தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் இரு பாலினங்களுக்கிடையிலான தொடர்பிலுள்ள கட்டுப்பாடுகள்
இஸ்லாமிய ஷரியா பல்வேறு துறைகளிலும் மக்கள் விவகாரங்களை நிர்வகிப்பதில் அக்கறை கொண்டுள்ளது. ஆண், பெண்களுக்கிடையிலான தொடர்பும் இதில் ஒரு பகுதியாகும். அல்லாஹ் ஆண், பெண்களை ஒருவர் மற்றவரைக் கவரும் விதத்திலேயே படைத்துள்ளான். இந்தக் கவர்ச்சியின் முடிவு திருமணத்தின் மூலம் சட்டபூர்வமானதாக, போற்றப்படக்கூடியதாக ஆகிவிடுகின்றது. இதைத் தவிர வேறு வழிகள் கெடுதிகளின் வாயிலாக, மிகக் கடுமையான சோதனையாக மாறிவிடுகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "ஆண்களுக்குப் பெண்களை விடக் கவர்ச்சியான வேறெந்த சபலத்தையும் எனக்குப் பின்னால் நான் விட்டுச் செல்லவில்லை". (புஹாரி 5096, முஸ்லிம் 2741.)
ஆண், பெண்ணிற்கிடையிலான தொடர்பு இட்டுச்செல்லும் மிக மோசமான விடயம் விபச்சாரமாகும். இஸ்லாமிய ஷரீயா இந்த மானக்கேடான விடயத்தைத் தடுப்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல் அதனையும், அதன் ஆரம்ப நிலைகள், அதற்கு இட்டுச் செல்பவை அனைத்தையும் நெருங்கவும் வேண்டாமென தடைவிதித்துள்ளது. அல்லாஹ் கூறுகின்றான் : "நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.". (இஸ்ராஃ : 32). நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "கண்கள் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். காதுகள் செய்யும் விபசாரம் (ஆபாசப் பேச்சுகளைச்) செவியுறுவதாகும். நாவு செய்யும் விபசாரம் (ஆபாசப்) பேச்சாகும். கை செய்யும் விபசாரம் (அந்நியப் பெண்ணைப்) பற்றுவதாகும். கால் செய்யும் விபசாரம் (தவறான உறவைத் தேடி) அடியெடுத்து வைப்பதாகும். மனம் இச்சை கொள்கிறது; ஏங்குகிறது. மர்ம உறுப்பு அதை உண்மையாக்குகிறது; அல்லது பொய்யாக்குகிறது". (புஹாரி 6243, முஸ்லிம் 2657. இந்த வார்த்தை முஸ்லிமுக்குரியது).
பேரழிவுகரமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் எந்தவொரு விலகல் அல்லது பிழையைத் தவிர்ப்பதில் ஷரீஅத் கொண்ட ஆர்வத்தின் காரணமாக, கொடுக்கல், வாங்கல் போன்ற அனுமதிக்கப்பட்ட தேவைகளில், அலலது பெண் மருத்துவர் இல்லாத போது ஆண் மருத்துவரிடம் ஒரு பெண்ணுக்கு சிகிச்சை அளித்தல் போன்ற அத்தியவசிய நிலைகளின் போது ஆண்கள் பெண்களுடன் நடந்து கொள்ள சில வரையறைகளை விதித்துள்ளது. அவற்றுள் சில :
பார்வையைத் தாழ்த்துதல்
அல்லாஹ் கூறுகின்றான் : "(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். மேலும் (நபியே!) முஃமின்களான பெண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்". (நூர் : 30, 31).
தொடுதல், கைகுலுக்குதலைத் தவிர்த்தல்
நபி (ஸல்) அவர்கள் பெண்களிடம் உறுதிமொழி எடுத்த முறையை வர்ணிக்கும் போது ஆஇஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள் : "அல்லாஹ்வின் மீது சத்தியமாக நபி (ஸல்) அவர்களின் கரம் தனக்கு உரிமையில்லாத எந்தப் பெண்களுடைய கரத்தையும் தொட்டதில்லை". (புஹாரி 5288, முஸ்லிம் 1866).நபி (ஸல்) அவர்கள் கூறியதாக மஃகில் பின் யஸார் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : "இரும்புச் சீப்பினால் உங்களொருவரின் தலை கோதப்படுவது தனக்கு அனுமதிக்கப்படாத ஒரு பெண்ணின் கரத்தைத் தொடுவதை விட சிறந்ததாகும்". (தபரானீ 486, அஷ்ஷேக் அல்பானீ இதை ஸஹீஹ் எனக்கூறியுள்ளார்கள்).
தனித்திருப்பதை அறவே தவிர்க்க வேண்டும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "எந்தவொரு ஆணும் பெண்ணும் மஹ்ரமான (திருமணம் செய்யத் தடுக்கப்பட்ட நெருங்கிய உறவுக்கார) ஆணொருவர் இன்றித் தனித்திருக்க வேண்டாம்". (புஹாரி 5233, முஸ்லிம் 1341). கூறினார்கள் : "ஷைதான் அவ்விடத்தில் மூன்றாவதாளாக இருந்தே அன்றி உங்களில் ஒருவர் அன்னியப் பெண்ணுடன் தனித்திருக்க மாட்டார்". (அஹ்மத் 115). எனவே தனியாக இருப்பது, அல்லாஹ் தடைசெய்தவற்றில் ஆண்களையும் பெண்களையும் விழச் செய்ய ஷைதான் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு ஆழமான தீமைக்கான கதவாகும்.
தேவை நிமித்தம் ஆண்களுடன் கலக்கும் போது ஒரு முஸ்லிம் பெண் குறிப்பாகக் கடைபிடிக்க வேண்டிய பிரத்தியேகமான சில கட்டுப்பாடுகளும் உண்டு.
ஒரு முஸ்லிம் பெண் மார்க்க சட்டத்திற்குட்ப்பட்ட ஆடை வரையறைகளைக் கடைபிடிக்க வேண்டும், முதலில் அவள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படவும், அடுத்து அவளை மதிக்கவும், சொல், செயல், பார்வையின் மூலம் அவளைத் துன்புறுத்தாமலும் இருக்க ஆண்களை நிர்ப்பந்திக்கும் விதத்திலேயே அவளுடைய ஆடை அமைந்திருக்க வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான் : "மேலும் (நபியே!) முஃமின்களான பெண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்". (நூர் : 31). மேலும் கூறுகின்றான் : "நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்". (அஹ்ஸாப் : 59).
வாசனைத் திரவியங்களைத் தவிர்த்தல்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “தனது வாசனையை மக்கள் நுகர வேண்டுமென்பதற்காக வாசனைத் திரவியமிட்டுக் கொண்டு ஒரு கூட்டத்தாரைக் கடந்து செல்லும் பெண் விபச்சாரியாவாள்”. (நஸாஈ 5126).
ஆண்களுடன் குலைந்து பேசாமல் தீவிரத்தன்மையுடன் பேச வேண்டும்
அல்லாஹ் கூறுகின்றான் : "(அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்". (அஹ்ஸாப் : 32).
கண்ணியத்துடனும் அடக்கத்துடனும் நடக்க வேண்டும்.
மூஸா (அலை) அவர்களிடம் தனது தந்தையின் தகவலை எத்திவைக்க வந்த அந்த மத்யன் தேசத்து வயோதிபரின் புதல்வியைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான் : "பிறகு அவ்விரு பெண்களில் ஒருவர் நாணத்துடன் நடந்து மூஸாவின் முன் வந்தாள்". (கஸஸ் : 25). மேலும் கூறுகின்றான் : "மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்". (நூர் : 31).