கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் கணவன் மனைவியின் உரிமை, கடமைகள்

கணவன், மனைவி ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு செய்ய வேண்டிய கடமை, உரிமைகள் பற்றி இப்பாடத்தில் கற்போம்.

  • திருமண வாழ்வில் உரிமைகள், கடமைகள் பற்றிய பொதுவிதிகளை அறிதல்.
  • மனைவி கணவனுக்குச் செய்ய வேண்டிய சில கடமைகளை விளக்குதல்.
  • கணவன் மனைவிக்குச் செய்ய வேண்டிய சில கடமைகளை விளக்குதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

திருமண வாழ்க்கை உரிமைகள் மற்றும் கடமைகள்

இஸ்லாம் வாழ்க்கைத் துணைவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்ட கடமைகளுக்கு ஏற்றவாறு பல உரிமைகளை வழங்கியுள்ளது. வாழ்க்கைத் துணைவர்கள் ஒவ்வொருவரும் இந்தக் கடமைகளைச் செய்து, மறுக்காமல் மற்றவருக்கு உரிமையைக் கொடுப்பதன் மூலம்தான் அவர்களுக்கிடையேயான உறவு ஒழுங்கமைகின்றது. இருவருடைய கண்ணியமும் பாதுகாப்படுகின்றது. அல்லாஹ் ஆதம் (அலை) மற்றும் அவரது சந்ததியினரை உருவாக்கிய நோக்கத்தை அடையக்கூடிய ஒரு வெற்றிகரமான குடும்பத்திற்கு அடித்தளம் நிறுவப்படுகின்றது.

மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள்

١
குடும்பத்தின் மீதான அவரின் நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ளல்.
٢
கணவனின் உடமைகளைப் பாதுகாத்தல்.
٣
கணவன் இல்லாத சமயத்தில் அவரைப் பாதுகாத்தல்.
٤
அவரது குழந்தைகளைப் பாதுகாத்தல்.
٥
நல்லறங்கள், நற்செயல்கள் புரிவதற்கு மனைவி கணவனுக்குத் துணை புரிதல்.
٦
பெற்றோர் உட்பட தனது கடமை, தனது உறவினர்களின் கடமைகளை விட கணவனின் கடமைக்கு முன்னுரிமை வழங்குதல்.
٧
வீட்டுப் பணிகளைத் திட்டமிட்டு மேற்கொள்ளுதல்.

குடும்பத்தின் மீதான அவரின் நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ளல்.

அல்லாஹ் கூறுகின்றான் : "(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருப்பதாலும், (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்". (நிஸா : 34). கணவர் பிடிவாதமும் தனிச்சையும் இல்லாமல் சிறந்த முறையில் குடும்ப நிர்வாகத்தைச் செய்ய வேண்டும், நல்ல விடயங்களில் மனைவி அவருக்கு ஆதரவாக கீழ்ப்படிய வேண்டும், அல்லாஹ் தனது நீதம் மதிநுட்பத்தின் மூலம் அவருக்கு வழங்கியிருக்கும் அந்தஸ்த்தை மறுக்கக் கூடாது என்பதையே இது குறிக்கிறது.

கணவனின் உடமைகளைப் பாதுகாத்தல், அதனை உதாசீனம் செய்யக் கூடாது.

எனவே அவருடைய வெளிப்படையான அல்லது மறைமுக அனுமதியின்றி அவருடைய சொத்தை செலவு செய்வது கூடாது. இருப்பினும் வீட்டு செலவினங்களில் தன்னால் முடியுமாயிருந்தும் அலட்சியத்துடன் கணவன் நடந்து கொண்டால் வீண்விரயமோ, அளவுக்கதிகமோ இல்லாமல் தனது, மற்றும் குழந்தைகளது செலவினங்களுக்குப் போதியளவு பணத்தை அவரின் அனுமதியின்றி மனைவி எடுக்கலாம்.

கணவன் இல்லாத சமயத்தில் அவரைப் பாதுகாத்தல்

தனக்கு மஹ்ரம் இல்லாத எந்தவொரு ஆடவருக்கும் கணவன் இல்லாத சமயத்தில் வீட்டினுள் நுழைய அனுமதிக்கக் கூடாது, இதில் கணவன், மனைவி இருவருடையவும் உறவுக்காரர்களுக்கும் ஏனைய ஆடவர்களுக்கும் இடையில் வேறுபாடில்லை.

அவரது குழந்தைகளைப் பாதுகாத்தல்.

அக்குழந்தைகளை வளர்ப்பதில் அவருடன் இணைந்து பொறுப்புக்களைச் சுமக்க வேண்டும். குறிப்பாக ஆரம்பப் பருவங்களில் தந்தையின் பங்களிப்பை விட தாயின் பங்களிப்பே மிக முக்கியமானது. ஏனெனில் குழந்தைகள் தந்தையை விட தாயுடனேயே அதிகம் வாழ்ந்து, அவளிடமிருந்தே அதிகம் கற்றுக் கொள்கின்றனர்.

வீட்டுப் பணிகளைத் திட்டமிட்டு மேற்கொள்ளுதல்

அவள் அதனை நிர்வகித்து, அதன் விவகாரங்களை ஒழுங்கமைத்தல். வீட்டில் தன்னால் முடிந்தளவு பணிகளை மேற்கொள்ளல் அவள் மீது கடமையாகும்.

மனைவிக்கு கணவன் செய்ய வேண்டிய கடமைகள்

١
திருமண நன்கொடை (மஹ்ர்).
٢
அவளுக்குத் தேவையான மார்க்க விடயங்களைக் கற்றுக் கொடுத்தல்.
٣
மனைவி, வீடு, அதில் வசிப்போருக்கு செலவு செய்தல்.
٤
அழகிய முறையில் உறவாடுதல்.
٥
அவளிடம் நேசம், இரக்கத்தை வெளிப்படுத்தி, அவளுடைய பலவீனத்தைக் கருத்திற் கொள்ளல்.
٦
பலதாரமணத்தில் நீதம் செலுத்துதல்.

திருமண நன்கொடை (மஹ்ர்).

இது மனைவியின் உரிமையாகும். அவளுடைய உள்ளத்தை இணக்கப்படுத்தவும், தனது அன்பையும், ஆர்வத்தையும் உணரவைப்பதற்காகும் கணவன் மனைவிக்கு தானமாக, பரிசாகக் கொடுக்கின்றான். அல்லாஹ் கூறுகின்றான் : "நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் ". (நிஸா : 4).

மனைவி, வீடு, அதில் வசிப்போருக்கு செலவு செய்தல்.

இது அவர்களுக்குத் தேவையான உணவு, பானம், உடை, அலங்காரம், வீடு, என எல்லாவற்றிலும் சூழ்நிலைக்கு ஏற்ப தனது சக்திக்கும் வசதிக்கும் உட்பட்ட அளவில் வீண்விரயம் பாகுபாடின்றி அவரவர் தேவைக்கேற்ப வழங்குவதாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "தக்க வசதியுடையவர்கள், தம் வசதிக்கேற்ப (இவ்விஷயத்தில்) செலவு செய்து கொள்ளவும்; ஆனால், எவர் மீது அவருடைய உணவு (வசதி) நெருக்கடியாக்கப் பட்டுள்ளதோ, அவர் தமக்கு அல்லாஹ் கொடுத்ததிலிருந்து செலவு செய்து கொள்ளவும்; எந்த ஆத்மாவையும் அல்லாஹ் அதற்குக் கொடுத்திருப்பதேயல்லாமல் (மிகையாக செலவு செய்யும் படி) சிரமப்படுத்த மாட்டான்; கஷ்டத்திற்குப் பின்னர், அல்லாஹ் அதி சீக்கிரத்தில் இலகுவை (சுகத்தை) உண்டாக்கியருள்வான்". (தலாக் : 7).

அழகிய முறையில் உறவாடுதல்.

அதாவது நற்குணமுள்ளவராகவும், கடுகடுப்போ, கடின சித்தமோ இன்றி அவளுடன் கனிவாக நடந்து கொள்பவராகவும் இருக்க வேண்டும். மனைவியுடன் பொறுமையாக இருக்க வேண்டும். வெறுப்பு, கோபம் கொண்ட முகபாவத்துடன் இருத்தலாகாது. அல்லாஹ் கூறுகின்றான் : "இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை; ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்". (நிஸா : 19). நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : "முஃமினான ஆண் முஃமினான பெண்ணை வெறுக்க வேண்டாம், அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால் மற்றொரு குணத்தை நேசிக்கலாம்". (முஸ்லிம் 1469).

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்