சந்தர்ப்பங்கள்
இஸ்லாம் அனைத்து மனித நலவுகளையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான மார்க்கமாகும். மனிதன் எங்கிருந்தாலும், எந்நேரத்திலும் அவனுக்குரியை ஒரே பொதுத் தூது இஸ்லாமாகும். இது அனைத்தையும் உள்ளடக்கிய பொதுவான மார்க்கம் என்பது போன்று அனைத்து காலங்களுக்கும், இடங்களுக்கும் பொருத்தமான மார்க்கமாகவும் உள்ளது. ஒரு முஸ்லிமின் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் தேவைப்படும் பல தெரிவு செய்யப்பட்ட தலைப்புகளை இப்பிரிவு உள்ளடக்கியுள்ளது.
துணைத் தலைப்புக்கள்
குளிர்கால பருவ சட்ட திட்டங்கள்
இஸ்லாம் ஒரு முழுமையான மார்க்கமாகும். அது முழு வாழ்க்கையையும் அதன் படைப்பாளனுடன் இணைக்கப்பட்ட வாழ்க்கையாக, அதன் இலக்குகள் உயரியதாக, தலைப்புகளில் மதிநலம் மிக்கதாக வடிவமைக்கிறது, இதனால்தான் ஒரு முஃமினுக்கு ஒவ்வொரு நேரத்திலும் அந்த இலக்கின்பால் வழிநடத்தும் ஒரு வணக்க முறை இருந்து கொண்டே இருக்கின்றது. குளிர்காலம் என்பது சுத்தம், தொழுகை, ஆடை, மழை மற்றும் பல மார்க்க சட்டங்களுடன் தொடர்பான பல பாடங்களை உள்ளடக்கிய ஒரு பருவமாகும். இப்பாடத்தில் அதன் தில சட்ட திட்டங்களைக் கற்போம்.
பயண சட்டதிட்டங்கள்
இஸ்லாம் ஒரு வாழ்க்கைத் திட்டமாகும், அது பயணம், தங்கல், அமைதி, அசைவு, விளையாட்டு, உண்மை என மனிதனது அனைத்து நிலைகளுடனும் தொடர்புபட்டுள்ளது. பயணங்கள் இச்சமூக வாழ்கையின் ஓர் அங்கமாகும். இதில் நாம் கவனம் செலுத்தி செய்ய வேண்டுமென அல்லாஹ் விரும்பும் சில விடயங்களோ அல்லது தவிர்ந்து கொண்டு விட்டுவிட வேண்டுமென அவன் விரும்பும் சில விடயங்களோ இன்றியமையாததாக உள்ளன. இப்பாடத்தில் சில பயண சட்டதிட்டங்களை அறிவோம்.
பெருந்தொற்று மற்றும் நோய்கள்
பெருந்தொற்றால் ஏற்படும் சோதனை முஸ்லிம், காபிர் என்ற வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் ஏற்படக்கூடிய அல்லாஹ்வின் விதியாகும். இருப்பினும் இச்சோதனையில் முஸ்லிமுடைய நிலையும், ஏனையோரின் நிலையும் ஒன்றல்ல. ஏனெனில் முஸ்லிம் பொறுமையாக இருத்தல், வருமுன் காப்பதற்கான மார்க்க சட்டபூர்வமான காரணிகளை மேற்கொள்ளல், வந்த பின் அதலிருந்து ஆரோக்கியத்தை வேண்டுதல் போன்ற அல்லாஹ் ஏவிய விடயங்களை சோதனையின் போது கையாள்கின்றான்.