தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் சுத்தம் என்ற பாடத்தில் சில சிறப்பு நிலைகள்
சாக்ஸ்கள் மீது மஸ்ஹு செய்தல்
வுழூவிலே கால்களைக் கழுவுவதற்குப் பதிலாக கரண்டைக் கால் வரை மூடப்பட்ட பாதணி, அல்லது சாக்ஸின் மேல்பகுதியில் ஈரமான கையினால் மஸ்ஹு செய்ய ஒரு முஸ்லிமால் முடியுமென்பது இஸ்லாத்தின் தாராளத் தன்மையிலுள்ளதாகும்.
(வுழூ அல்லது கடமையான குளிப்பு மூலம்) சுத்தமாக உள்ள நிலையில் ஒருவர் பாதணி அல்லது சாக்ஸ் அணிந்தால் அடுத்த வுழூவின் போது அவற்றில் மஸ்ஹு செய்யலாம்.
சாக்ஸ்களில் மஸ்ஹு செய்வதற்கான கால எல்லை
வுழூவில் மாத்திரமே அவ்வாறு பாதணிகளில் மஸ்ஹு செய்யலாம். கடமையான குளிப்பின் போது கால்களை அவசியம் கழுவ வேண்டும்.
பாதணி அணிந்ததன் பின் முதல் தடவை மஸ்ஹு செய்ததிலிருந்தே கால எல்லை ஆரம்பிக்கின்றது.
முறிவு, காயம் ஏற்படும்போது வேகமாகக் குணமடையவோ, வவி குறையவோ வுழூவின் உறுப்புக்களில் போடப்படும் கட்டுக்களே இங்கு பேசப்படுகின்ற தலைப்பாகும்.
வுழூவின் போதோ, கடமையான குளிப்பின் போதோ தேவையேற்படின் காயக்கட்டுகள் மீது ஈரமான கையினால் மஸ்ஹு செய்ய முடியும்.
குறிப்பிட்ட உறுப்பில் வெளிப்பகுதிகளை நீரினால் கழுவிவிட்டு, காயக்கட்டினால் மூடப்பட்ட பகுதியில் அதன் மீது மஸ்ஹு செய்ய வேண்டும்.
காயக்கட்டில் மஸ்ஹு செய்வதற்கான கால எல்லை
மஸ்ஹு செய்யும் தேவையிருக்கும் காலமெல்லாம் எவ்வளவு காலமாயினும் சரி தொடர்ந்து மஸ்ஹு செய்யலாம். தேவை முடிந்ததும் கட்டுக்களை அவிழ்த்து அவ் உறுப்புக்களைக் கழுவ வேண்டும்.
தண்ணீர் பயன்படுத்த முடியாதவர்கள்
நோயின் காரணமாகவோ, தண்ணீரின்மையாலோ, அல்லாது பற்றாக்குறையாலோ வுழூ அல்லது குளிப்புக்காக ஒரு முஸ்லிமுக்குத் தண்ணீர் பயன்படுத்த முடியாவிட்டால் அது கிடைக்கும் வரை, அல்லது பயன்படுத்த இயலுமாகும்வரை மணலினால் தயம்மும் செய்ய முடியும்.
தயம்மும் செய்யும் முறை
தனது இரு கைகளாலும் மணில் ஒரு தடவை அடிக்க வேண்டும்.
கையில் ஒட்டிய மணலால் முகத்தைத் தடவிக்கொள்ள வேண்டும்.
இரு கைகளையும் மணிக்கட்டு வரை தடவிக்கொள்ளல்.