கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் திருமண ஒழுங்குமுறைகள்

திருமணத்தின் ஒழுங்குமுறைகள், மற்றும் அது தொடர்பான விடயங்களை இப்பாடத்தில் கற்போம்.

  • திருமண ஒழுக்கங்களைக் கடைபிடிப்பதன் அவசியத்தை மணமக்களுக்கு விளக்குதல்.
  • இஸ்லாம் காட்டிய முக்கியமான திருமண ஒழுங்குகளை அறிவித்தல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

திருமண ஒப்பந்தத்திற்கு முன்னரும், இடையிலும், பின்னரும் என அதனுடன் தொடர்பான மார்க்க சட்ட திட்டங்களுக்கு மேலதிகமாக அல்லாஹ்விடமிருந்து நன்மையைப் பெற்றுக் கொள்ளவும், மேலும் தாம்பத்திய வாழ்வின் வலிமை மற்றும் பலம் நீடித்து நிலைக்கும் எதிர்பார்ப்புடனும் மணமக்கள் கடைபிடித்து ஒழுக வேண்டிய பல ஒழுக்கங்களையும் இஸ்லாம் திருமணத்துடன் இணைத்துள்ளது.

1. திருமணத்தில் நிய்யத் (எண்ணம்)

நிய்யத்திற்கு இஸ்லாத்தில் பாரிய இடமுண்டு, "செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே, ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ண்யதே கிடைக்கும்". (புஹாரி 1, முஸ்லிம் 1907) எனும் நபிமொழிய இதனைப் பறைசாட்டுகினறது. எனவே திருமணத்தில் நல்ல எண்ணத்தை வைப்பது தம்பதியினருக்கு அவசியமாகும். நன்மை கூலிகளை பெற்றுக் கொள்வதற்காக அடிக்கடி நிய்யத்தை அதிகப்படுத்துவது மார்க்க விளக்கத்தின் அறிகுறியாகும். அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஒன்றை வெளிப்படுத்துதல், திருமணத்தில் ஊக்குவிக்கப்பட்ட அல்லாஹ்வின் சட்டங்களுக்குக் கட்டுப்படுதல், அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி ஒருமைப்படுத்த கூடிய ஒரு சந்ததி அவ்விருவரிலிருந்தும் உருவாக வேண்டும் என்று எதிர்பார்த்தல், தம்பதியினர் ஒவ்வொருவரும் கற்பொழுக்கம் பேணி குழப்பங்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுதல் போன்றன திருமணத்தில் நாடப்படும் நல்ல நிய்யத்துகளில் உள்ளவைகளாகும்.

2. முதலிரவில் (திருமணம் நடைபெறும் இரவு) நபிவழியைப் பின்பற்றுதல்,

١
உடலுறவின் போது மனைவியுடன் நளினமாக, மென்மையாக நடந்து கொள்ளல்.
٢
மனைவியின் முன்நெற்றி முடியில் கணவன் தனது கையை வைத்து நபி (ஸல்) அவர்கள் கூறிய பின்வரும் துஆவை ஓத வேண்டும் : "அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃகரிஹா வஃகைரி மா ஜுபிலத் அலைஹி, வஅதூ பிக மின் ஷர்ரிஹா வஷர்ரி மா ஜுபிலத் அலைஹி". (இப்னு மாஜா 1918).
٣
நபித்தோழர்களின் சிலர் வழிகாட்டியதன் படி முதலிரவன்று தனது மனைவியுடன் சேர்ந்து இரு ரக்அத்கள் ஸுன்னத் தொழுகை தொழுதல்,
٤
உடலுறவுக்கு முன் கணவர் "பிஸ்மில்லாஹ், அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான், வஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸக்தனா" (புஹாரி 3271, முஸ்லிம் 1434) எனும் துஆவை ஓதிக்கொள்ளல். மனைவியும் அதனை ஓதலாம்.
٥
மனைவியின் பின்துவாரத்தில் அல்லது அவளது மாதவிடாய் காலத்தினுள் உடலுறவில் ஈடுபடல் போன்ற அல்லாஹ் தடுத்துள்ளவற்றை இதன்போது தவிர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
٦
"உங்களில் ஒருவர் தனது மனைவியுடன் சேர்ந்து, மீண்டும் சேர விரும்பினால் அவர் வுழூச் செய்து கொள்ளட்டும்" (முஸ்லிம் 308) என்ற நபி மொழிக்கு அமைய ஒருவர் தனது மனைவியுடன் உறவு கொண்டு, மீண்டும் சேர விரும்பினால் வுழூச் செய்து கொள்வது ஸுன்னத்தாகும்.
٧
தமக்கிடையே நடைபெற்ற உடலுறவு இரகசியங்களை பிறரிடம் கூறலாகாது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "கணவன் மனைவி உறவு கொண்டது பின் அவளுடைய ரகசியத்தை வெளியில் சொல்பவனே மறுமை நாளில் அல்லாஹ்விடம் மனிதர்களின் மிகவும் கெட்டவனாகும்" (முஸ்லிம் 1437).

3. திருமண விருந்து (வலீமா) கொடுத்தல்

வலீமா விருந்து வலியுறுத்தப்பட்ட ஸுன்னாவாகும். அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்கு "ஓர் ஆட்டை அறுத்தேனும் நீர் வலீமாக் கொடுங்கள்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி 6082, முஸ்லிம் 1427).

வலீமாவின் போதுகவனத்திற் கொள்ள வேண்டிய சில விடயங்கள் :

١
செல்வந்தர்களை அழைப்பதுடன் மாத்திரம் சுருக்கிக் கொள்ளாமல் இருத்தல். நபி (ஸல்) கூறினார்கள் : "வறியவர்கள் புறக்கணிக்கப்பட்டு, செல்வந்தர்கள் மாத்திரம் அழைக்கப்படும் வலீமா விருந்துதான் விருந்துகளில் மிகவும் மோசமானதாகும். (புஹாரி 5177, முஸ்லிம் 1432).
٢
வசதிக்கேற்றவாறு ஓர் ஆட்டை அறுத்தோ அல்லது அதற்கு மேலதிகமாக வீண்விரயமோ, உதாசீனமோ இன்றி வலீமா அமைய வேண்டும்.
٣
இறைச்சி இன்றி வேறு உணவுப் பொருட்கள் மூலமும் வலீமா கொடுக்கலாம்.

4. திருமண விழாவில் பெண்கள் பாடுதல்

திருமண விழாக்களில் நல்ல கருத்துள்ள அனுமதிக்கப்பட்ட பாடல்களுடன் இசைக்கருவிகள் இன்றி தப்ஸ் (ஒரு பக்கம் வெட்டப்பட்ட சிறுமுரசு) அடிப்பது ஆண்களுக்கு ஒதுக்குப்புறமாக பெண்களுக்கு மாத்திரம் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மகிழ்தல், அதனை வெளிப்படுத்துதல் இஸ்லாத்தில் ஆகுமானதாகும்.

5. தம்பதியினர் தமக்கிடையே நல்ல பந்தத்துடன் நடத்தல்

அல்லாஹ்வின் உதவியால் தம்பதியினருக்கு மத்தியில் அன்பு நிலைத்து, மகிழ்ச்சியாக வாழ்ந்திட அவர்கள் தமக்கிடையே நல்ல பந்தத்துடன் நடத்தல், ஒவ்வொருவரும் தத்தமது கடமைகளை சரிவர நிறைவேற்றுவது திருமணத்தின் ஒழுங்கு, நெறிமுறைகளில் உள்ளவையாகும். அல்லாஹ் கூறுகின்றான்: "இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள்". (நிஸா: 19).

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்