கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் அதான் (தொழுகைக்கான அழைப்பு)

மக்களுக்கு தொழுகை நேரத்தை அறிவித்து அதன்பால் அழைப்பு விடுப்பதற்காக அல்லாஹ் அதானை முஸ்லிம்களுக்கு மார்க்கமாக்கியுள்ளான். அதான், இகாமத் ஆகியவற்றின் முறைகளை இங்கு நாம் கற்போம்.

  • அதான்  கூறும் முறையை அறிதல்.
  • இகாமத் கூறும் முறையை அறிதல்.
  • அதானுக்கு பதில் கூறுவதன் சிறப்பு.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

அதான் (தொழுகைக்கான அழைப்பு)

மக்களுக்கு தொழுகை நேரத்தை அறிவித்து அதன்பால் அழைப்பு விடுப்பதற்காக அல்லாஹ் அதானை முஸ்லிம்களுக்கு மார்க்கமாக்கியுள்ளான்.

தொழுகை ஆரம்பிக்கப்படுவதை அறிவிப்பதற்காக இகாமத்தை மார்க்கமாக்கியுள்ளான்.

அதான் எவ்வாறு மார்க்கமாக்கப்பட்டது?

முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர். அப்போது சிலர், கிறித்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர் யூதர்கள் வைத்திருக்கிற கொம்பைப் போன்று நாமும் கொம்பூதலாமே என்றனர். அப்போது உமர் (ரலி) 'தொழுகைக்காக அழைக்கிற ஒருவரை ஏற்படுத்தக் கூடாதா?' என்றனர். உடனே பிலால் (ரலி) அவர்களிடம் 'பிலாலே! எழுந்து தொழுகைக்காக அழையும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (புஹாரி 604, முஸ்லிம் 377).

அதான், இகாமத்தின் சட்டம்

அதான், இகாமத் ஆகியன சமூகக் கடமையாகும். ஒரு சமூகம் வேண்டுமென்றே இதனை விட்டால் அவர்களது தொழுகை செல்லுபடியாகும். ஆனால் அவர்கள் பாவிகளாவர்.

தொழுகைக்காக முஅத்தின் எவ்வாறு அழைப்பு விடுப்பார்?

மக்கள் செவிசாய்த்து தொழுகைக்கு வருவதற்காக அழகான, உயர்ந்த சப்தத்தில் அதான் கூற வேண்டும்.

அதானின் வார்த்தைகள்

அதனை செவிமடுப்பீராக.

"ஹய்ய அலல் பலாஹ்" என்ற வார்த்தைக்குப் பின்னால் பஜ்ருடைய அதானில் மேலதிகமாக "அஸ்ஸலாது ஃகைரும் மினன்னவ்ம்" (தூக்கத்தை விட தொழுகை சிறந்தது) என இரு தடவை கூற வேண்டும்.

இகாமத்தின் வார்த்தைகள்

அதானுக்குப் பதில் கூறுதல்

அதானைக் கேட்பவர் முஅத்தின் கூறுவதைப் போன்றே அவரைத் தொடர்ந்து கூறுவது ஸுன்னத்தாகும். ஹய்ய அலஸ் ஸலாஃ’ , ‘ஹய்ய அலல் பலாஹ்’ ஆகிய இரு வார்த்தைகளின் போது மாத்திரம் ‘லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்’ என்று கூற வேண்டும். பின்பு கீழ்வரும் துஆவை ஓத வேண்டும் : “அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்மா, வஸ்ஸலாதில் காஇமா ஆதி முஹம்மதனில்வஸீலத வல் ஃபலீலத, வப்அஸ்ஹு மகாமன் மஹ்மூதனில்லதீவஹத்தஹு”.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்