கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் வணக்கத்தின் உண்மை நிலை

இஸ்லாத்தில் வணக்கத்திற்கு மகத்தான இடமுண்டு, அதன் அர்த்தம், உண்மைநிலை, தூண்கள், வணக்கங்கள் பல வகையில் இருப்பதற்கான காரணம் என்பன பற்றி இப்பாடம் ஆராயும்.

  • வணக்கத்தின் அர்த்தம், அதன் உண்மைநிலையை அறிதல்.
  • வணக்கத்தின் தூண்கள், வகைகளை அறிதல்.
  • வணக்கங்கள் பல வகையில் இருப்பதற்கான சில காரணங்களை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

இந்தப் பாடத்தின் மொழிபெயர்ப்பு பின்வரும் மொழிகளில் கிடைக்கிறது:

இபாதத் (வணக்கத்)தின் அர்த்தம்

அல்லாஹ் விரும்பி, பொருந்திக் கொள்ளும் உள்ரங்கமான, வெளிப்படையான சொல், செயல் அனைத்தும் வணக்கமாகும். எனவே அல்லாஹ் விரும்பும் சொல், செயல்கள் அனைத்தும் வணக்கமாகும்.

வணக்கத்தின் உண்மை நிலை

வணக்கம் என்பது நேசத்துடனும், கண்ணியத்துடனும், பணிவுடனும் பொதுவாக அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாகும். இது அல்லாஹ்வுக்கு மாத்திரம் அடியார்கள் செய்ய வேண்டிய கடமையாகும். அல்லாஹ் விரும்பி, பொருந்திக் கொண்டு, அவன் ஏவி, மக்களைத் தூண்டிய அனைத்தையும் வணக்கம் உள்ளடக்குகின்றது. இதில் தொழுகை, ஸகாத், ஹஜ் போன்ற வெளிப்படையான வணக்கங்களாக இருந்தாலும் சரி, அல்லது உள்ளத்தால் அல்லாஹ்வை நினைவுகூர்தல், அவனுக்கு அஞ்சுதல், அவனிடம் பொறுப்புச் சாட்டுதல், அவனிடம் உதவி தேடுதல் போன்ற உள்ரங்கமான வணக்கங்களாக இருந்தாலும் சரி.

பல விதமான வணக்க முறைகளை ஏற்படுத்தியிருப்பது அல்லாஹ் தனது அடியார்கள் மீது கொண்டுள்ள இரக்கத்திலுள்ளதாகும். அவற்றுள் சில :

١
உள்ளத்துடன் தொடர்பான வணக்கங்கள் : உதாரணம் : அல்லாஹ்வை நேசித்தல், அவனுக்கு அஞ்சுதல், அவனிடம் பொறுப்புச் சாட்டுதல், இவைதான் மகத்தான, மிகச் சிறந்த வணக்கங்களாகும்.
٢
உடல் ரீதியான வணக்கங்கள் : அவற்றில் அல்லாஹ்வை நினைவுகூர்தல், அல்குர்ஆன் ஓதுதல், நல்ல வார்த்தைகள் போன்ற நாவினால் மாத்திரம் செய்யும் வணக்கங்களும் உண்டு. வுழூ, தொழுகை, நோன்பு, பாதையிலிருந்து தீங்கிழைப்பவற்றை அகற்றுதல் போன்ற பிற உறுப்புக்களால் செய்யும் வணக்கங்களும் உண்டு.
٣
பண ரீதியான வணக்கங்கள் : உதாரணம் : ஸகாத், தர்மம், நல்வழிகளில் செலவு செய்தல்.
٤
ஹஜ், உம்ரா போன்ற மேற்கண்ட அனைத்தையும் உள்ளடக்கும் வணக்கங்களும் உள்ளன.

பலவிதமான வணக்க முறைகள் இருப்பதற்கான காரணம் :

மனிதன் உற்சாகத்துடன் சடைவின்றி வணக்கம் செய்வதற்காகவும், தனக்கு அதிக ஈடுபாடுள்ள வணக்களை விரும்பிச் செய்வதற்காகவுமே அல்லாஹ் பல விதமான வணக்க முறைகளை ஏற்படுத்தியுள்ளான்.

வணக்கங்கள் பல விதங்கள் போன்று மக்களும் தமது ஆற்றல், ஈடுபாடுகளில் பல வகையினராக உள்ளனர். ஒரு வணக்கத்தை விட மற்ற வணக்கத்தில் சிலருக்கு அதிக ஆர்வமும் உற்சாகமும் இருக்கும். சிலருக்கு மக்களுக்கு உபகாரம் செய்வதில் ஆர்வமிருக்கும், வேறு சிலருக்கு உபரியான நோன்பில் ஆர்வமிருக்கும். மற்றொருமொருவரோ அல்குர்ஆன் ஓதி, அதனை மனனமிடுவதுடன் அதிக தொடர்புள்ளவராக இருப்பார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : " (தம் உலக வாழ்வின் போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் 'ஜிஹாத்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் 'ரய்யான்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; தர்மம் செய்தவர்கள் 'ஸதகா' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்!' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ பக்ர் (ரலி) 'இறைத்தூதர் அவர்களே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் 'ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நம்புகிறேன்!'' என்றார்கள். (புஹாரி : 1897, 1027).

வணக்கம் வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது

ஒரு முஃமின் தனது செயற்கள் மூலம் அல்லாஹ்வை நெருங்குவதை நாடினால் அவனது அனைத்து நடவடிக்கைகளையும் வணக்கம் உள்ளடக்குகின்றது. இஸ்லாத்தில் தொழுகை, நோன்பு போன்ற அறியப்பட்ட சில பிரபலமான வணக்கங்களுடன் மாத்திரம் சுருங்கிக் கொண்டதல்ல வணக்கம். மாறாக நல்லெண்ணத்துடன், நன்நோக்கத்துடன் செய்யும் பயனுள்ள அனைத்தும் கூலி வழங்கப்படும் வணக்கமாகும். அல்லாஹ்வுக்கு வழிப்பட உடலில் வலிமை வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு முஸ்லிம் உண்டால், பருகினால், உறங்கினால் அதற்காகவும் அவன் கூலி வழங்கப்படுவான்.

ஒரு முஸ்லிம் தனது வாழ்க்கை முழுதையும் அல்லாஹ்வுக்காகவே வாழ்கின்றான். அல்லாஹ்வுக்கு வழிப்படுவதற்காக உண்ணுகின்றான். இந்த நோக்கத்தினால் அவனது இச்செயல் வணக்கமாகின்றது. பாவத்திலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள திருமணம் செய்கின்றான். எனவே அவனது திருமணம் வணக்கமாகின்றது. இதே நோக்கத்தின் மூலம் அவனது வியாபாரம், தொழில், சம்பாத்தியம் அனைத்தும் வணக்கமாகின்றன. அறிவைத் திறன்படக் கற்று, சான்றிதழும் பெற்று, ஆய்வு செய்து நவீன கண்டுபிடிப்புக்களைக் கண்டுபிடிக்கும் போது அதே நோக்கத்தின் மூலம் வணக்கமாகின்றது. ஒரு பெண் தனது கணவன், பிள்ளைகள், வீடு என்பவற்றைப் பராமரிப்பதும் வணக்கமாகும். இவ்வாறுதான் அவனது வாழ்க்கையில் பயனுள்ள அனைத்து செயற்பாடுகளும், பகுதிகளும் அவற்றுடன் நல்ல எண்ணமும், நன்நோக்கமும் இருந்தால் அவை வணக்கமாக மாறிவிடுகின்றன.

படைப்பினங்கள் சிருஷ்டக்கப்பட்டமைக்குக் காரணமே வணக்கம்தான்.

அல்லாஹ் கூறுகின்றான் : "இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. அவர்களிடமிருந்து எந்த பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன்". (ஸாரியாத் : 56- 58).

ஜின்களையும், மனிதர்களையும் படைத்திருப்பதன் நோக்கம் அவர்கள் அல்லாஹ்வை வணங்க வேண்டுமென்பதற்காக என அல்லாஹ் கூறியுள்ளான். அல்லாஹ்விற்கு அவர்களது வணக்கங்களில் எவ்விதத் தேவையுமில்லை. மாறாக அவர்கள்தான் அவனின் பால் தேவையுடையவர்கள் என்பதால் அவர்களுக்குத் தான் அவனை வணங்கும் தேவையுள்ளது.

மனிதன் அந்நோக்கத்தைப் புறக்கணித்து, தனது இருப்பின் இறை நோக்கத்தைப் பற்றி சிந்திக்காமல் உலக இன்பங்களில் மூழ்கினால் தனக்கென எவ்வித சிறப்புமின்றி பிரபஞ்சத்தின் ஏனைய படைப்புகளில் ஒன்றாக மாறிவிடுகின்றான். மறுமையில் விசாரணை இல்லாவிடினும் விலங்குகளும் மனிதனைப் போன்றே சாப்பிட்டு மகிழ்கின்றன. அல்லாஹ் கூறுகின்றான் : "நிராகரிப்பவர்களோ (இவ்வுலக சுகங்களை) அனுபவித்துக் கொண்டும், மிருகங்கள் தீனி தின்பதைப் போல் தின்று கொண்டும் இருக்கிறார்கள். (நரக) நெருப்பே இவர்கள் தங்குமிடமாக இருக்கும்". (முஹம்மத் : 12). எனவே நோக்கம், செயல்களில் இவர்கள் விலங்குகளுக்கு ஒப்பாகிவிட்டார்கள். என்றாலும் பகுத்தறிவில்லாத விலங்குகளுக்கு மாற்றமாக விளங்கி, கிரகிக்கக் கூடிய பகுத்தறிவு இவர்களுக்கு உண்டு என்பதால் தமது செயல்களுக்குரிய கூலிகளைப் பெற்றுக் கொள்வார்கள்.

இபாதத்தின் தூண்கள்

பிரதான மூன்று தூண்களின் அடிப்படையிலேயே இபாதத் அமைந்துள்ளது. அவை ஒவ்வொன்றும் அடுத்ததைப் பூரணப்படுத்தக் கூடியதாகும்.

இபாதத்தின் தூண்கள்

١
அல்லாஹ்வை நேசித்தல்
٢
அவனுக்கு அஞ்சி, பணிதல்
٣
அவனிடம் நல்லெண்ணம் வைத்து ஆதரவு வைத்தல்

எனவே அல்லாஹ் தனது அடியார்களுக்கு விதியாக்கியுள்ள வணக்கங்களில் பரிபூரணமான நேசமும், அவன் மீதான ஆதரவு, எதிர்பார்ப்பும் இருப்பதுடன், அவனுக்கு முழுமையாகப் பணிதலும், சரணடைதலும், அச்சமும் இருக்க வேண்டும்.

இதன்படி, உணவு, பணத்தை நேசிப்பதைப் போன்ற அச்சமோ, பணிவோ இல்லாத வெறும் நேசம் வணக்கமல்ல. அதேபோன்றுதான் வேட்டைப் பிராணி, அநியாயக்கார ஆட்சியானுக்கு அஞ்சுவதைப் போன்ற நேசம் இல்லாத அச்சமும் வணக்கமாக மாட்டாது. அச்சம், நேசம், ஆதரவு மூன்றும் ஒரு செயலில் சேர்ந்தால் அது வணக்கமாகி விடும். அவ்வாறான வணக்கம் அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்யப்படல் வேண்டும்.

ஒரு முஸ்லிம் தொழவும், நோன்பு நோற்கவும் தூண்டுதலாக அல்லாஹ்வின் நேசம், அவனது நற்கூலி மீதான எதிர்பார்ப்பு, தண்டனை மீதான அச்சம் இருந்தால் அவை வணக்கமாக ஆகிவிடும்.

நபிமார்களைப் புகழ்ந்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் : "நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாக இருந்தார்கள் - இன்னும், அவர்கள் நம்மை ஆசை கொண்டும், பயத்தோடும் பிரார்த்தித்தார்கள். மேலும், அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள்". (அன்பியாஃ : 90).

வணக்கத்தின் வகைகள்

١
தூய வணக்கம்
٢
நற்குணங்கள்

1. தூய வணக்கங்கள்

இது மட்டுப்படுத்தப்பட்ட ஒரே முறையில் மாத்திரம் நிறைவேற்றப்படுவதற்காக அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவியவை. அவை முழுமையாக வணக்கமாக மாத்திரமே இருக்கும். உதாரணம் : தொழுகை, நோன்பு, ஹஜ், துஆ. இவற்றை அல்லாஹ்வுக்கன்றி வேறு யாருக்கும் செலுத்த முடியாது.

2. நற்குணங்கள் :

இவை அல்லாஹ் ஏவி, மக்களுக்கு அவற்றைச் செய்யுமாறு தூண்டியவை. உதாரணம் : பெற்றோருக்கு உபகாரம் புரிதல், மக்களுக்கு நலவு செய்தல், அநீதியிழைக்கப்பட்டவனுக்கு உதவுதல் போன்ற அல்லாஹ் பொதுவாக ஏவி, அவற்றை விட்டால் பாவம் என்று கூறியுள்ள கௌரவமான பழக்க வழக்கங்கள், நற்குணங்கள் போன்றனவாகும். இவ்வகை வணக்கங்களில் நபி ஸல் அவர்களை அச்சொட்டாக, முழுமையாகப் பின்பற்றத் தேவையில்லை. அவர்களுக்கு மாறு செய்யாமலும், ஹராத்தை செய்யாமலும் இருந்தால் போதுமானதாகும்.

இச்செயல்களை நல்லெண்ணத்துடன், அல்லாஹ்வின் நெருக்கத்தை அடையும் நோக்கில் செய்தால் அதற்குரிய கூலியைப் பெற்றுக் கொள்வார். இச்செயல்கள் அல்லாஹ்வுக்காகவன்றி செய்யப்பட்டால் அதற்கான நன்மை கிடைக்க மாட்டாது, பாவமும் கிடைக்க மாட்டாது. உறக்கம், பணி, வியாபாரம், விளையாட்டு போன்றனவும் இதனுடன் சேரும். பயனுள்ள ஒவ்வொரு செயலும் அதன் மூலம் அல்லாஹ்வின் திருமுகம் நாடப்படும் பட்சத்தில் அதற்கான கூலி கிடைக்கும். அல்லாஹ் கூறுகின்றான் : "அழகிய செயல் செய்வோரின் (நற்) கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்". (கஹ்ப் : 30).

வணக்கம் செல்லுபடியாகவும், ஏற்கப்படவும் இரண்டு நிபந்தனைகள் உள்ளன :

١
எந்தவொரு இணையுமற்ற தனித்தவன் அல்லாஹ்வுக்காக மாத்திரம் உளத்தூய்மையுடன் செய்தல்.
٢
நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றுதல்.

அல்லாஹ் கூறுகின்றான் : “எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.” (கஹ்ப் : 110).

எனவே அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நாடுபவர் மேற்கூறப்பட்ட இரு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அல்லாஹ்வை வணங்க வேண்டும். “தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.” என்ற வார்த்தை அல்லாஹ்வுக்காக மாத்திரம் என்ற உளத்தூய்மையையும், “(ஸாலிஹான) நல்ல செயல்களை.” எனும் வார்த்தை முறையான வணக்கம் என்பதையும் குறிக்கின்றது. அல்குர்ஆன், ஸுன்னாவில் கூறப்பட்ட பிரகாரமின்றி எந்தவொரு செயலும் முறையானதாக ஆக மாட்டாது.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்