கல்வித் துறைகள்
மினஸ்ஸது தாஃவில் பல்வேறு கற்றல் பாதைகள் உள்ளன. மாணவர்களின் தேவைக்கேற்ப சட்ட அறிவை வளர்க்க உதவும் விதத்தில் ஒவ்வொரு பாடத்திலும் தளத்தின் வெவ்வேறு பிரிவுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடங்கள் உள்ளன.
ஒரு முஸ்லிம் இன்றியமையாது அறிய வேண்டியவை
பொதுவாக அனைத்து முஸ்லிம்களும் அறிந்து, செயல்படுத்த வேண்டிய சட்டங்களை இஸ்லாம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்கள் மிகவும் இலகுவானவைகள் ஆகும். ஏனெனில் இஸ்லாமிய ஷரீஅத்தின் அடிப்படை நல்லவற்றை கொண்டு வந்து, தீயவற்றை தடுப்பதாகும். இவற்றை உருவாக்கியவன் அல்லாஹ் என்பதன் மூலமும், இவற்றை தெளிவு படுத்தியவர்கள் மக்களில் மிகவும் அறிஞரான, சிறந்த மொழி வல்லுனரான, தனது சமூகத்திற்கு மிகவும் நலவு நாடக்கூடியவரான நபி (ஸல்) அவர்கள் தான் என்பதன் மூலமும் இந்த சட்டங்கள் தனித்துவம் பெறுகின்றன. இந்தப் பகுதியில் ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயமாக அறிந்து, செயல் படுத்த வேண்டிய இன்றியமையாத சட்ட திட்டங்களை உள்ளடக்கிய பாடத்தொகுப்பு உள்ளது.
நவ முஸ்லிம்
இஸ்லாத்தில் நுழைவதன் மூலம், ஒரு நபர் தனது வாழ்க்கையின் முந்தைய காலங்களை விட இந்த உலக வாழ்க்கையில் வித்தியாசமான பயணத்தைத் தொடங்குகிறார். தனது கொள்கையைத் திருத்தி, அதனைப் பாதுகாப்பதற்காகவும், அல்லாஹ் அவர் மீது கடமையாக்கியுள்ள கடமைகளை நிறைவேற்றவதற்காகவும், படிப்படியாக இஸ்லாம், ஈமீனின் தரங்களில் உயருவதற்காக இப்பயணத்தில் பல விடயங்களை, தகவல்களை அறிய வேண்டிய தேவைுயுள்ளது. அல்லாஹ்வின் உதவியால் இந்நோக்கத்தை நிறைவேற்றக் கூடியவற்றை இப்பகுதியில் நாம் ஒன்றினைத்துள்ளோம்.
நிதிப் பரிவர்த்தனைகள்
இஸ்லாமிய மார்க்கம் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய ஒரு மார்க்கமாகும். அது வணக்கம், பரிவர்த்தனை இரண்டிற்குமுரிய மார்க்கமாகும். தமது செயற்பாடுகள் அல்லாஹ் விரும்பி, பொருந்திக் கொள்ளக்கூடியதாக அமைய அவையனைத்திலும் இஸ்லாமிய சட்டத்தை அறியக்கூடிய வழிகாட்டுதலின்பால் அடியார்களுக்குத் தேவையுள்ளது. பரிவர்த்தனைகள், ஒப்பந்தங்களில் நுணுக்கமான விளக்கங்களை அல்குர்ஆன் பொதிந்துள்ளது. வியாபாரம் உள்ளிட்ட நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பில் அடியார்கள் அறியவேண்டிய விடயங்களை நபி (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். அவற்றில் சிலதை இப்பகுதியில் நாம் முன்வைப்போம்.
இஸ்லாமிய குடும்ப அமைப்பு
இஸ்லாம் குடும்ப அமைப்பிற்கு பாரிய முக்கியத்துவமும், முழுமையான கரிசனையும் வழங்கியுள்ளது. ஏனெனில் இந்த ஷரீஅத் இவ்வுலக, மறுமை நலன்களுக்காக அடியார்களை வழிநடத்துவதை அடிப்படையாகக் கொண்டதாகும். சமூகம் உருவெடுக்கும் அக்குடும்பம் சீராகாமல் சமூகம் சீராக மாட்டாது. இந்த ஷரீஅத் குடும்பத்தை கட்டியெழுப்ப மற்றும் பாதுகாக்க விரிவான சட்டங்கள், சிறந்த நெறிமுறைகள் மற்றும் துல்லியமான அமைப்புடன் வந்துள்ளது.அது குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரின் கடமையையும் அவரது உரிமைகளையும் தெளிவுபடுத்தியுள்ளது.
முஸ்லிம் பெண்
இஸ்லாமிய ஷரீஅத் பெண்ணை கண்ணியப்படுத்தியுள்ளது. அதற்கான சாட்சிகள் அல்குர்ஆனிலும், நபி வரலாற்றிலும் நிரம்பியுள்ளன. அவளுடயை தனித்துவங்கள், சிறப்பியல்புகளைக் கவனத்திற் கொள்ளக்கூடிய, உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய, இழிவுக்குள்ளாகுதல், விசமிகள், காமுகர்களுக்குப் பாலியாகுதல் என்பவற்றை விட்டு அவளைப் பாதுகாக்கக் கூடிய சட்டங்களை வகுத்திருப்பது இஸ்லாம் பெண்ணைக் கண்ணியப்படுத்தியதில் ஒரு பகுதியாகும்.,