கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் இஸ்லாத்தில் குடும்பத்தின் மகத்துவம்

இஸ்லாத்தில் குடும்பம் என்றால் என்ன? அதன் மகத்துவம் என்பவற்றை இப்பாடத்தில் அறிந்து கொள்வோம்.

  • இஸ்லாத்தில் குடும்பம் என்றால் என்ன என்பதை அறிதல்.
  • இஸ்லாத்தில் குடும்பத்தின் மகத்துவத்தை விளக்குதல்.
  • இஸ்லாத்தில் குடும்ப உருவாக்கத்தின் அடித்தளங்களை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

சமூகம் என்றால் என்ன

சமூகம் என்பது இனம், மொழி, வரலாறு போன்ற பொதுவான பிரிவுகளைக் கொண்ட தனிநபர்களின் குழுவைக் கொண்டுள்ளது. அவற்றை விட மகத்தானது மார்க்கமாகும். இந்த நபர்கள் கணவர், மனைவியர் என்ற திருமணக் குடும்பத்திலிருந்து உருவானவர்களாகும். இவர்களும் தம் பங்கிற்கு ஆண், பெண் பிள்ளைகளை உருவாக்கக்கூடிய புதுப்புது குடும்பங்களை உருவாக்கி அதே வழியில் துயர்கின்றனர். இதன் மூலம் சமூகம் நிலைத்து, தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

நல்ல திருமண வாழ்க்கைதான் ஒரு சமூகத்தில் நிலையான வாழ்விற்க்கு அடிப்படையாகும். எனவே குடும்பம் எனும் அடிப்படையில் கவனம் செலுத்துவதையே அதன் உட்பிரிவுகளில் கவனம் செலுத்துவதை விட முற்படுத்த வேண்டும்.

மனிதன் இயல்பிலேயே ஒரு சமூகப் பிறவியாக இருந்தாலும், அதன் உறுப்பினர்களுடன் பல உறவுகளைக் கொண்ட ஒரு சமூகத்தில் வாழ்வதைத் தவிர, அவனுக்கு வேறு எதுவும் வசதியாக இருக்காது. இருப்பினும் சில உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு மாத்திரம் அவன் ஒதுக்க வேண்டியுள்ளது. அவர்கள்தான் குடும்ப உறுப்பினர்கள். இஸ்லாத்தில் குடும்பம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் சட்டப்பூர்வ திருமணத்தால் ஒன்றிணைக்கப்பட்டு, அதன் மூலம் வரும் சந்ததியினரைக் கொண்ட சமூக அலகாகும்.

திருமணத்தை ஊக்குவிப்பதிலிருந்து ஆரம்பித்து, சிறார்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், ஒரே குடும்ப உறுப்பினர்களுக்கு மத்தியில் சட்டபூர்வமான தொடர்பை நெறிப்படுத்தல் போன்ற பல விடயங்கள் மூலம் இப்பகுதியில் கவனம் செலுத்துவதை இஸ்லாம் பொறுப்பேற்றுள்ளது. இந்தக் குடும்ப அமைப்பு தான் அல்லாஹ் விரும்பிய படி மனிதனின் மனிதாபிமானத்திற்கான பிரகாசமான தோற்றமாகும்.

இஸ்லாத்தில் குடும்பத்தின் மகத்துவம்

١
சம நிலையான மற்றும் பாதுகாப்பான மனித சமூக உருவாக்கத்திற்கான பிரதான அடிக்கல்லாக இஸ்லாத்தில் குடும்பமே திகழ்கின்றது.
٢
குடும்பம் என்பது கௌரவமான மற்றும் தூய்மையான தோற்றமாகும், அதிலிருந்து தான் உறுப்பினர்கள் உருவாகி, அதன் கீழ் பிணைப்புகள் உருவாகின்றன.
٣
இஸ்லாத்தில் உள்ள குடும்பம் என்பது மனிதனில் சமூக நடத்தை வகைகளை உருவாக்கும் முதல் கலமாகும். தனக்குரிய உரிமைகள், தன் மீதுள்ள கடமைகளை அக்குடும்பத்திலிருந்து தான் அறிந்து கொள்கின்றான்.
٤
இஸ்லாத்தில் குடும்பம்தான் தந்தையின் உள்ளுணர்வை தனது பரம்பரையை விரிவாக்கும் போக்கில் வளர்க்கிறது, எனவே மனித இனங்களை பாதுகாப்பதன் மூலம் அந்த இலக்கு அடையப்படுகிறது.
٥
இஸ்லாத்தில் குடும்ப அமைப்பு என்பது அல்லாஹ் தனது அடியார்களுக்கு வழங்கிய மிகப் பெரும் அருட் கொடையாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்". (நிஸா : 01).

இஸ்லாத்தில் திருமணம்

அல்லாஹ் ஆண் மற்றும் பெண் இருவரிடமும் மற்றவர் மீதான ஓர் ஈர்ப்பை விதைத்துள்ளான். இந்த ஈர்ப்பை நிவர்த்தி செய்து கொள்ளவும், மனித விருத்திக்கும், அதனைப் பாதுகாப்பதற்கும் திருமணத்தை சட்டபூர்வமான ஒரு வழியாக ஆக்கியுள்ளான். அல்குர்ஆன், மற்றும் ஸுன்னா திருமணத்தை அதிகம் ஊக்குவித்துள்ளது.

இஸ்லாமிய குடும்ப உருவாக்கம் இரண்டு முக்கிய தூண்களைச் சார்ந்துள்ளது

உளவியல் தூண்

இது அல்குர்ஆனில் குறித்துக் கூறப்பட்டுள்ள உள அமைதி, அன்பு, கருணை ஆகியவற்றை உள்ளடக்குகின்றன. அல்லாஹ் கூறுகின்றான் : "இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே அன்பையும், கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன". (ரூம் : 21).

உடலியல் தூண்

திருமண ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் பூரணமாகுதல், தம்பதியினர் ஒவ்வொருவரும் செலுவு செய்தல், பராமரித்தல், வீட்டு பணிகள் மற்றும் குழந்தை நலன்களை மேற்கொள்ளல் போன்ற தத்தமது கடமைகளைக் கடைபிடித்தல் போன்றவற்றில் இது பிரதிபலிக்கின்றது.

இக்கட்டமைப்பு சிதைந்து, அதன் கீழ் நிழல் பெறும் குடும்ப உறுப்பினர்கள் அங்குமிங்குமாக பிரிந்து விடாமலிருக்க இதல் அதிக கவனம் செலுத்தி, பாதுகாக்குமாறு ஒவ்வொரு தம்பதியினரையும் இஸ்லாம் தூண்டுகின்றது. அதனால்தான், இரு தரப்பினருக்கும் இடையே எந்த உணர்ச்சியும் இல்லாவிட்டாலும், பொறுமை மற்றும் திருமண உறவைத் தொடருமாறு அது வலியுறுத்துகிறது. அல்லாஹ் கூறுகின்றான் : "இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை; ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்". (நிஸா : 19).

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்