுவான முகஸ்துதி : மக்கள் பார்ப்பதற்காக தொழுகையை நீட்டித் தொழல், அல்லது மக்கள் கேட்பதற்காக அல்குர்ஆனை அல்லது ஏனைய திக்ருகளை சத்தமிட்டு ஓதுதல். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "உங்களிடம் நான் மிக அஞ்சுவது சிறிய இணைவைப்பாகும்". சிறிய இணைவைப்பென்றால் என்னஅல்லாஹ்வின் தூதரே? என (தோழர்கள்) கேட்டனர். அதற்கு நபியவர்கள் "முகஸ்துதி" என பதிலளித்தார்கள். (அஹ்மத் : 23630).
٢
ஓரிறைக் கொள்கையின் பூரணத்துவத்திற்கு முரண்படும் தடுக்கப்பட்ட சொற்கள் : உதாரணம் : "உனது வாழ்க்கையின் மீது சத்தியமாக", "நபியின் மீது சத்தியமாக" என அல்லாஹ் அல்லாதவர்களின் மீது சத்தியம் செய்வதைப் போன்றதாகும். நபி ஸல் அவர்கள் இதனை எச்சரித்து, பின்வருமாறு கூறினார்கள் : "அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்பவர் இணைவைத்து விட்டார், அல்லது நிராகரித்து விட்டார்". (திர்மிதி : 1335).

மக்களிடம் தேவைகளைக் கேட்பது இணைவைப்பா ?

மனித பகுத்தறிவை மூடநம்பிக்கை, மடமைகளை விட்டும் விடுவிக்கவும், அல்லாஹ் அல்லாதோருக்கு சிரம் பணிவதலை விட்டும் விடவிக்கவுமே இஸ்லாம் வந்தது. எனவே மரணித்தோரிடமோ, உயிரற்ற பொருட்களிடமோ கேட்பதோ, சிரம் பணிவதோ, அறவே கூடாது. அது இணைவைப்பாக அல்லது மூநம்பிக்கையாகி விடும். உயிருள்ள, தொடர்பு கொள்ள முடியுமான ஒருவரிடம் அவரது சக்திக்கு உட்பட்ட வகையில் உதவி கோருதல், நீரில் மூழ்காமல் காப்பாற்றுதல், அல்லாஹ்விடம் தனக்காகப் பிரார்த்திக்குமாறு வேண்டுதல் போன்ற தேவைகளைக் கேட்கலாம்.

மரணித்தோரிடமோ, உயிரற்ற பொருட்களிடமோ வேண்டுதல், தேவைகளைக் கேட்டல்

மரணித்தோரிடமோ, உயிரற்ற பொருட்களிடமோ வேண்டுதல், தேவைகளைக் கேட்டல் இஸ்லாத்திற்கும், ஈமானிற்கும் முரணான இணைவைப்பாகும். ஏனெனில் மரணித்தவரோ, உயிரற்ற பொருளோ வேண்டுதலை செவிமடுக்கவோ, அதற்கு பதிலளிக்கவோ முடியாது. பிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். அதனை அல்லாஹ் அல்லாதோருக்கு செலுத்துவது இணைவைப்பாகும். நபித்துவத்தின் போது அரேபியரின் இணைவைப்பும் மரணித்தவர்களையும், உயிரற்றவைகளையும் அழைப்பதாகத் தான் இருந்தது.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்