தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் மோசமான சம்பாத்தியம் மற்றும் தடுக்கப்பட்ட பரிவர்த்தனைகள்
சம்பாத்தியத்தில் அனுமதிக்கப்பட்ட, நல்ல தூய்மையானவைகளும் உள்ளன, தடுக்கப்பட்ட மோசமான தீயவைகளும் உள்ளன. அல்லாஹ் கூறுகிறான் : "நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்; அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள்". (பகரா : 267).
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: "மக்களுக்கு ஒரு காலம் வரும், அப்போது ஒரு மனிதன் தான் சம்பாதித்த பணம் ஹலாலா அல்லது ஹராமா எனப் பொருட்படுத்த மாட்டான்". (புஹாரி 2083).
இது உரிமையின்றி, மார்க்க அனுமதியின்றி பெறப்பட்ட சொத்துக்களைக் குறிக்கின்றது.
மோசமான சம்பாத்தியத்தின் வழிகள்
மோசமான சம்பாத்தியத்தின் காரணங்கள்
ஹராமான சம்பாத்தியத்தின் தீங்குகள்
நிதிப் பரிவர்த்தனைகளில் தடை செய்யப்பட்ட வகைகள்
தடை செய்யப்பட்ட பொருட்கள்
இவை செத்தவை, இரத்தம், பன்றி இறைச்சி, மற்றும் மோசமான, அசுத்தமானவை போன்ற இயல்பிலேயே தடை செய்யப்பட்டவையாகும். இவை இயல்பிலேயே உள்ளம் அறுவறுக்கக் கூடியவையே. அல்லாஹ் கூறுகின்றான்: "(நபியே!) நீர் கூறும்: “தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை” - ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் - (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) - ஆனால் எவரேனும் நிர்ப்பந்திக்கபட்டு, வரம்பை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்துவிட்டால் - (அவர்மீது குற்றமாகாது ஏனெனில்) நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெருங் கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.(அன்ஆம்: 145).
இவை மக்களுக்கு அநீதியிழைக்கும், அவர்களின் சொத்துக்களை சுரண்டும் வட்டி, சூதாட்டம், மோசடி, ஏமாற்று, பதுக்கல் போன்ற மார்க்கத்திற்கு முரணான அனைத்து பரிவர்த்தனைகளுமாகும். ஆனால் இவ்வகையானது உள்ளம் ஆசைப் படக்கூடியவையே. இதனால்தான் அதைத் தடுக்கவும், அதில் வீழ்திடாதிருக்கவும் சட்டம், தண்டனை முறைகள் அவசியப்பட்டன. அல்லாஹ் கூறுகின்றான்: "நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள்" (நிஸா : 10). மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: "ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)". (பகரா : 278, 279).