தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் இஹ்ராம் கட்டியவர் தவிர்க்க வேண்டியவை
இஹ்ராம் கட்டியவர் தவிர்க்க வேண்டியவை
அவை ஹஜ், அல்லது உம்ராவுக்காக இஹ்ராம் நிய்யத் வைத்த ஒருவர் அவ்வணக்கம் நிறைவேறும் வரை செய்யாது தடுக்கப்பட்ட விடயங்களாகும்.
இஹ்ராம் கட்டியவர் தவிர்க்க வேண்டியவை மூன்று வகைப்படும்.
பொதுவாக ஆண் பெண் மீது உள்ள தடைகள்:
ஆண்கள் தவிர்ந்து கொள்ள வேண்டியவைகள்
பெண்கள் தவிர்ந்து கொள்ள வேண்டியவைகள்
மறதி, அறியாமை, நிர்ப்பந்தம் போன்ற காரணங்களினால் தடுக்கப்பட்ட இவற்றில் ஏதாவதொன்றை செய்வதால் குற்றமேதுமில்லை. அல்லாஹ் கூறுகின்றான் : “இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை; ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்)” (அஹ்ஸாப் : 5). எனினும் நினைவு வந்தால், அல்லது தடுக்கப்பட்டதென அறிந்தால் உடனடியாக அவற்றைத் தவிர்ந்து கொள்வது அவசியமாகும்.
நியாயமான காரணத்திற்காக வேண்டுமென்றே இவற்றை செய்தால் அவர் பரிகாரம் கொடுக்க வேண்டும். குற்றமேதும் கிடையாது.
அல்லாஹ் கூறுகின்றான் : “அந்த ஹத்யு(குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளை மழிக்காதீர்கள்; ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாக இருப்பதினாலோ அல்லது தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடிய பிணியின் காரணமாகவோ (தலைமுடியை இறக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்குப் பரிகாரமாக நோன்பு நோற்றல் வேண்டும், அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும், அல்லது குர்பானி கொடுத்தல் வேண்டும். பின்னர் நெருக்கடி நீங்கி, நீங்கள் சமாதான நிலையைப் பெற்றால் ஹஜ் வரை உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானி கொடுத்தல் வேண்டும்; (அவ்வாறு குர்பானி கொடுக்க) சாத்தியமில்லையாயின், ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் (தம் ஊர்)திரும்பியதும் ஏழு நாட்களும் ஆகப் பூரணமாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும். இ(ந்தச் சலுகையான)து, எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத் தான் - ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்”. (பகரா : 196).
நியாயமான காரணமின்றி வேண்டுமென்றே இவற்றை செய்தால் அவர் பரிகாரம் கொடுக்க வேண்டும். அவர் மீது பாவமும் உண்டு.