கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் திருமணப் பேச்சின் ஒழுங்குகள்

திருமணப் பேச்சின் அர்த்தம் , மற்றும் அதன் ஒழுங்குகள் பற்றி இப்பாடத்தில் கற்போம்.

  • திருமண பேச்சின் அர்த்தத்தை அறிதல்.
  • இஸ்லாத்தில் திருமண பேச்சின் ஒழுங்குகளை விளக்குதல்.
  • திருமண பேச்சு தொடர்பான இஸ்லாமிய சிறப்பம்சங்கள் சிலதைக் கண்டறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

இது அல்லாஹ் மற்றும், அவனது தூதர் காட்டிய வழிமுறைப்படி திருமண நோக்கத்திற்காக ஒரு பெண்ணின் குடும்பத்தாரிடம் நிச்சயிக்க ஓர் ஆண்டவனால் நடத்தப்படும் பேச்சுவார்த்தையாகும்.

திருமணப் பேச்சு வார்த்தைக்கு சில ஒழுக்கங்களை வைத்திருப்பது அல்லாஹ்வின் அருட்கொடைகளில் உள்ளதாகும். இவற்றின் மூலம் மனநிறைவு, சிறந்த தேர்வு மற்றும் அமைதியை அடையலாம், மேலும் தம்பதிகள் ஒவ்வொருவரும் நல்லிணக்கத்தையும் உடன்பாட்டையும் அடைய உதவும்.

திருமணப் பேச்சுவார்த்தையின் ஒழுக்கங்கள்

1. மற்றொரு முஸ்லிமுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை அவருக்கு எதிராகப் பேசக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிட வேண்டாம்! ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரர் பெண் பேசிக் கொண்டிருக்கும்போது, இடையில் குறுக்கிட்டுப் பெண் பேச வேண்டாம்". (புஹாரி 5142, முஸ்லிம் 1412).

2. நிச்சயிக்கப்படும் பெண்ணை திருமணம் செய்யத் தேவையேற்படும் அளவு மார்க்க வரையறைகளுடன் பார்ப்பதும் இதன் ஒழுங்குகளில் ஒன்றாகும். முஃகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய விரும்பிய போது நபியவர்கள் “முதலில் நீர் அவளைப் பாரும், அதுதான் உங்களிருவரது அன்பும் நிலைக்க மிகப் பொருத்தமாகும்” என்றார்கள். (திர்மிதி 1087.) அதாவது உங்களிருவருக்கும் இடையில் இரக்கம் உடன்பாடு உருவாகும் என்பதே இங்கு நாடப்படுகின்றது. நிச்சயிக்க வந்திருப்பவரைப் பார்ப்பது பெண்ணிற்கும் உள்ள உரிமையாகும். ஏன், அவள் தான் அதற்கு மிகத் தகுதியானவள் என்றும் சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

''உங்களில் எவரேனும் (திருமணத்திற்காக) பெண் பேசினால் அவளை மணம் புரிந்து கொள்ளத் தூண்டும் அம்சம் எதையேனும் அவளிடமிருந்து அவரால் பார்க்க முடிந்தால், அவ்வாறே பார்த்துக் கொள்ளட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். இந்நபித்தோழர் கூறுகின்றார் : நான் ஒரு பெண்ணைத் திருமணம் பேசினேன், அப்போது அவளை மணம் புரிந்து கொள்ளத் தூண்டும் அம்சம் எதையேனும் அவளிடமிருந்து காண்பதற்காக நான் மறைந்திருந்து நோட்டமிட்டேன், அதன் பின் அவளை மணந்து கொண்டேன். (அபூதாவூத் 2082.)

நிச்சயிக்கும் பெண்ணைப் பார்க்கும் ஒழுக்கங்களில் மேலும் சில :

١
அவளைத் தான் திருமணம் செய்வேன் என உறுதியெடுத்த பின்னரே நிச்சயிக்கப்படும் பெண்ணைப் பார்க்க வேண்டும்.
٢
விருப்பமில்லாத போது நிச்சயதார்த்தைக் கைவிடும் போது பெண்ணிற்குப் பாதிப்பு ஏற்படாமலிருக்க நிச்சயிக்க முன்னாலையே அவளைப் பார்க்க வேண்டும்.
٣
நிச்சயிப்பவர் திருப்தி அடையும் வரை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளும் பார்க்கலாம்.
٤
நிச்சயிப்பவரின் திருப்தி அடையும் அளவு பார்த்து விட்டால் மீண்டும் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இன்னும் அவள் அந்நிய பெண்ணாகவே உள்ளாள்.

3. ஆண், பெண் இருவருவரினதும் அழகிய தெரிவு திருமணப் பேச்சு வார்த்தையின் முக்கிய ஒழுக்கங்களில் உள்ளதாகும். எனவே அல்லாஹ்வின் உதவியினால் அமைதி, ஸ்திரம், நிம்மதி நிலவக்கூடிய ஒரு வீட்டைக் கட்டியெழுப்பும் முறையான அடிப்படைகளை இருவரும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

4. நல்ல சந்ததியை விருத்தி செய்யும் பொருட்டு அதிகம் குழந்தை பெற வாய்ப்புள்ள பெண்ணைத் தெரிவுசெய்வதில் ஆர்வம் கொள்வதும் இதன் ஒழுக்கங்களில் உள்ளதாகும். நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு உபதேசித்தார்கள் : "அதிகம் குழந்தை பெறும், அதிக இரக்கமுள்ள பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள் .(ஏனெனில்) நிச்சயமாக மறுமை நாளில் நீங்கள் அதிக எண்ணிக்கையிலிருப்பதை காண்பேன்". (அபூதாவூத் 2050).

5. திருமணப் பேச்சு வார்த்தைக்கு முன் ஆலோசனை கேட்பதும், அல்லாஹ்விடம் நலவைக் கேட்டுப் பிரார்த்திப்பதும் இதன் ஒழுக்கங்களில் உள்ளதாகும். எனவே ஒரு முஸ்லிம் தனது இரட்சகனிடம் நலவைக் கேட்பதுடன், அனைத்திலும் அனுபவமுள்ளோரிடம் ஆலோசனை கேட்க வேண்டும். திருமண முடிவு என்பது வாழ்க்கையின் முக்கிய ஒரு முடிவாகும். நலவைக் கேட்பது, ஆலோசனை பெறுவதற்கு இது மிகப் பொருத்தமான ஒரு சந்தர்ப்பமாகும்.

6. இரு தரப்பினரும் தத்தமது விடயங்கள், சூழ்நிலைகளைத் தெளிவுபடுத்துவதில் உச்சகட்ட தெளிவுடனும், உண்மையுடனும் இருத்தல் வேண்டும். எதிர்காலத்தில், திருமணபந்தத்தின் பின் கணவன், மனைவி தொடர்பில் தாக்கம் செலுத்தும் வகையில் குறைகளை மறைப்பது, பொய்யுரைப்பது, மோசடி செய்வது போன்றன அறவே கூடாது.

7. திருமணப் பேச்சுவார்த்தையின் மற்றுமொரு ஒழுக்கம் நிச்சயிக்கும் பெண்ணுடன் கதைப்பது, தொடர்பு கொள்வது சம்பந்தமான மார்க்க சட்டங்களைப் பேண வேண்டும். இது வெறும் திருமண வாக்குறுதியே தவிர ஒப்பந்தமல்ல. அவளைத் தொடுவது, அவளுடன் வெளியே செல்வது, தனித்திருப்பது, அவனுடன் குலைந்து பேசுவது, நறுமணமிட்டுக் கொள்வது, அவனுக்காகத் தன்னை அலங்கரித்துக் கொள்வது போன்றன அனைத்தும் கூடாது.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்