கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் உறவைப் பேணுதல்

இஸ்லாத்தில் உறவைப் பேணுதல் என்பதன் அர்த்தம், அது தொடர்பான சில விடயங்களை இப்பாடத்தில் கற்போம்.

  • இஸ்லாத்தில் உறவைப் பேணுதல் என்பதன் அர்த்தத்தை அறிதல்.
  • உறவைப் பேணுவதன் முக்கியத்துவத்தை விளக்குதல், அதனைத் துண்டிப்பதை எச்சரித்தல்.
  • உறவைப் பேணும் வழிகள் சிலதை விளக்குதல்.
  • உறவைப் பேணுவதன் சிறப்புக்களை விளக்குதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

உறவைப் பேணுதல் எனபதன் அர்த்தம்

இது நல்ல விடயங்களில் உறவுகளையும் பங்கெடுக்கச் செய்தல், அவர்களுக்கு உபகாரம் செய்து, பரிவு காட்டி, அவர்களுடன் நலினமாக நடத்தல், அவர்களை சந்தித்தல், அவர்களது நிலைகளைக் கவனித்துச் செயல்படுவதையும், அவர்களில் தேவையுடையவர்களுக்குச் செலவு செய்வதையும் குறிக்கின்றது.

பொதுவாக உறவைப் பேணுவது கடமை, அதனை முறிப்பது ஹராம் என்பதை அறிவிக்கும் அல்குர்ஆன் வசனங்கள், நபிமொழிகள் பல இடம்பெற்றுள்ளன. அல்லாஹ் கூறுகின்றான் : "இ(த் தீய)வர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள்; இவர்களே தாம் நஷ்டவாளிகள்". (பகரா : 27). மேலும் கூறுகின்றான் : "(போருக்கு வராது) நீங்கள் பின் வாங்குவீர்களாயின், நீங்கள் பூமியில் குழப்பம் உண்டாக்கி உங்கள் சுற்றத்தாரை (அவர்களுடன் கலந்து உறவாடுவதிலிருந்தும்) துண்டித்து விடவும் முனைவீர்களோ?". (முஹம்மத் : 22).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்பவர் தனது உறவைப் பேணட்டும்". (புஹாரி 6138). மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "அல்லாஹ் படைப்பினங்களை படைத்து முடித்தபோது உறவானது (எழுந்து இறைவனின் அரியாசனத்தின் கால்களைப் பற்றிக்கொண்டு) 'உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்'' என்று கூறி(மன்றாடி)யது. அல்லாஹ், 'ஆம். உன்னை (உறவை)ப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்துவிடுபவனை நானும் துண்டித்துவிடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?' என்று கேட்டான். அதற்கு உறவு, 'ஆம் (திருப்தியே) என் இறைவா!'' என்று கூறியது. அல்லாஹ், 'இது உனக்காக நடக்கும்'' என்று சொன்னான். நபி (ஸல்) அவர்கள் , 'நீங்கள் விரும்பினால் '(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டித்துவிடவும் முனைகிறீர்களா?' எனும் (முஹம்மத் :22 வது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்". (புஹாரி 5987).

உறவினர்களின் நெருக்கத்திற்கேற்ப அவர்களுடன் சேர்ந்து நடக்குமாறு இஸ்லாம் பணித்துள்ளது.

பேணுவது கடமையான உறவுகள்

இவர்கள் திருமணம் செய்யத் தடுக்கப்பட்ட (மஹ்ரமிய்யத்தான) இரத்த உறவுகளாகும். உதாரணம் தாய், தந்தை, சகோதர, சகோதரிகள், தாயின் உடன்பிறப்புக்கள் (மாமா மற்றும் சின்னம்மா, பெரியம்மாக்கள்), தந்தையின் உடன்பிறப்புக்கள் (மாமி மற்றும் சிற்றப்பா, பெரியப்பாக்கள்) போன்றோராகும்.

பேணுவது விரும்பத்தக்க உறவுகள்.

மஹ்ரமிய்யத் அல்லாத அனைத்து உறவுகளும் இதில் அடங்குவர். மாமா, மாமி, சின்னம்மா, பெரியம்மா, சிற்றப்பா, பெரியப்பா போன்றோரின் பிள்ளைகளை உதாரணமாகக் கூறலாம்.

உறவைப் பேணும் முறை

முடியுமானளவு நலவு செய்தல், இயன்றளவு கெடுதியைத் தடுத்தல் மூலம் உறவைப் பேணுவது உருவாகும். ஸலாம் கூறுதல், உரையாடுதல், தேவையின் போது நிதியுதவி செய்தல், கெடுதிகளைத் தடுத்தல், புன்முறுவல் பூத்தல், பிரார்த்தித்தல் போன்ற விடயங்கள் மூலம் உறவைப் பேணலாம்.

உறவைப் பேணும் முறைகள் சில

١
தொலைபேசி, குறுந்தகவல்கள் அல்லது இணைய பயன்பாடுகள் வழியாக தொடர்பு கொள்தல்.
٢
செலவினங்கள் வழங்குதல், தனது செலவனத்துக்குக் கீழில்லாதோருக்கு ஸகாதிலிருந்து வழங்குதல், அல்லது தர்மம் செய்தல், பரிசளித்தல், செலவினங்களைப் பொறுப்பேற்றல், மரணசாசனம் எழுதி வைத்தல்.
٣
மகிழ்ச்சியில் பங்கேற்று, துக்கங்களில் அனுதாபம் தெரிவித்தல்.
٤
சந்திப்பு.
٥
அழைப்புகளுக்கு பதிலளித்தல்.
٦
நோயுற்றால் நலம் விசாரித்தல்.
٧
மரணித்தால் ஜனாஸாவைப் பின்தொடர்தல்.
٨
பிணக்குகளின் போது இணக்கப்படுத்துதல்.

உறவுகளைப் பேணுவதன் சிறப்பு

١
உறவினர்களின் அன்பு கிடைக்கவும், அவர்களுக்கிடையே குடும்ப உறவுகள் வலுப்பெறவும் இது ஒரு காரணமாகும்.
٢
இது வாழ்வாதாரத்தை விஸ்தரித்து, வாழ்நாளை அதிகப்படுத்தும்.
٣
தனது உறவைப் பேணுபவனுடன் அல்லாஹ் சேர்ந்து நடக்கின்றான்.
٤
உறவைப் பேணுவது சுவனம் நுழைவதற்கான ஒரு காரணமாகும்.
٥
உறவைப் பேணுவதில் அல்லாஹ்வுக்கு வழிப்படுதல், அவனது திருப்தியை அடைதல் உள்ளன.

1. உறவினர்களின் அன்பும் கிடைக்கவும், அவர்களுக்கிடையே குடும்ப உறவுகள் வலுப்பெறவும் இது ஒரு காரணமாகும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "உமது உறவுகளைப் பேணுமளவிற்கு உமது குடும்பங்களை அறிந்து வைத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் உறவைப் பேணுவது குடும்பத்தில் அன்பு கிடைக்கவும், செல்வங்கள் அதிகரிக்கவும், வாழ்நாள் அதிகரிக்கவும் காரணமாகும்". (திர்மிதி 1979).

2. இது வாழ்வாதாரத்தை விஸ்தரித்து, வாழ்நாளை அதிகப்படுத்தும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும்". (புஹாரி 2067, முஸ்லிம் 2557).

3. தனது உறவைப் பேணுபவனுடன் அல்லாஹ் சேர்ந்து நடக்கின்றான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "அல்லாஹ் படைப்பினங்களை படைத்து முடித்தபோது உறவானது (எழுந்து இறைவனின் அரியாசனத்தின் கால்களைப் பற்றிக்கொண்டு) 'உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்'' என்று கூறி(மன்றாடி)யது. அல்லாஹ், 'ஆம். உன்னை (உறவை)ப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்துவிடுபவனை நானும் துண்டித்துவிடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?' என்று கேட்டான். அதற்கு உறவு, 'ஆம் (திருப்தியே) என் இறைவா!'' என்று கூறியது. அல்லாஹ், 'இது உனக்காக நடக்கும்'' என்று சொன்னான்". (புஹாரி 5987, முஸ்லிம் 2554).

4. உறவைப் பேணுவது சுவனம் நுழைவதற்கான ஒரு காரணமாகும்.

"நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து. 'என்னைச் சுவர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குக் கூறுங்கள்' எனக் கேட்டார். 'நீர் அல்லாஹ்வை வணங்கவேண்டும்: அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது: தொழுகையை நிலை நாட்ட வேண்டும்: ஸகாத் வழங்க வேண்டும்: உறவைப் பேண வேண்டும்'' என்று கூறினார்கள்". (புஹாரி 1396, முஸ்லிம் 13).

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்