கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் நபி (ஸல்) அவர்கள் பற்றி அறிதல்

மனிதர்களில் அனைத்து இன, வர்க்கத்தினருக்கும் அல்லாஹ் தனது நபி (ஸல்) அவர்களைத் தூதராக அனுப்பியுள்ளான். அவருக்குக் கட்டுப்படுவதை அனைவர் மீதும் கடமையாக்கியுள்ளான். அல்லாஹ் கூறுகின்றான் : ""மக்களே நான் உங்களனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக உள்ளேன்' என நபியே நீர் கூறுவீராக". (அஃராப் : 158)

  • நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வரலாற்றுச் சுருக்கத்தை அறிந்து கொள்ளல்
  • நபி (ஸல்) அவர்களின் மகத்துவத்தை அறிதல்

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

எமது நபி (ஸல்) அவர்களது பெயர்

இவர் குரைஷிக் கோத்திரத்தைச் சேர்ந்த முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் அப்துல் முத்தலிப் பின் ஹாஷிம் ஆவார்கள். அரேபியர்களில் மிக உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களே எமது நபி (ஸல்) அவர்கள்.

அனைத்து மக்களுக்குமான அல்லாஹ்வின் தூதர்

மனிதர்களில் அனைத்து இன, வர்க்கத்தினருக்கும் அல்லாஹ் எணது நபி (ஸல்) அவர்களைத் தூதராக அனுப்பியபள்ளான். அவருக்குக் கட்டுப்படுவதை அனைவர் மீதும் கடமையாக்கியுள்ளான். அல்லாஹ் கூறுகின்றான் : ""மக்களே நான் உங்களனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக உள்ளேன்' என நபியே நீர் கூறுவீராக". (அஃராப் : 158)

அவருக்கு அல்குர்ஆன் இறக்கப்பட்டது

இதற்கு முன்பும், இதற்குப் பின்பும் பொய் இதனிடத்தில் வராத மகத்தான தனது வேதமாகிய அல்குர்ஆனை அல்லாஹ் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இறக்கியுள்ளான்.

நபிமார்கள், இறைத்தூதர்களின் முத்திரை. (இறுதியானவர்) .

அனைத்து நபிமார்களுக்கும் முத்திரையாக அல்லாஹ் முஹம்மத் (ஸல்) அவர்களை அனுப்பியுள்ளான். எனவே அவருக்குப் பின் எந்த நபியும் வரமாட்டார். அல்லாஹ் கூறுகின்றான் : "எனினும் அவர் அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களின் முத்திரையாகவும் இருக்கின்றார்". (அஹ்ஸாப் : 40) .

1. அன்னாரின் பிறப்பு

கி. பி. 570ம் ஆண்டு மக்காவில் தந்தையை இழந்த அநாதையாக நபியவர்கள் பிறந்தார்கள். மேலும் சிறு பிராயத்திலேயே தாயையும் இழந்தார்கள். பின் தனது பாட்டன் அப்துல்முத்தலிபிடமும், அவருக்குப் பின் நபியவர்களை பாதுகாத்து வந்த பெரிய தந்தை அபூ தாலிபிடமும் வளந்தார்கள்.

2. வாழ்வும் வளர்ச்சியும்

நபித்துவத்திற்கு முன்னர் தனது கோத்திரமான குரைஷிகளுடனேயே 40 வருடங்கள் (கி. பி. 570-610) வாழ்ந்தார்கள். நற்குணம், பண்பாடு, உறுதியான நிலைப்பாடு போன்றவற்றில் உதாரணப்புருசராக இருந்தார்கள். அஸ்ஸாதிக் (உண்மையாளர்) அல்அமீன் (நம்பிக்கையாளர்) போன்ற சிறப்பு நாமங்கள் மூலமே அம்மக்களுக்கு மத்தியில் நபியவர்கள் பிரபலமடைந்திருந்தார்கள். ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு விட்டு பின்னர் வியாபாரம் செய்தார்கள். இஸ்லாம் வருவதற்கு முன்னரே நபியவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களின் தூய மார்க்கத்தின் அடிப்படையிலேயே அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தார்கள். சிலை வணக்கங்களை மறுத்துக் கொண்டிருந்தார்கள்.

3. நபித்துவம்

தனது 40 வயதைப் பூர்த்தி செய்து ஜபலுந்நூர் எனும் மலையிலுள்ள ஹிராக் குகையில் நபியவர்கள் இறைவழிபாடு செய்து கொண்டிருக்கும் போது அல்லாஹ்விடமிருந்து இறைச் செய்து வந்தது. அல்குர்ஆனும் இறங்க ஆரம்பித்தது. ஸூரா அல்அலக்கின் முதல் வசனமாகிய "யாவற்றையும் படைத்த உமது இரட்சகனின் பெயரால் நீர் ஓதுவீராக!" எனும் வசனமே அல்குர்ஆனில் முதலில் இறங்கியது. இந்த நபித்துவத்தின் மூலம் அதன் ஆரம்பத்திலிருந்தே அறிவு, வாசிப்பு, ஒளி, மக்களுக்கான நேர்வழி அனைத்திலும் புதியதொரு காலம் உருவாகின்றது என்பதைப் பறைசாற்றுவதாகவே இவ்வசனம் உள்ளது. பின்பு தொடர்ச்சியாக 23 வருடங்கள் அல்குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்தது.

4. அழைப்புப் பணியின் ஆரம்பம்

நபி (ஸல்) அவர்கள் மூன்று வருடங்கள் இரகசியமாக அழைப்புப் பணியை ஆரம்பித்து மேற்கொண்டு வந்தார்கள். பின்பு பத்து வருடங்கள் வெளிப்படையாக அழைப்புப் பணி செய்தார்கள். அச்சந்தர்ப்பத்தில் தனது குரைஷிக் கோத்திரத்தினரால் சொல்லெனாத் துன்பங்களுக்கும், அநீதிகளுக்கும் முகம் கொடுத்தார்கள். எனவே ஹஜ்ஜுக்கு வரும் பிற கோத்திரங்களுக்கு இஸ்லாத்தை முன்வைத்தார்கள். மதீனா மக்கள் அதனை ஏற்றார்கள். அத்துடன் முஸ்லிம்களின் மதீனாவிற்கான இடம்பெயர்வும் (ஹிஜ்ரத்) ஆரம்பமாகியது.

5. ஹிஜ்ரத் பயணம்

குரைஷிகளின் பெரும் புள்ளிகள் ஒன்று சேர்ந்து நபியவர்களைக் கொலை செய்ய திட்டம் தீட்டிய பின் அப்போது யஸ்ரிப் என அழைக்கப்பட்ட மதீனா நகருக்கு தனது 53வது வயதில் கி. பி. 622ம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்றார்கள். அங்கு 10 வருடங்கள் அழைப்புப் பணி செய்து தொழுகை, ஸகாத் மற்றும் இஸ்லாத்தின் இதர சட்டங்களையும் அமுல்படுத்தினார்கள்.

6. இஸ்லாத்தைப் பரப்புதல்

தனது ஹிஜ்ரத்திற்குப் பின் (கி. பி. 622- 632) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் இஸ்லாமிய நாகரிகத்திற்கு வித்திட்டார்கள். இஸ்லாமிய சமூகத்தின் தனித்துவ அடையாங்களை நிறுவினார்கள். குல வாதத்தை இல்லாதொழித்தார்கள். அறிவைப் பரப்பினார்கள். நீதி, நேர்மை, சகோதரத்துவம், ஒத்துழைப்பு, ஒழுங்கமைப்பு போன்ற அடிப்படைகளையும் நிறுவினார்கள். சில கோத்திரங்கள் இஸ்லாத்தை அழிக்க முயற்சித்த போது சில யுத்தங்களும் அசம்பாவிதங்களும் நிகழ்ந்தன. அப்போது அல்லாஹ் தனது மார்க்கத்திற்கும், தூதருக்கும் வெற்றியைக் கொடுத்தான். பின்பு மக்கள் தொடர்ச்சியாக இஸ்லாத்தில் நுழைந்தனர். மக்கா உட்பட அரேபியத் தீபகற்பத்திலுள்ள பல ஊர்களும் கோத்திரங்களும் இஸ்லாத்தை முழுமையாக ஏற்று, சுயமாகவே அதில் நுழைந்தனர்.

7. அன்னாரின் மரணம்

நபி (ஸல்) அவர்கள் தனது தூதுத்துவத்தை எத்திவைத்து, அமானிதத்தை முழுமையாக நிறைவேற்றி, அல்லாஹ்வும் மக்களுக்கு இம்மார்க்கத்தை பரிபூரணப் படுத்தியதன் மூலம் தனது அருட்கையை முழுமைப்படுத்திய பின் ஹிஜ்ரி 11ம் ஆண்டு ஸபர் மாதம் நபியவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். அந்நோய் கடுமையாகி தனது 63வது வயதில் ஹிஜ்ரி 11ம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதம் பன்னிரண்டாம் நாள் (கி. பி. 632/8/6) ஒரு திங்கட்கிழமை முற்பகல் வேளையில் வபாத்தானார்கள். மஸ்ஜிதுந் நபவிக்குப் பக்கத்தில் ஆஇஷா (ரலி) அவர்களின் வீட்டில் அன்னார் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்