வணக்க வழிபாடுகள்
இப்பிரிவு வணக்கத்தை அடிப்படை மற்றும் அதனை ஒருங்கிணைத்து, வணக்கத்தையும் அதன் சட்ட திட்டங்களையும் அல்குர்ஆன், தூய ஸுன்னாவுடன் தொடர்புபடுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். மனிதனுக்குக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள வணக்கங்களின் சட்ட திட்டங்களை நபி (ஸல்) அவர்கள் மற்றும் தோழர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டது போன்று தெளிவாகவும், விளக்கமாகவும் இப்பிரிவு எடுத்துரைக்கின்றது.
துணைத் தலைப்புக்கள்
சுத்தம்
ஒரு தொழுகையாளி முடியுமானளவு அசுத்தம் மற்றும் தொடக்கிலிருந்து சுத்தமாகாமல் தொழுகை செல்லுபடியாக மாட்டாது என்பதாலும், அவ்வாறு சுத்தமாவதற்குப் பயன்படக்கூடியது தண்ணீர் அல்லது அதற்குப் பதில் மணல் என்பதாலும் மார்க்க சட்டக் கலை வல்லுனர்கள் தமது நூல்களை சுத்தம் பற்றிய பாடத்தைக் கொண்டே ஆரம்பிக்கின்றனர். ஏனெனில் இரு சாட்சியங்களுக்கு அடுத்ததாக ஏனைய கடமைகளை விட தொழுகை முற்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கான ஆயத்தங்கள் தொடர்பான சுத்தம் போன்ற பாடத்தை முற்படுத்துவதே பொருத்தமானதாகும். அதுதான் தொழுகையின் திறவுகோலாகும்.
தொழுகை
தொழுகை இம்மார்க்கத்தின் தூணாகும். வணக்கங்களில் முதலில் கற்க வேண்டியது இத்தொழுகையாகும். இது இரு சாட்சியங்களின் பின் இஸ்லாத்தின் இரண்டாவது தூணாகும். அதனை நிறைவேற்றாவதனின் இஸ்லாம் செல்லுபடியாகமாட்டாது.
ஸகாத்
இஸ்லாத்தின் அடிப்படைத் தூண்களில் மூன்றாவது ஸகாத் ஆகும். அதனைக் கொடுப்பவர், பெறுபவர் இருவரும் தூய்மையடைந்து, பரிசுத்தமாகவே அல்லாஹ் இதனை விதியாக்கியுள்ளான். இதன் வெளிப்படையில் பணம் குறைவதாக இருந்தாலும் அது அதிகமாக அபிவிருத்தியடைதல், அதிகமாக வளர்தல், அதனை வழங்குபவரின் உள்ளத்தில் ஈமான் அதிகரித்தல் போன்றன இதன் பயன்பாடுகளாகும்.
நோன்பு
பஜ்ர் உதயமானதிலிருந்து சூரியன் அஸ்தமிக்கும் வரை உண்ணல், பருகல் மற்றும் சில விடயங்களைத் தவிரந்து கொள்வதே நோன்பாகும். ரமழானில் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் நான்காவது தூணாகும்.
ஹஜ்
ஹஜ் வணக்கம் இஸ்லாத்தின் அடிப்படைத் தூண்களில் ஐந்தாவதாகும். பருவமடைந்த சக்தியுள்ள முஸ்லிமுக்கு வாழ்நாளில் ஒரு தடவை செய்வது கடமையாகும்.
மரணம் மற்றும் இறுதிச் சடங்கு
மரணம் என்பது இறுதி முடிவல்ல, மாறாக அது மனிதனுடைய மற்றுமொரு புதிய அத்தியாயம், மறுமையின் முழுமையான வாழ்வின் ஆரம்பம். மனிதன் பிறந்தது முதல் அவனது உரிமைகளில் கவனம் செலுத்திய இஸ்லாம் அவன் மரணித்த பின்னரும் அவனது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களை வலியுறுத்தி, அவனது குடும்பத்தினர், உறவினர்களின் நிலையிலும் கவனம் செலுத்தியுள்ளது.