கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் நபி (ஸல்) அவர்களின் குணங்கள்

இதயங்களை அன்புடனும் பயபக்தியுடனும் தொடர்புபடுத்தும் பல பண்புகள் மற்றும் சிறப்பியல்புகளுடன் அல்லாஹ் தனது நபி (ஸல்) அவர்களைத் தனித்துவப்படுத்தியுள்ளான். இப்பாடத்தில் அப்பண்புகள், சிறப்பியல்புகளில் சிலதை அறிவோம்.

இதயத்திலே அன்பை அதிகப்படுத்தும் நபி (ஸல்) அவர்களின் சில பண்புகளை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

நபி (ஸல்) அவர்களின் குணங்கள்

நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அழகான பண்புகள், குணங்களுடையவராவார். அவர்கள் மிக உயர்ந்த மரியாதைக்குரிய குணங்கள், நல்ல நடத்தை மற்றும் உயர்ந்த ஒழுக்கம் ஆகியவற்றைக் கொண்டிருந்தார். அன்னாரின் பண்புகள், குணங்களை அவதானிப்பவர் அன்னார் மனித இனம் அறிந்து கொண்ட ஒரு மாமனிதர் என்பதைக் கண்டு கொள்வார்.

-அவர்கள்தான் அல்லாஹ்வின் அடியார்களில் மிகச் சிறந்தவராகும். அவனுக்கு மிக நேசமானவர், உற்ற நண்பர், அவனால் தெரிவு செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவர், அல்லாஹ்வை வணங்குவதில் முழுமையானவர், மிகப் பரிசுத்த குணமுள்ளவர், மிகத் தூய்மையானவர், அழகிய நன்நடத்தை உள்ளவர், அல்லாஹ்வை அறிவதிலும், அவனது அடிமை என்பதை உறுதிப்படுத்துவதிலும் ஒரு மாமனிதர். தனது படைப்பினங்களுக்கான நபியாகவும், தூதராகவும் இருப்பதற்கும், நல்வழி காட்டுவதிலும், நேர்வழியின் பால் அழைப்பதிலும் தனக்கும் மக்களுக்கும் இடையில் மத்திமமாக இருப்பதற்கும் அல்லாஹ் அவர்களைத் தெரிவு செய்தான்.

மிக உயர்ந்த, தூய்மையான வம்சத்திலிருந்து அல்லாஹ் அவர்களைத் தெரிவு செய்துள்ளான். தோற்றம், குணம் இரண்டிலும் பூரண மனிதராகச் சிறப்பித்துள்ளான். அவர்களது மகிமையான அமைப்பிலும், அழகிய தோற்றத்திலும், பொலிவான முகத்திலும், உன்னதமான மற்றும் உயர்ந்த பண்புகளிலும் மிக அழகான குணங்களோடு அவர்களைச் சிறப்பித்துள்ளான். அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் அன்னார் மீது உண்டாவதாக. அன்னாரின் பண்புகளில் சில வருமாறு :

1. நபி (ஸல்) அவர்களின் தோற்றம்

١
மக்களில் அழகிய உயரமுடையவர், வெளிப்படையாகத் தெரியும் அளவிற்கு அதிக உயரமானவர் களாகவும் இல்லை; குட்டையானவர் களாகவும் இல்லை. நடத்தர உயரமுடையவர். மக்கள் யாருடன் நடுந்து சென்றாலும் அவர்கள்தான் உயரமாகத் தெரிவார்கள். அவர் உட்கார்ந்தால் அவருடைய தோள்புயம் உட்கார்ந்திருக்கும் மற்ற நபரைவிட உயர்ந்திருக்கும். முழுமையான தோற்றத்தில் உயரத்திற்கேற்ற பருமனும் இருக்கும்.
٢
அதிகமாக மெலிந்தவருமல்ல, அதிக பருமனுடையவருமல்ல, வயிறும் மார்புப்பகுதியும் நேராகவே இருக்கும், இடுப்புப்பகுதி புடைத்தவராகவோ, அதிக மெலிதானவராகவோ இல்லை.
٣
தூரமாகப் பார்த்தால் அழகும் வனப்பும் பெற்றவராய்த் திகழ்வார். அருகில் சென்றால் தெளிவும் அழகும் உள்ளவராக இருப்பார்.

அனஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை வர்ணிக்கும் போது : "நபி (ஸல்) அவர்கள் மக்களில் நடுத்தர உயரமுடையவர்களாக இருந்தார்கள்; நெட்டையானவர்களாகவும் இல்லை; குட்டையானவர்களாகவும் இல்லை" எனக் கூறினார்கள். (புஹாரி 3547).

2. நபி (ஸல்) அவர்களது முகத் தோற்றம்

நபி (ஸல்) அவர்கள் அழகிய, வட்டமான முகமுடையவராக இருந்தார்கள். இருப்பினும் மிகவும் வட்டமானதாக இருக்கவில்லை, மாறாக அதில் மென்மை இருந்தது. மிக அழகான, பிரகாசமான, ஒளிமயமான முகத்தைக் கொண்டவர், பௌர்ணமி இரவில் நிலவின் முகம் போல மின்னிக் கொண்டிருக்கும். அன்னாரைப் பார்க்கும் யாரையும் ஆறுதலடையச் செய்வார். மகிழ்ச்சியடைந்தால் முக ரேகைகள் இலங்கும். முழுமையான காதுடையவர்கள்.

அன்னாரது முகத் தோற்றங்கள்

١
அன்னாரது புருவங்கள் நீண்ட மற்றும் மென்மையானவை, கண்களின் இறுதி வரை நீண்டிருக்கின்றன. வளைந்த மற்றும் லேசாக இணைக்கப்பட்டதாக அவையிரண்டும் இருக்கும், அவர்களை நெருக்கமாகப் பார்த்தால் தவிர யாரும் அவற்றைப் பார்க்க முடியாது.
٢
இரு கண்களும் அகலமானவை, அவற்றின் வெண்படலங்கள் கடும் வெண்மையாகவும், கருவிழிகள் கருமையானதாகவும் இருக்கும், அவற்றின் கருமையின் காரணமாக எதுவும் மறைய மாட்டாது. கண்களின் வெண்மைப் படலங்களில் சிவப்பு கலந்த மெல்லிய நாளங்கள் போன்று இருக்கும். கண் இமைகள் நீண்ட முடிகளைக் கொண்டிருந்தன. ஸுர்மா போட்டவவரின் கண்களைப் போன்றிருக்கும்.
٣
அன்னாரது மூக்கு அழகிய மிதமான நீளமுடையதாக, அதன் நுனி மெல்லியதாக, நடுப்பகுதி சற்று உயர்ந்ததாக காணப்பட்டது, அதற்கு மேலே ஓர் ஒளி உள்ளது.
٤
அவரது கன்னங்கள் கடினமானவை, குறைந்த சதை, மெல்லிய தோல் உடையவை, எந்த புடைப்போ அல்லது உயரமோ இல்லை.
٥
அகலமான வாயும், மென்மையான உதடுகளும் உடையவர்கள், அவரது பற்கள் பிரகாசமான, வெண்மையான, தெளிவான, சீரானதாக இருந்தது. முன்பற்கள் மற்றும் வெட்டும் பற்களுக்கிடையே சற்று இடைவெளி உள்ளதாக இருந்தது. அவர்கள் பேசினால் முன்பற்களுக்கு இடையே பிரகாசம் வருவதைப் போன்றிருக்கும். புன்முறுவலாகவே சிரிப்பார்கள்.
٦
பிடறி, கழுத்துப் பகுதி நீண்டதாக இருக்கும். அவர்களது கழுத்து வெள்ளியைப் போல் தெளிவாக இருக்கும்.

நபி (ஸல்) அவர்களின் தாடி அடர்த்தியாகவும், கருப்பு நிறமாகவும் வட்ட அமைப்பிலும் இருந்தது. அவர்களது நாடி கீழுதட்டிற்கு இடைப்பட்ட பகுதி சற்று உயர்ந்து, வெளிப்படையாகத் தெரியுமாறு இருந்தது. கீழுதட்டிற்கு அடியில் தாடியுடன் சேர்ந்தது போன்று முடிகள் இருந்தன. அன்னாரது தலை, தாடி இரண்டையும் சேர்த்தாலும் நரைமுடி இருபதையும் எட்டவில்லை. அவற்றில் அதிகமானது நாடி கீழுதட்டிற்கு இடைப்பட்ட பகுதியில்தான் இருந்தது. தலையில் ஆங்காங்கே சில முடிகள் நரைத்திருந்தன.

3. நபி (ஸல்) அவர்களின் முகத்தின் நிறம்

நபி (ஸல்) அவர்கள் மக்களில் மிக அழகிய நிறமுடையர்களாக இருந்தார்கள். பிரகாசமான, இலங்கிக் கொண்டிருக்கும், சிவந்த வெண்மை நிறமாக அன்னாருடைய முகம் இருந்தது. நபி (ஸல்) அவர்களை வர்ணிக்கும் போது அலீ (ரலி) அவர்கள் கூறியதாக ஜுபைர் பின் முத்இம் (ரலி) கூறுகின்றார் : "நபி (ஸல்) அவர்கள் சற்று பருத்த தலையுடையவராகவும், செம்மை கலந்த வெண்ணிறமாகவும், அடர்ந்த தாடியுள்ளவராகவும் இருந்தார்கள்". (அஹ்மத் 944).

4. நபி (ஸல்) அவர்களின் முடி அமைப்பு

நபி (ஸல்) அவர்கள் அதிக முடியுடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் அதனை கத்தரித்தால் இரு காதுகளின் நடுப்பகுதி அளவிற்கு நீண்டிருக்கும். வளர்த்தால் இரு தோள்புயங்கள் அளவிற்கு விட்டு வைப்பார்கள். அவர்களுடைய முடி கோரையாகவோ, கூராகவோ இன்றி இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் இருந்தது. சிலவேளை முன்பகுதி முடியை நெற்றியின் மீது தொங்கவிட்டிருப்பார்கள். வேறு சில சந்தர்ப்பங்களில் தலைநடுப்பகுதியிலிருந்து பிரித்து வாந்திருப்பார்கள். நெற்றியின் மீது முடியெதனையும் விட்டுவைக்க மாட்டார்கள்.

கதாதா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார் : நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்களது தலைமுடி எப்படி இருந்தது?"என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அவர்களது தலைமுடி, அலையலையானதாக இருந்தது. சுருள் முடியாகவும் இல்லை; படிந்த கோரை முடியாகவும் இல்லை. அது அவர்களது காது மடல்களுக்கும் தோளுக்கும் இடையே தொங்கிக்கொண்டிருந்தது" என்று பதிலளித்தார்கள். (முஸ்லிம் 2338).

அன்னாரது தலை, தாடி இரண்டையும் சேர்த்தாலும் நரைமுடி இருபதையும் எட்டவில்லை. அவற்றில் அதிகமானது நாடி கீழுதட்டிற்கு இடைப்பட்ட பகுதியில்தான் இருந்தது. தலையில் ஆங்காங்கே சில முடிகள் நரைத்திருந்தன.

நபி (ஸல்) அவர்கள் தனது முடியை சீவி, வாரிக் கொள்வார்கள், அதன் போது வலதிலிருந்தே ஆரம்பிப்பார்கள். விட்டுவிட்டுத்தான் வாருவார்கள்.

5. நபி (ஸல்) அவர்கள் தோல்புயங்கள், முன்னங்கைகள், மற்றும் கைகளின் அமைப்பு

١
அகன்ற புயங்களையும், விரிந்த மார்பு, முதுகைக் கொண்டவர்கள், அன்னாரது புயங்களில் அதிக முடிகளிருக்கும்.
٢
வெள்ளியினால் வார்க்கப்பட்டது போன்று அன்னாரது முதுகுப்பகுதி வெண்மையாக இருக்கும்.
٣
நீண்ட, அகன்ற முன்னங்கை, கனத்த மணிக்கட்டுகள், நீண்ட விரல்கள், நீண்ட பருத்த முன்னங்கைகளைக் கொண்டவர்களாக இருந்தார்கள். எவ்விதப் புடைப்பும் அதிலில்லை. அன்னாரது இரு உள்ளங்கைகளும் விரிந்த, சதைப்பிடிப்புள்ளதாக இருந்தது. அது கனத்திருந்தாலும் பட்டை விட மென்மையானதாகவே இருந்தது.

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார் : "நபி (ஸல்) அவர்களது உள்ளங்கையை விட மிருதுவான பட்டையோ, வேறு எந்தவொரு ஜரிகை பட்டையோ நான் தொட்டதில்லை". (புஹாரி 3561).

-

6. நபித்துவ முத்திரையின் தோற்றம்

நபியவர்களின் இடது தோல்புயத்தில் நபித்துவ முத்திரை உள்ளது. அது மேனி நிறத்தில் புறாவின் முட்டையைப் போல் மிருதுவான தசைக்கு அருகில் மச்சம் போன்று வளர்ந்து இருந்தது. அதில் ஒருங்கிணைந்த அமைப்பில் முடிகளும் இருந்தன.

ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : நபி (ஸல்) அவர்களது முதுகில் (நபித்துவ) முத்திரை இருந்ததை நான் பார்த்தேன். அது அன்னாருடைய மேனியின் நிறத்தில் புறா முட்டை போன்று இருந்தது. (முஸ்லிம் 2344).

7. நபி (ஸல்) அவர்களின் நெஞ்சு, மற்றும் வயிற்றுப்பகுதிகளின் தோற்றம்

١
அகன்ற மார்புடையவர்கள்.
٢
வயிறும் நெஞ்சும் சரி நேராக (புடைக்காமல்) இருந்தது.
٣
இடுப்புப்பகுதி புடைத்தவராகவோ, அதிக மெலிதானவராகவோ இல்லை.
٤
நெஞ்சிலிருந்து தொப்புள் வரை கோடு போன்ற முடிகளைக் கொண்டவர், அன்னாருடை நெஞ்சிலோ, வயிற்றிலோ வேறு முடிகளேதும் இருக்கவில்லை.
٥
இரு அக்குள்களும் முடிகளற்ற வெண்மையாக இருந்தது.

8. நபி (ஸல்) அவர்களின் கணுக்கால் மற்றும், பாதத்தின் தோற்றம்

١
கணுக்கால், கால் எலும்புகள் நீளமுடையவர்களாக, அதில் எவ்வித புடைப்புமற்றவர்களாக இருந்தார்கள். அன்னாரது கால்களின் வெண்மை காரணமாக பேரீச்சம் மரத்தின் நடுத்தண்டின் மச்சை போன்றிருக்கும். அவை மெல்லியதாக,இலங்கிக் கொண்டிருக்கும்.
٢
கனத்த, பெரிய, மென்மையான பாதங்களைக் கொண்டவர்கள். அவற்றில் விரிசல்களோ, பிளவுகளோ இல்லை. அன்னாரது கால் பெருவிரல் ஏனைய விரல்களை விட நீளமானதாகும்.
٣
குதிக் கால்களில் குறைந்த சதையுடைவர்கள்.
٤
உள்ளங்கால் நன்கு குவிந்தவர்கள். அதாவது அடிப் பாதம் நிலத்துடன் ஒட்டாது சற்று உயர்ந்து, குவிந்து, நிலத்தை விட்டு சற்று தூரமாக இருக்கும்.

9. நபி (ஸல்) அவர்களின் நறுமணம்

அன்னாரின் வியர்வை கஸ்தூரியை விட நறுமணமிக்கது. ஒருவர் அன்னாருடன் முஸாபஹா செய்தால் அதன் நறுமணத்தை அன்று முழுதும் பெற்றுக் கொண்டிருப்பார். அதிக நேரங்களில் அன்னார் வாசனத்திரவியங்கள் பயன் படுத்துவார்கள்.

அனஸ் (ரலி) கூறினார்கள் : "நபி (ஸல்) அவர்களது (உடல்) வாசனையைவிட சுகந்தமான கஸ்தூரியையோ "அம்பரை"யோ நான் நுகர்ந்ததேயில்லை". (முஸ்லிம் 2330).

நபி (ஸல்) அவர்களின் உயர்ந்த பண்புகளை விவரிக்கும் சுருக்கமான வார்த்தை

அல்லாஹ் கூறுகின்றான் : “நீர் மகத்தான நற்குணத்தில் உள்ளீர்". (கலம் : 4). நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் முதல் தடவை வந்த வேளை, அன்னார் பயந்து நடுங்கிய போது தனது மனைவியார் அன்னை கதீஜா (ரலி) அவர்களிடம் "எனக்கேதும் நேர்ந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன்'' என்று கூறினார்கள். அதற்கு கதீஜா(ரலி), 'அப்படியொன்றும் ஆகாது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்; ஏனெனில் அல்லாஹ்வின் மீதாணை(யிட்டுச் சொல்கிறேன்)! நீங்கள் உறவுகளைப் பேணி நடந்துகொள்கிறீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தை சுமக்கிறீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனையில் ஆட்படுவோருக்கு உதவி செய்கிறீர்கள். (அதனால் நீங்கள் சஞ்சலப்பட வேண்டியதில்லை)'' என்று (ஆறுதல்) கூறினார்கள். (புஹாரி 4953, முஸ்லிம் 160).

1. நபி (ஸல்) அவர்களுடைய அமானிதத் தன்மை

நபி (ஸல்) அவர்கள் நம்பிக்கையானவராக அறியப்பட்டிருந்தார்கள். அதனால்தான் அவர்களது சமூகம் அன்னாருக்கு "அல்அமீன்" (நம்பிக்கையாளர்) எனப் பெயர் சூட்டியிருந்தனர். நபித்துவத்தின் பின் அம்மக்கள் நபியை விரோதித்தும் கூட தமது பொருட்களை அன்னாரிடம் பாதுகாப்பாக வைத்து விட்டுச் செல்லக்கூடியவர்களாக இருந்தனர்.

2. நபி (ஸல்) அவர்களின் பரிவு மற்றும் இரக்கம்

நபி (ஸல்) அவர்கள் தமது சமுகத்துடன் மிகவும் பரிவாகவும், இரக்கமுள்ளவராகவும் இருந்தார்கள். அல்லாஹ் கூறுகின்றான் : “(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க பரிவும் இரக்கமும் உடையவராக இருக்கின்றார்". (தவ்பா : 128). மேலும் அல்லாஹ் கூறுகின்றான் : “அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்". (ஆல இம்ராம் : 159).

3. நபி (ஸல்) அவர்களின் மன்னிக்கும் மனப்பாங்கு.

நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்டு உட்பிரவேசித்த போது பல வருடங்களாக அன்னாரையும், தோழர்களையும் எதிர்த்து, நோவினைப் படுத்திய மக்காவின் பெரும் புள்ளிகள், தலைவர்களெல்லாம் அன்னார் முன்னிலையில் தலை குனிந்து நின்றனர். அப்போது "இன்று உங்கள் மீது குற்றமேதும் இல்லை, நீங்கள் செல்லுங்கள், விடுதலை பெற்றுவிட்டீர்கள்" என்ற வார்த்தையை விட வேறேதும் அன்னாரின் பொன்னான வாயிலிருந்து வெளிப்படவில்லை.

4. மக்களின் நேர்வழியில் நபி (ஸல்) அவர்களுக்கு இருந்த அக்கறை

மக்களின் நேர்வழியில் அன்னாருக்கு இருந்த அதிக அக்கறையினால் அம்மக்களை நினைத்துக் கவலைப்பட்டு, தன்னையே மாய்த்துக் கொள்ளும் அளவிற்குச் சென்றார்கள். அல்லாஹ் கூறுகின்றான் : “(நபியே!) இந்த (வேத) அறிவிப்பில் அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால், அவர்களுக்காக வியாகூலப்பட்டு, நீர் உம்மையே அழித்துக் கொள்வீர்கள் போலும்!". (கஹ்ப் : 6).

5. நபி (ஸல்) அவர்களின் வீரம் மற்றும் பலம்

அலீ (ரலி) அவர்கள்- அவர்களே ஒரு மாபெரும் வீராராக இருந்தார்கள்- நபி (ஸல்) அவர்களின் வீரத்தைப் பற்றி வர்ணித்துக் கூறுகின்றார்கள் : "யூத்தம் உக்கிரமடைந்து இரு தரப்பும் கடுமையாக மோதிக் கொள்ளும் போது நாம் நபி (ஸல்) அவர்கள் மூலம் தற்பாதுகாப்பு எடுத்துக் கொள்வோம். எம்மில் எதிரிகளுக்கு மிக நெருக்கமாக அன்னாரைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள்". (அஹ்மத் 1347).

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்