கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் ஸுன்னத்தான தொழுகைகள்

ஒரு முஸ்லிம் தினமும் தொழ வேண்டிய கடமையான தொழுகை ஐந்து தான். அதனுடன் சேர்த்து உபரியான சில தொழுகைகளையும் தொழுவதற்கு இஸ்லாம் தூண்டுகின்றது. அவை அடியானுடனான அல்லாஹ்வின் நேசத்திற்குக் காரணாகவும், கடமையான தொழுகைகளில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்வதாகவும் உள்ளன. இவ்வாறான ஸுன்னத்தான தொழுகைகளில் முக்கியமான சிலதை இப்பாடத்தில் நாம் கற்போம்.

  • முன், பின் ஸுன்னத் தொழுகைகளை அறிதல்.
  • மழை வேண்டித் தொழும் தொழுகையை அறிதல்.
  • நலவு வேண்டித் தொழும் தொழுகையை அறிதல்.
  • ழுஹாத் தொழுகையை அறிதல்.
  • கிரகணத் தொழுகையை அறிதல்.
  • இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

    ஒரு முஸ்லிம் தினமும் தொழ வேண்டிய கடமையான தொழுகை ஐந்து தான்.

    அதனுடன் சேர்த்து உபரியான சில தொழுகைகளையும் தொழுவதற்கு இஸ்லாம் தூண்டுகின்றது. அவை அடியானுடனான அல்லாஹ்வின் நேசத்திற்குக் காரணாகவும், கடமையான தொழுகைகளில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்வதாகவும் உள்ளன. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : "மறுமையில் மக்களுடைய செயல்களில் அவர்களிடம் முதலில் வினவப்படுவது தொழுகைதான். கண்ணியமிக்க இரட்சகன்- அவனோ மிக அறிந்தவனாக உள்ள நிலையில்- தனது வானவர்களைப் பார்த்துக் கூறுகின்றான் : "எனது அடியானின் தொழுகை பரிபூரணமானதா? குறையுள்ளதா? எனப் பாருங்கள்" என்று கூறுவான். அது பரிபூரணமாக இருந்தால் அவ்வாறே எழுதப்படும். அதில் ஏதேனும் குறை ஏற்பட்டிருந்தால் "எனது அடியானிடம் ஏதாவது ஸுன்னத்தான தொழுகை இருக்கிறதா? எனப் பாருங்கள்" என்று கூறுவான். அவ்வாறிருந்தால் "எனது அடியானுக்கு அவனது கடமையான தொழுகையை ஸுன்னத்தைக் கொண்டு நிவர்த்தி செய்து விடுங்கள்" எனக் கூறுவான். அவ்வாறே ஏனைய செயல்களும் விசாரணைக்கு எடுக்கப்படுகின்றது". (அபூதாவூத் 864).

    ராதிபான (முன், பின்) ஸுன்னத்துக்கள்

    கடமையான தொழுகையுடன் சேர்ந்து அதற்கு முன்னும், பின்னும் ஒரு முஸ்லிம் இவற்றைத் தொடர்ந்து பேணி வருவதால் இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "எந்தவொரு முஸ்லிமான அடியானும் தினமும் ஸுன்னத்தான தொழுகை பன்னிரண்டு ரக்அத்கள் தொழுது வந்தால் அவனுக்கு சுவனத்தில் ஒரு வீட்டைக் கட்டாமலிருப்பதில்லை". (முஸ்லிம் 728).

    ராதிபான ஸுன்னத்துக்கள்

    ١
    பஜ்ரு தொழுகைக்கு முன் இரு ரக்அத்கள்.
    ٢
    இரண்டிரண்டு ரக்அத்களாக ளுஹருக்கு முன்னர் நான்கும், பின்னர் இரண்டும்.
    ٣
    மஃரிபுக்கு பின் இரண்டு ரக்அத்கள்.
    ٤
    இஷாவிற்குப் பின் இரண்டு ரக்அத்கள்.

    வித்ர் தொழுகை

    இத்தொழுகை ஒற்றை எண்ணிக்கையைக் கொண்டுள்ளதால் இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஸுன்னத்தான தொழுகைகளில் இதுவே மிகச் சிறந்ததாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "அல்குர்ஆனுடையவர்களே! நீங்கள் வித்ர் தொழுது கொள்ளுங்கள்". (திர்மிதி 453, இப்னு மாஜா 1170).

    இதனை நிறைவேற்ற சிறந்த நேரம் இரவின் இறுதிப் பகுதியாகும். இஷாத் தொழுததிலிருந்து பஜ்ர் உதயமாகும் வரை எந்நேரத்திலும் இதனைத் தொழ முடியும்.

    வித்ர் தொழுகையின் ரக்அத்கள்

    இதற்குக் குறிப்பிட்ட எண்ணிக்கை கிடையாது. மிகக் குறைந்தது ஒரு ரக்அத்தாகும். சிறந்தது மூன்று ரக்அத்களாகும். நபியவர்கள் பதினொரு ரக்அத்கள் தொழக் கூடியவர்களாக இருந்துள்ளார்கள்.

    வித்ரு தொழும் முறை

    உபரியான தொழுகைகள் பொதுவாக இரண்டிரண்டு ரக்அத்களாக ஸலாம் கொடுத்துத் தொழுவதுதான் அடிப்படையாகும். வித்ருத் தொழுகையும் அவ்வாறுதான். எனினும் அதனை முடித்துக் கொள்ள விரும்பினால் இறுதியில் ஒரு ரக்அத் தொழ வேண்டும். அதில் ருகூஃவிலிருந்து எழுந்து நடுநிலைக்கு வந்து அதில் ஓத வேண்டியதை ஓதி விட்டு இரு கைகளையும் உயர்த்தி குனூத் ஓதுவதும் மார்க்கத்தில் உள்ளதாகும்.

    மழை வேண்டித் தொழும் தொழுகை

    புவியில் வரட்சி ஏற்பட்டு, மழையும் குறைந்து மக்களுக்கு பாதகம் ஏற்படும் போது இத்தொழுகையை அல்லாஹ் ஸுன்னத்தாக்கியுள்ளான். முடியுமாயிருந்தால் திடல்களிலும், திறந்த வெளிகளிலும் இதனை நிறைவேற்றுவது விரும்பத்தக்கது. பள்ளியிலும் இதனை நிறைவேற்றலாம்.

    பாவமன்னிப்பு, அநீதிகளைத் திருப்பிக் கொடுத்தலாம், தர்மம், மக்களுக்கு உபகாரம் புரிதல் போன்ற அல்லாஹ்வின் அருளைக் கொண்டுவரும் காரணிகளைச் செய்த நிலையில் அல்லாஹ்வுக்காகப் பணிந்தவர்களாக உள்ளச்சத்துடன் தொழுகையாளிகள் இதற்காக வெளிப்பட்டுச் செல்ல வேண்டும்.

    மழை வேண்டித் தொழும் தொழுகை முறை

    பெருநாள்த் தொழுகை போல் இதுவும் இரு ரக்அத்களைக் கொண்டது. இரண்டிலும் இமாம் சத்தமிட்டு ஓத வேண்டும். ஒவ்வொரு ரக்அத்களின் ஆரம்பத்திலும் மேலதிக தக்பீர்கள் கூற வேண்டும். முதல் ரக்அத்தில் ஆரம்பத் தக்பீரின்றி மேலதிகமாக ஆறு தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் ஸுஜூதிலிருந்து நிலைக்கு வரும் தக்பீரின்றி மேலதிகமாக ஐந்து தக்பீர்களும் கூற வேண்டும், அதன் பின் இரு குத்பாக்கள் (பிரசங்கங்கள்) நிகழ்த்தி, அதில் அதிகமாக பாவமன்னிப்புக் கோரி, அவனிடம் இரைஞ்ச வேண்டும்.

    நலவு வேண்டித் தொழும் தொழுகை

    முக்கியமான ஒரு விடயத்தை ஆரம்பிக்கும் போது அதில் நலவுள்ளதா இல்லையா என உறுதியாகத் தெரியாத பட்சத்தில் அல்லாஹ்விடம் அதிலுள்ள நலவை வேண்டித் தொழும் தொழுகையே இதுவாகும்.

    இத்தொழுகைக்கான ஆதாரம்

    முக்கியமான ஒரு விடயத்தை ஆரம்பிக்கும் போது அதில் நலவுள்ளதா இல்லையா என உறுதியாகத் தெரியாவிட்டால் முதலில் இரண்டு ரக்அத்கள் தொழுது பின்னர் நபியவர்கள் தனது தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்த பின்வரும் துஆவை ஓத வேண்டும் : "அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீருக பிஇல்மிக, வஅஸ்தக்திருக பிகுத்ரதிக, வஅஸ்அலுக மின் பழ்லிகல் அழீம், ஃபஇன்னக தத்திரு வலா அக்திரு, வதஃலமு, வலா அஃலமு வஅன்த அல்லாமுல் குயூப், அல்லாஹும்ம இன்குன்த தஃலமு அன்ன ஹாதல் அம்ர- இவ்விடத்தில் தனது தேவையைக் கூற வேண்டும்- கைருன் லீ பீ தீனீ, வமஆஷீ வஆகிபதி அம்ரீ ஃபக்துர்ஹு லீ, வயஸ்ஸிர்ஹு லீ, ஸும்ம பாரிக் லீ ஃபீஹி, வஇன் குன்த தஃலமு அன்ன ஹாதல் அம்ர ஷர்ருன் லீ ஃபீ தீனீ வமஆஷீ வஆகிபதி அம்ரீ ஃபஸ்ரிப்ஹு அன்னீ, வஸ்ரிப்னீ அன்ஹு, வக்துர் லியல் கைர ஹய்ஸு கான, ஸும்ம அர்ழினீ பிஹீ". (புஹாரி 1172). பொருள் : 'இறைவா! உனக்கு ஞானம் இருப்பதால் உன்னிடம் நல்லதை வேண்டுகிறேன். உனக்கு வல்லமை இருப்பதால் உன்னிடம் வல்லமையை வேண்டுகிறேன். உன்னுடைய மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ அனைத்திற்கும் ஆற்றல் பெறுகிறாய், நான் ஆற்றல் பெற மாட்டேன். நீ அனைத்தையும் அறிகிறாய். நான் அறிய மாட்டேன். நீதான் மறைவானவற்றையெல்லாம் அறியக் கூடியவன். என்னுடைய இந்தக் காரியம்- காரியத்தைக் குறிப்பிட வேண்டும்- என்னுடைய மார்க்கத்திற்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் என்னுடைய மறுமைக்கும் சிறந்தது என்று நீ அறிந்தால் அதற்குரிய ஆற்றலை எனக்குத் தா! அதை எனக்கு எனக்கு இலகுபடுத்தித் தா, பின் அதில் எனக்கு பரக்கத் செய்! இந்தக் காரியம் என்னுடைய மார்க்கத்திற்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் கெட்டது என்று நீ அறிந்தால் என்னைவிட்டு இந்தக் காரியத்தையும் இந்தக் காரியத்தை விட்டு என்னையும் திருப்பி விடு. எங்கிருந்தாலும் எனக்கு நல்லவற்றிற்கு ஆற்றலைத் தா! திருப்தியைத் தா!

    இஸ்திஹாரா தொழுகையின் துஆ (நலவு வேண்டித் தொழுதல்)

    ழுஹாத் தொழுகை

    இதுவும் நிறைய சிறப்புக்கள் கூறப்பட்டுள்ள ஸுன்னத்தான தொழுகைகளுள் ஒன்றாகும். இதன் குறைந்த பட்ச அளவு இரண்டு ரக்அத்கள். சூரியன் உதயமாகி ஓர் ஈட்டிப் பிரமாணம் உயர்ந்தது முதல் சூரியன் உச்சிக்கு வந்து சாய்ந்து ளுஹர் தொழுகையின் நேரம் வரை இதனை நிறைவேற்றலாம்.

    கிரகணத் தொழுகை

    சூரிய, சந்திர ஒளிகள் முழுமையாகவோ, பகுதியாகவோ மறையும் வழமைக்கு மாறான நிகழ்வே கிரகணமாகும். இது அல்லாஹ்வின் ஆற்றலை வெளிப்படுத்தும் அவனது அத்தாட்சிகளுள் ஒன்றாகும். அல்லாஹ்வின் தண்டனையை அஞ்சுவதற்கும், நன்மையை எதிர் பார்க்கவும் மனிதனுக்கு விழிப்பூட்டி, நினைவூட்டுகின்றது.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "நிச்சயமாக சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் இரு அத்தாட்டசிகளாகும், யாருடைய மரணத்திற்காகவும் அவற்றில் கிரகணம் ஏற்பட மாட்டாது, அவ்வாறான நிகழ்வைக் கண்டால் எழுந்து சென்று தொழுங்கள்" . (புஹாரி 1041, முஸ்லிம் 911).

    கிரகணத் தொழுகையின் முறை

    இது இரண்டு ரக்அத்களைக் கொண்டது. எனினும் இதில் இரு ரகூஃகள் உள்ளன. அதாவது முதல் ரக்அத்தின் ருகூஃவிலிருந்து எழுந்த பின் மீண்டும் பாதிஹா ஸூரா ஓதி, மேலும் சில வசனங்கள் ஓதி விட்டு, பின் மீண்டும் ருகூஃ செய்து, நிலைக்கு வந்து பின் ஸுஜூது செய்து, நடுஇருப்பில் உட்கார வேண்டும். இதுவே இத்தொழுகையின் முழுமையான ஒரு ரக்அத்தாகும். இரண்டாம் ஸுஜூதிலிருந்து எழுந்த பின் முதல் ரக்அத்தைப் போன்றே இரண்டாவதிலும் செய்ய வேண்டும்.

    உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


    பரீட்சையை ஆரம்பிக்கவும்