தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் பிரயாணி மற்றும் நோயாளியின் தொழுகை
இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:
சுயபுத்தியுடன் உள்ள அனைத்து முஸ்லிம்கள் மீதும் எல்லா நிலைகளிலும் தொழுகை கடமையான ஒன்றாகும். எனினும் மக்களின் நிலைகள், தேவைகள் வேறுபடுவதை இஸ்லாம் கவனத்திற் கொண்டுள்ளது. நோயாளி, பிரயாணிகளும் இவ்வாறானவர்களில் உள்ளவர்களே.
ஒரு பிரயாணிக்கு தனது பிரயாணத்தின் போதும் நான்கு நாட்களுக்குக் குறைந்தளவு வேறூரில் தங்கியிருக்கும் போதும் நான்கு ரக்அத்களைக் கொண்ட தொழுகைகளை இரண்டு ரக்அத்களாக சுருக்கித் தொழுவது ஸுன்னத்தாகும். ளுஹர், அஸர், இஷா ஆகிய தொழுகைகளை நான்கு ரக்அத்களுக்குப் பதிலாக இரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். எனினும் உரிலுள்ள இமாமமைத் துயர்ந்து மஃமூமாகத் தொழுதால் அவரைப் பின்பற்றி நான்கு ரக்அத்களாகவே தொழ வேண்டும்.
பஜ்ருடைய முன் ஸுன்னத்தைத் தவிர ஏனைய முன், பின் ஸுன்னத்துக்களை தொழாமல் விடுவதே பிரயாணிக்கு ஸுன்னத்தாகும்.
இலகுபடுத்தவும், இரக்கம் காட்டவும், சிரமத்தை நீக்கவும் குறிப்பாக பிரயாணம் செய்து கொண்டிருக்கும் போது ளுஹர், அஸர் ஆகியவற்றையும் மஃரிப், இஷா ஆகியவற்றையும் ஏதாவதொரு நேரத்தில் சேர்த்துத் தொழவும் முடியும்.
தொழுகையில் நிலையில் நிற்க முடியாத நோயாளிகளுக்கு, நிற்க சிரமமானவர்களுக்கு, அல்லது நின்று தொழுதால் குணமடையத் தாமதமாகும் என்ற நிலையிலுள்ளவர்களுக்கு உட்கார்ந்து தொழலாம். அதுவும் முடியாவிட்டால் பக்கவாட்டில் சாய்ந்து கொண்டும் தொழுலாம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "நீர் நின்ற நிலையில் தொழும், முடியா விட்டால் உட்கார்ந்த நிலையில், அதுவும் முடியாவிட்டால் பக்கவாட்டில் சாய்ந்து கொண்டு தொழவும்". (புஹாரி 1066).
நோயாளியின் தொழுகைக்கான பிரத்தியேக சட்டங்கள்
اختر مستوى الشرح المناسب لك
يحتوي الدرس الآن على طبقات اختيارية تساعدك على المراجعة السريعة أو التعمق دون مغادرة الدرس.
- الملخص: نظرة سريعة في نحو دقيقة.
- الأساسي: محتوى الدرس الأصلي وهو المسار المعتمد للتقدم.
- المتعمق: تفاصيل إضافية اختيارية عند توفرها.
تقدمك وإكمال الدرس يعتمدان دائما على صفحات المستوى الأساسي.