கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என சாட்சி கூறுவதன் அர்த்தம்

அவர் கூறும் தகவல்களை உண்மைப்படுத்துதல், ஏவல்களை எடுத்து நடத்தல், விலக்கல்களைத் தவிர்ந்து கொள்ளல், அந்த தூதர் (ஸல் அவர்கள் எங்களுக்கு மார்க்கமாக கற்றுத் தந்த முறைப்டியே அல்லாஹ்வை வணங்குதல் என்பன பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளன .

  • முஹம்மத் (ஸல்) அவர்கள்அல்லாஹ்வின்தூதர்எனசாட்சிகூறுவதன்அர்த்தத்தைஅறிந்துகொள்ளுதல்

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என சாட்சி கூறுவதன் அர்த்தம்

அவர் கூறும் தகவல்களை உண்மைப்படுத்துதல், ஏவல்களை எடுத்து நடத்தல், விலக்கல்களைத் தவிர்ந்து கொள்ளல், அந்த தூதர் (ஸல அவர்கள் எங்களுக்கு மார்க்கமாக கற்றுத் தந்த முறைப்டியே அல்லாஹ்வை வணங்குதல் என்பன பின்வருவனவற்றை உள்ளடக்கியுளளன :

1. அனைத்து துறைகளிலும் நபி (ஸல்) அவர்கள் கூறியவற்றை உண்மைப்படுத்துதல். அதில் சில் :

١
மறைவான அறிவுடன் தொடர்பான விடயங்கள், மறுமை, சுவனமும் அதன் இன்பங்களும், நரகமும் அதன் துன்பங்களும்
٢
மறுமை நிகழ்வுகள், அதன் அடையாளங்கள், இறுதிக் காலங்களில் நடக்கவிருக்கும் நிகழ்வுகள்
٣
முன்சென்றோரின் செய்திகள், நபிமார்களுக்கும், அவர்களுடைய சமூகத்தினருக்கும் இடையில் நடைபெற்ற நிகழ்வுகள்.

2. அவருடைய ஏவல், விலக்கல்களுக்குக் கட்டுப்படுதல். அது பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றது :

١
நபி (ஸல்) அவர்கள் எமக்கு ஏவியவற்றை எடுத்து நடத்தல், அவர்கள் அல்லாஹ்வுடைய வஹியின் படிதான் பேசுவார்களே தவிர தன் மனோ இச்சைப்படி பேசமாட்டார்கள் என்பதில் உறுதியாக இருத்தல். அல்லாஹ் கூறுகின்றான் : "இத்தூதருக்குக் கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவராவார் . (அந்நிஸா : 80)
٢
தீய குணங்கள், தீய நடத்தைகள் போன்ற அன்னார் எமக்குத் தடுத்த விடயங்களைத் தவிர்ந்து கொள்ளுதல். சில வேளை அதன் காரணம் எமக்குப் புரியாவிட்டாலும் அல்லாஹ் நாடியுள்ள ஓர் உள்ளார்ந்த காரணத்திற்காகுவும் எமது நலவுக்காகவுமே அவற்றைத் தடுத்துள்ளார்கள் என்பதை உறுதியாக நம்பிக்கை கொள்ளுதல்.
٣
நபியவர்களின் ஏவல்களை எடுத்து நடப்பதாலும், விலக்கல்களைத் தவிர்ந்து கொள்வதாலும் ஈருலகிலும் எமக்கு நலவும், வெற்றியுமே கிடைக்கும் என்பதில் உறுதியாக இருத்தல். அல்லாஹ் கூறுகின்றான் : "நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்". (ஆல இம்ரான் : 132) .
٤
நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்வோர் கடுமையான வேதனைக்குத் தகுதியானவர்கள் என்பதை நம்பிக்கை கொள்ளல். அல்லாஹ் கூறுகின்றான் : "அவருடைய கட்டளைக்கு மாறுசெய்வோர் தமக்குத் துன்பம் ஏற்படுவதையோ, துன்புறுத்தும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக் கொள்ளவும்". (நூர் : 63).

3. நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த பிரகாரமே அல்லாஹ்வை நாம் வணங்குதல். இது பற்றி இங்கு வலியுறுத்தப்பட வேண்டிய பல விடயங்கள் உள்ளன :

அன்னாரைப் பின்பற்றுதல்

நபி ஸல் அவர்களுடைய சொல், செயல், அங்கீகாரம், உடன்பாடு உட்பட அன்னாரின் அனைத்து வழிமுறை, வழிகாட்டுதல், வாழ்க்கையும் தான் எமது வாழ்க்கையின் அனைத்து விடயங்களுக்கும் முன்மாதிரியாகும். நபியவர்களின் ஸுன்னா, வழிகாட்டுதல்களை ஓர் அடியான் பின்பற்றும் வீரியத்திற்கமையவே அவன் தனது இரட்சகனிடம் நெருங்கி, பல அந்தஸ்த்துக்களைப் பெறுகின்றான் . அல்லாஹ் கூறுகின்றான் : "நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! (ஆல இம்ரான் : 31).

இந்த ஷரீஅத் பூரணமானது

நபி ஸல் அவர்கள் இம்மார்க்கத்தை எத்திவைத்து விட்டார்கள். அதன் சட்டதிட்டங்கள் எவ்விதக் குறைவுமற்ற பூரணமானவை. நபியவர்கள் காட்டித்தராத எந்த வணக்கத்தையும் எமக்கு மார்க்கத்தின் பெயரால் உருவாக்க முடியாது.

அல்லாஹ்வின் இம்மார்க்கம் அனைத்து காலங்களுக்கும், இடங்களுக்கும் பொருந்தக்கூடியது.

அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் இடம்பெற்றுள்ள சட்ட திட்டங்கள் அனைத்து காலங்களுக்கும், இடங்களுக்கும் பொருந்தக்கூடியவை. மானிட நலவுகளை அவர்களை இல்லாமையிலிருந்து உண்டுபண்ணிய படைப்பாளனைத் தவிர யாரும் அதிகமாக அறிந்திட முடியாது.

நபிவழிக்கு நேர்படல்

அல்லாஹ்வுக்கென்ற உளத்தூய்மை, நபிவழி ஆகிய இரண்டும் வணக்கங்கள் ஏற்கப்பட இன்றியமையாததாகும். அல்லாஹ் கூறுகின்றான் : “தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணைகற்பிக்காது இருக்கட்டும்'' (கஹ்ஃப் : 110) இங்கு நல்லறம் என்பது நபிவழிக்கு நேர்பட்ட சரியான வணக்கமாகும்.

மார்க்கத்தில் நூதனங்கள் கூடாது

நபிவழியில் இல்லாத ஒரு செயலை, வணக்கத்தை உருவாக்கி, அதன் மூலம் அல்லாஹ்வை வணங்க விரும்புபவர் அன்னாரது ஏவலுக்கு முரண்பட்டவராவார். அச்செயலின் மூலம் பாவியாகின்றார். அவரது அச்செயல் தட்டப்பட்டுவிடும். உதாரணமாக மார்க்கத்திற்கு முரணான புது தொழுகையொன்றை உருவாக்குதலைக் குறிப்பிடலாம். அல்லாஹ் கூறுகின்றான் : "அவருடைய கட்டளைக்கு மாறுசெய்வோர் தமக்குத் துன்பம் ஏற்படுவதையோ, துன்புறுத்தும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக் கொள்ளவும்”. (நூர் : 63). நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "எமது இந்த மார்க்கத்தில் அதிலில்லாத ஒன்றை யார் புதிதாக உருவாக்கின்றாரோ அதவ தட்டப்பட்டு விடும்". (ஆதாரம் : புஹாரி 2550, முஸ்லிம் 1718).

அன்னாரை நேசித்தல்

அல்லாஹ்வும் அவனது தூரதரும் அனைத்தையும் விட ஒரு மனிதருக்கு நேசத்திற்குரியவர்களாக இருப்பதும் அன்னாரை விசுவாசிப்பதில் அடங்குகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான் உங்களில் ஒருவருக்கு தனது தந்தை, பிள்ளை அனைத்து மக்களையும் விட நேசத்திற்குரியவராகும் வரை புரிபூரணமான விசுவாசியாகிட முடியாது. (ஆதாரம் : புஹாரி 15, முஸ்லிம் 44.)

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்