கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் ஏகத்துவ சாட்சி

லாஇலாஹ இல்லல்லாஹு (உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை) எனும் ஏகத்துவ வார்த்தைக்கு இஸ்லாம் பாரிய இடத்தை வைத்துள்ளது. இது தான் ஒரு முஸ்லிமின் முதல் கடமையாகும். இஸ்லாத்தில் நுழைய விரும்புபவர் அதனை உறுதியாக ஏற்று மொழிய வேண்டும்.

  • லாஇலாஹ இல்லல்லாஹு (உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை) எனும் ஏகத்துவ சாட்சியத்தின் அர்த்தத்தை அறிந்து கொள்ளல்.
  • லாஇலாஹ இல்லல்லாஹு (உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை) எனும் ஏகத்துவ சாட்சியத்தின் மகத்துவத்தை அறிந்து கொள்ளல்.
  • லாஇலாஹ இல்லல்லாஹு (உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை) எனும் ஏகத்துவ சாட்சியத்தின் தூண்களை அறிந்து கொள்ளல்

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

லாஇலாஹ இல்லல்லாஹு (உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை) எனும் ஏகத்துவ வார்த்தைக்கு இஸ்லாம் பாரிய இடத்தை வைத்துள்ளது.

லாஇலாஹ இல்லல்லாஹ்வின் மகத்துவம்

١
இது தான் ஒரு முஸ்லிமின் முதல் கடமையாகும். இஸ்லாத்தில் நுழைய விரும்புபவர் அதனை உறுதியாக ஏற்று மொழிய வேண்டும்.
٢
அல்லாஹ்வுக்காக முழுநம்பிக்கையுடன் இதனை மொழிந்தவரை அது நரகிலிருந்து காக்கும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "அல்லாஹ்வுக்காக லாஇலாஹ இல்லல்லாஹு எனும் கலிமாவை மொழிந்தவருக்கு அவன் நரகை ஹராமாக்கி விடுகின்றான்" (புஹாரி 415.)
٣
இவ்வார்த்தையை விசுவாசித்தவராக மரணித்தவர் சுவனவாதியாவார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதை அறிந்தவராக மரணிப்பவர் சுவனம் நுழைவார். (அஹ்மத் : 464).

இதனால்தான் லாஇலாஹ இல்லல்லாஹ் எனும் வார்த்தை அறிவது அனைத்துக் கடமைகளிலும் மகத்தானதும், மிக முக்கியமானதுமாகும்.

லாஇலாஹ இல்லல்லாஹ்வின் அர்த்தம்

அதாவது உண்மையாக வணங்கப்படக்கூடியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. இது அல்லாஹ்வல்லாதவர்களிடமிருந்து இறைத்தன்மையை மறுத்து, எந்தவொரு இணையுமில்லாத அல்லாஹ்வுக்கு மாத்திரம் அவ் இறைத்தன்மையை உறுதிப்படுத்துவதாகும்.

இக்கலிமாவிலுள்ள இலாஹ் எனும் வார்த்தை உள்ளங்கள் கட்டுப்படக்கூடிய வணங்கப்படுபவன் என்ற அர்த்தத்தை உள்ளடக்குகின்றது. எனவே அவனை கண்ணியப்படுத்தி, அவனையே அழைத்து, அவனையே அஞ்சி, அவனிடமே ஆதரவும் வைக்க வேண்டும், அவனன்றி வேறொன்றுக்குக் கட்டுப்பட்டு, பணிந்து, நேசித்து ஆதரவும் வைத்தால் அப்பொருளை வணங்கப்படும் இறைவனாக எடுத்துக் கொண்டதாகி விடும் . ஒரேயொரு இறைவனைத் தவிர வணங்கப்படும் ஏனைய அனைத்தும் பொய்யானதாகும். அவன்தான் படைத்துப் பரிபாலிக்கும் உயர்ந்தவனாகிய அல்லாஹ்வாகும்.

அவன் மாத்திரமே வணக்கத்திற்குத் தகுதியானவன். வேறு யாருக்கும் அத்தகுதி அறவே கிடையாது. நேசம், கண்ணியப் படுத்தல், மகத்துவப்படுத்தல், பணிதல், தாழ்தல், அஞ்சுதல், பொறுப்புச் சாட்டுதல், பிரார்த்தித்தல் போன்ற அனைத்து வணக்கங்கள் மூலமும் உள்ளங்கள் அவனையே வணங்குகின்றன. எனவே அல்லாஹ்வின்றி யாரும் அழைக்கப்படலாகாது. அவனிடமே பாதுகாப்புத் தேடப்பட வேண்டும், அவனிடமே பொறுப்புச் சாட்டப்பட வேண்டும், அனுக்காகவே தொழுகை நிறைவேற்றப்பட வேண்டும், அவனிடம் நெருங்குவதற்காகவே அறுத்துப் பலியிடப்படல் வேண்டும். வணக்கங்களை முழுமையாக அவனுக்கு மாத்திரம் நிறைவேற்றுவது அவசியமாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "நேரிய வழிநின்று கலப்பற்றவர்களாக அவனுக்கே கட்டுப்பட்டு அல்லா்ஹ்வை வணங்குமாறே தவிர அவர்கள் ஏவப்படவில்லை". (அல்பய்யினா : 5)

லாஇலாஹ இல்லல்லாஹு எனும் வார்த்தையை சரியாக உண்மைப்படுத்தி, உளத்தூய்மையுடன் அல்லாஹ்வை வணங்குபவர் பாரிய ஈடேற்றத்தையும், மன அமைதியையும், மகிழ்ச்சியையும், நல்லதொரு வாழ்வையும் அடைந்து கொள்வார். வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதன் மூலமன்றி உள்ளத்திற்கு உண்மையான மன அமைதியோ, நிம்மதியோ கிடைக்க மாட்டாது.

லாஇலாஹ இல்லல்லாஹு எனும் கலிமாவின் தூண்கள்

١
முதலாவது தூண் : "லாஇலாஹ", இது வணக்கத்தை அல்லாஹ் அல்லோதோருக்கு மறுத்து, இணை வைப்பை அழித்து, மனிதன், பிராணி, சிலை, நட்சத்திரம் போன்ற அவனல்லாது வணங்கப்படக்கூடிய அனைத்தையும் நிராகரிப்பது அவசியம் என்பதைக் குறிக்கின்றது.
٢
இரண்டாவது தூண் : "இல்லல்லாஹ்", இது வணக்கத்தை அவனுக்கு மாத்திரம் தரிபடுத்தி, தொழுகை, பிரார்த்தனை, பொறுப்புச் சாட்டுதல் போன்ற அனைத்து வித வணக்கங்களையும் கொண்டு அவனை ஒருமைப்படுத்துவதைக் குறிக்கின்றது.

அனைத்து வித வணக்கங்களும் எவ்விதத் துணையுமற்ற அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரமே வழங்கப்பட வேண்டும். அவற்றில் ஏதாவதொன்றை அல்லாஹ் அல்லாதோருக்கு யாராவது செலுத்தினால் அவன் அல்லாஹ்வுக்கு இணைவைத்து விடுகின்றான். அல்லாஹ் கூறுகின்றான் : "அல்லாஹ்வுடன் வேறு கடவுளை யாரேனும் அழைத்தால் அவனிடம் அது குறித்து எந்தச் சான்றும் இல்லை. அவனை விசாரிப்பது அவனது இறைவனிடமே உள்ளது. (ஏகஇறைவனை) மறுப்போர் வெற்றி பெற மாட்டார்கள்". (முஃமினூன் : 117) .

அல்லாஹ் அல்லாது வணங்கப்படும் தாகூத்தை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். (பகரா : 256) எனும் வசனத்தில் லாஇலாஹ இல்லல்லாஹு எனும் வார்த்தையின் அர்த்தமும் தூண்களும் இடம்பெற்றுள்ளது. அல்லாஹ் அல்லாது வணங்கப்படும் தாகூத்தை மறுத்து எனும் வார்த்தை முதலாவது தூணாகிய பிற கடவுள்களை மறுப்பதைக் குறிக்கின்றது. அல்லாஹ்வை நம்புபவர் எனும் வார்த்தை அல்லாஹ் மாத்திரம் தான் உண்மையான கடவுள் என்ற இரண்டாம் தூணைக் குறிக்கின்றது.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்