கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் பெருந்தொடக்கும் குளிப்பும்

பெருந்தொடக்கிலிருந்து சுத்தமாக இஸ்லாம் குளிப்பை விதியாக்கியுள்ளது. குளிப்பைக் கடமையாக்குபவற்றையும், அதிலிருந்து சுத்தமாகும் முறையையும் இப்பாடத்தில் நாம் அறிவோம்.

  • குளிப்பைக் கடமையாக்குபவற்றை அறிதல்.
  • பெருந்தொடக்கிலிருந்து சுத்தமாகும் முறையை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

குளிப்பை விதியாக்கக் கூடியவை

அவை ஒரு முஸ்லிமிற்கு ஏற்பட்டால் தொழுகை, தவாப் ஆகியவற்றை நிறைவேற்ற முன் அவர் குளிப்பது கடமையாகக் கூடிய விடயங்களாகும். குளிப்பதற்கு முன்னர் அவர் பெருந்தொடக்குக்காரர் எனப்படுவார்.

1. விந்து வெளிப்படல்

தூக்கத்திலோ, விழிப்பிலோ, எந்த முறையிலும் சரி இச்சையுடன் விந்து வெளிப்பட்டால் குளிப்பு விதியாகின்றது. விந்து என்பது இச்சை உச்ச நிலையை அடையும் போது மனிதனின் மர்ம உறுப்பிலிருந்து வெளியாகும் வெள்ளை நிற கனமான திரவமாகும்.

2. உடலுறவு

ஆணுறுப்பை பெண்ணுறுப்பினுள் நுழைப்பதன் மூலம் உடலுறவு கொண்டால் விந்து வெளியாகா விட்டாலும் குளிப்பு விதியாகின்றது. குளிப்பு விதியாக ஆணுறுப்பின் முன்பகுதியை உட்செலுத்தினாலே போதுமாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "நீங்கள் (குளிப்புக் கடமையான) ஜனாபத்துடையவர்களாக இருந்தால் (குளித்து) சுத்தமாகிக் கொள்ளுங்கள்". (மாஇதா : 06).

3. மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வெளியாகுதல்

மாதவிடாய் என்பது பெண்ணின் கருவறையிலிருந்து மாதாந்தம் வெளிப்படும் இயற்கை உதிரப்போக்காகும். அது பெண்களின் இயல்பு நிலையைப் பொருத்து ஏழு நாட்களுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும். பிரசவ இரத்தம் என்பது ஒரு பெண் குழந்தை பிரசவித்ததன் காரணமாக அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு வெளியாகும் உதிரப்போக்காகும்.

மாதவிடாய், பிரசவ இரத்தம் வெளியாகும் பெண்ணின் தொழுகை மற்றும் நோன்பு

மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வெளியாகும் பெண்ணிற்கு அக்காலப்பகுதியில் இலகுபடுத்திக் கொடுக்கப்படும். அவளிடமிருந்து தொழுகையும், நோன்பும் தளர்த்தப்படும். சுத்தமானதன் பின்னர் விடுபட்ட நோன்பை மீண்டும் நோற்க வேண்டும். தொழுகையை மீட்ட வேண்டியதில்லை.

மாதவிடாய்ப் பெண்ணுடன் உடலுறவு கொள்ளுதல்

பெண்களின் அக்காலப் பகுதியில் கணவன்மார் அவர்களுடன் உடலுறவு கொள்வது கூடாது. அதுவல்லாமல் வேறு வகையில் இன்பம் அனுபவிக்கலாம். உதிரப்போக்கு நின்றவுடன் அப்பெண்கள் குளித்துக் கொள்வது கட்டாயமாகும். அல்லாஹ் கூறுகின்றான் : “ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்” (பகரா : 222).

பெருந்தொடக்கிலிருந்து ஒரு முஸ்லிம் எவ்வாறு சுத்தமாக வேண்டும்?

தான் சுத்தமாவதாக மனதால் நினைத்து தனது மேனி முழுதையும் நீரினால் கழுவினால் போதுமானதாகும்.

நபி (ஸல்) அவர்களின் குளிப்பு முறை

எனினும் நபி (ஸல்) அவர்கள் குளித்ததைப் போன்று குளிப்பதே பரிபூரணமாகும். அன்னார் கடமையான குளிப்பை நிறைவேற்ற நாடினால் தனது இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவிவிட்டு, பின் தனது அபத்தையும், விந்து பட்ட இடங்களையும் கழுவுவார்கள். பின் பரிபூரணமாாக வுழூச் செய்வார்கள். பின் தலையை மூன்று முறை கழுவிவிட்டு மேனியின் எஞ்சிய பகுதிகளைக் கழுவுவார்கள்.

கடமையான குளிப்பு வுழூவுக்குப் பதிலாகுமா?

ஒரு முஸ்லிம் கடமையான குளிப்பை நிறைவேற்றினால் அது வுழூவுக்கும் சேர்த்து போதுமானதாகும். குளிப்புடன் சேர்த்து வுழூவும் செய்யவேண்டிய அவசியமில்லை. எனினும் நபிவழியின் படி வுழூவுடன் சேர்த்து குளிப்பதே மிகச் சிறந்ததாகும்.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்