தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் வியாபாரங்கள்
வியாபாரத்தின் வரைவிலக்கணம்
மொழி ரீதியாக வியாபாரம் என்பது பண்டமாற்றத்தைக் குறிக்கும் சொல்லாகும். பரிபாசையில் ஒரு பொருளுக்குப் பிரதியீடொன்றை பெற்றுக் கொண்டு உரிமத்தைப் பரிமாரிக் கொள்வதைக் குறிக்கின்றது.
வியாபாரத்தின் சட்டம்
அல்குர்ஆன், ஸுன்னா, இஜ்மாஃ அடிப்படையில் வியாபாரம் அனுமதிக்கப்பட்ட ஓர் ஒப்பந்தமாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கியுள்ளான்". (பகரா : 275).
வியாபாரம் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம்
1. ஒரு மனிதன் பிறரிடம் உள்ள உணவு, பானம், உடை, வீடு போன்றவற்றின்பால் தேவை காணுகின்றான். இவற்றின் உரிமையாளர் பிரதியீடின்றி கொடுக்க முன்வர மாட்டார். இருவரும் தாம் விரும்புவதைப் பெற்றுக் கொள்ளும் வழிமுறை உள்ளது. விற்பவர் கிரயத்தையும், வாங்குபவர் பொருளையும் பெறகின்றனர்.
2. வாழ்க்கை சிறந்த முறையில் நிலைத்திருத்தல். ஏனெனில் மனிதன் சில வேளை தனக்குத் தேவையானவற்றை வாங்குவதன் மூலமே அன்றி அடைய முடியாது.
3. சமூகத்தை சீர்குழைக்கும் திருட்டு, கொள்ளை, தந்திரம் போன்றவற்றைத் தடுத்தல். ஏனெனில் மனிதனுக்குத் தேவையானவற்றை வாங்கிப் பெற்றுக் கொள்ளலாம்.