நபிகளாரின் ஸுன்னா
ஸுன்னா என்பது அல்லாஹ் தனது நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அறிவித்த வஹி(இறைச்செய்தி)யாகும். இதுவும் அல்குர்ஆனுடன் சேர்ந்து இஸ்லாமிய மார்க்கத்தின் பிரதான அடிப்படையாகவும், மூலாதாரமாகவும் உள்ளது. உண்மையான வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, மற்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார் ஆகிய இரு சாட்சியங்களும் எவ்வோறு ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றதோ அதேபோன்றுதான் அல்குர்ஆனும் ஸுன்னாவும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்ததாகும். ஸுன்னாவை ஏற்காதவன் குர்ஆனையும் ஏற்காதவனாவான்.