இரு ஷஹாதாக்கள்
லாஇலாஹ இல்லல்லாஹு (உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை) எனும் ஏகத்துவ வார்த்தைக்கு இஸ்லாம் பாரிய இடத்தை வைத்துள்ளது. இது தான் ஒரு முஸ்லிமின் முதல் கடமையாகும். இஸ்லாத்தில் நுழைய விரும்புபவர் அதனை உறுதியாக ஏற்று மொழிய வேண்டும். அல்லாஹ்வுக்காக முழுநம்பிக்கையுடன் இதனை மொழிந்தவரை அது நரகிலிருந்து காக்கும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "அல்லாஹ்வுக்காக லாஇலாஹ இல்லல்லாஹு எனும் கலிமாவை மொழிந்தவருக்கு அவன் நரகை ஹராமாக்கி விடுகின்றான்" (புஹாரி 415.)