கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் மக்கா நகரின் சிறப்புகள்

அரேபிய தீபகற்பத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மக்கா நகரிலேயே மஸ்ஜிதுல் ஹராம் அமைந்துள்ளது. இஸ்லாத்தில் இதற்கென பல சிறப்புகள் உள்ளன.

மக்கா நகர் மற்றும் மஸ்ஜிதுல் ஹராமின் சிறப்புகளை அறிதல். 

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

இந்தப் பாடத்தின் மொழிபெயர்ப்பு பின்வரும் மொழிகளில் கிடைக்கிறது:

வளமான இந்நகரிற்குப் பாரிய இடமும், பல சிறப்புக்களும் உள்ளன. அவற்றுள் சில :

1. இவ்வூர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மிக நேசத்திற்குரிய இடமாகும்.

அப்துல்லாஹ் பின் அத்ய் பின் ஹம்ரா (ரலி) கூறுகின்றார் : மக்காவிலுள்ள "ஹஸூரா" எனும் இடத்தில் தனது வாகனத்தில் இருந்த வண்ணம் நபியவர்கள் பின்வருமாறு கூறுவதைக் கண்டேன் : "அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அல்லாஹ்வின் புமியில் மிகச்சிறந்த இடம் நீ தான். அவனது பூமியில் அவனுக்கு மிக நேசத்திற்குரிய இடமும் நீ தான். உன்னை விட்டும் நான் வெளியேற்றப்பட்டிருக்கா விட்டால் நான் வெளியேறி இருக்க மாட்டேன்". (திர்மிதி 3925, இப்னுமாஜா 1037).

-2. அல்லாஹ் இதனைப் புனிதமாக்கியுள்ளான்.

மக்காவில் படைப்பினங்கள் இரத்தங்களை ஓட்டுவதோ, பிறருக்கு அநீதியிழைப்பதோ, வேட்டையாடுவதோ, அங்குள்ள மரங்கள், செடிகளை வெட்டுவதோ அனைத்தையும் அல்லாஹ் ஹராமாக்கியுள்ளான். அல்லாஹ் கூறுகின்றான் : “இந்த ஊரை எவன் கண்ணியப் படுத்தியுள்ளானோ அந்த இறைவனை வணங்குமாறு நான் கட்டளையிடப் பட்டுள்ளேன். எல்லாப் பொருட்களும் அவனுக்கே உரியன; அன்றியும் அவனுக்கே முற்றிலும் வழிபட்டவானக இருக்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன்” (என்று நபியே! நீர் கூறுவீராக). (நம்லு : 91).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “இந்த மக்கா நகரை மனிதர்களில் யாரும் புனித(நகர)மாக்கவில்லை. அல்லாஹ்தான் இதனைப் புனித நகரமாக்கினான். எனவே, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியிருக்கும் எந்த மனிதனும் இங்கே இரத்தத்தை ஓட்டுவதோ, இதன் மரம், செடி, கொடிகளை வெட்டுவதோ கூடாது”. (புஹாரி 104, முஸ்லிம் 1354).

3. இது மஸ்ஜிதுல் ஹராமைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தப் பள்ளிவாயிலுக்குப் பல சிறப்புக்கள் உள்ளன. அவற்றுள் சில :

1. அல்லாஹ்வை வணங்குவதற்காக பூமியில் நிர்மாணிக்கப்பட்ட முதல் மஸ்ஜித் இதுவாகும்.

அபூ தர் (ரலி) நபியவர்களிடம்: அல்லாஹ்வின் தூதரே பூமியில் நிர்மாணிக்கப்பட்ட முதல் ஆலயம் எது என வினவிய போது மஸ்ஜிதுல் ஹராம் என்றார்கள். பின்பு எது என வினவிய போது மஸ்ஜிதுல் அக்ஸா என்றார்கள். இரண்டிற்கும் மத்தியில் எவ்வளவு காலம் என வினவிய போது "நாற்பது ஆண்டுகள், பின், நீர் எங்கிருக்கும் போது தொழுகை நேரம் வருகிறதோ அங்கேயே தொழுது கொள்ளும். அதில் தான் சிறப்புண்டு" என்றார்கள். (புஹாரி 3186, முஸ்லிம் 520).

கஃபா என்பது மஸ்ஜிதுல் ஹராத்தின் முற்றத்திலுள்ள கிட்டதட்ட கன உரு அமைப்பிலான சதுர வடிவ கட்டிடமாகும். பூமியின் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள முஸ்லிம்கள் தங்கள் எல்லா தொழுகைகளிலும் முன்னோக்கும் கிப்லா இதுவாகும். அல்லாஹ்வின் கட்டளை பிரகாரம் நபி இப்ராஹீம் (அலை), மற்றும் அவரது புதல்வர் இஸ்மாஈல் (அலை) ஆகியோர் இதனைக் கட்டினர். பின்னர் பல தடவை இது புனர் நிர்மாணம் செய்யப்பட்டது. அல்லாஹ் கூறுகின்றான்: "இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, "எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" (என்று கூறினர்)". (பகரா : 127). மக்கா வாசிகள் இதனைப் புனரமைத்த போது ஹஜருல் அஸ்வத் எனும் கல்லை அதற்குரிய இடத்தில் நபியவர்கள்தான் வைக்க வேண்டுமென குரைஷியர் அனைவரும் பொருந்திக் கொண்டனர்.

2. இந்நகரில் தான் புனித கஃபா அமைந்துள்ளது.

3. அதில் தொழும் நன்மை பன்மடங்காக்கப்படல்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “என்னுடைய இந்த பள்ளியில்- மதீனவிலுள்ள பள்ளி- தொழுவது ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட ஆயிரம் மடங்கு சிறப்பானதாகும். மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர. மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட ஆயிரம் மடங்கு சிறப்பானதாகும்". (இப்னு மாஜா 1406, அஹ்மத் 14694).

4. சக்தியுள்ளவர்களுக்கு அல்லாஹ் தனது மாளிகையை ஹஜ் செய்யும் படி கடமையாக்கியுள்ளான் :

இப்ராஹீம் (அலை) அவர்கள் ஹஜ் செய்ய வருமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்கள், மக்களும் எல்லா இடங்களிலிருந்தும் கூட்டங்கூட்டமாக வரலானார்கள். நபிமார்களும் ஹஜ் செய்துள்ளதாக எமது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள், அல்லாஹ் கூறுகின்றான் : "ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்)". (ஹஜ் : 27).

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்