கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் இயற்கை மரபுகள்

ஒரு முஸ்லிம் பிறர் முன்னிலையில் சிறப்பாக விளங்குவதற்காக அல்லாஹ் அவனிடம் சில பரிபூரண பண்புகளை இயல்பாகவே வைத்துள்ளான். இப்பாடத்தில் அவ்வாறான சில இயற்கை மரபுகளையும் அதன் சட்டங்களையும் அறிவோம்.

  • இயற்கை மரபுகளை அறிதல்.
  • இயற்கை மரபுகளின் சட்டங்களை அறிதல்.
  • இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

    இயற்கை மரபுகள்

    இது அல்லாஹ் இயல்பாகவே மனிதர்களில் ஏற்படுத்திய மரபுகள், அவற்றைச் செய்வதன் மூலம் ஒரு முஸ்லிம் முழுமையடைந்து அழகிய தோற்றத்திலும், சிறந்த பண்புகளிலும் காட்சி தருகின்றான். ஏனெனில் ஒரு முஸ்லிமிடம் உள்ரங்கமான வெளிப்படையான சீர்திருத்தங்கள் அனைத்தும் ஒருங்கிணைவதற்காக இல்ஸாம் அழகியல் மற்றும் நிரப்பு அம்சங்களிலும் கவனம் செலுத்தியுள்ளது.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "இயற்கை மரபுகள் ஐந்துள்ளன : கத்னா செய்தல், மர்ம உறுப்பின் முடிகளை அகற்றுதல், மீசையை கத்தரித்தல், நகம் வெட்டுதல், அக்குள் முடிகளை பிடுங்குதல்". (புஹாரி 5552, முஸ்லிம் 257).

    கத்னாச் செய்தல்

    இது ஆணுறுப்பின் முன்தோலை நீக்குவதைக் குறிக்கின்றது. பெரும்பாலும் குழந்தை பிறந்து ஆரம்ப நாட்களில் இது மேற்கொள்ளப்படும். இது ஆண்களுக்கு வலியுறுத்தப்பட்ட ஸுன்னாவாகவும், இயற்கை மரபாகவும் உள்ளது. இதில் பல ஆரோக்கிய பலன்கள் உள்ளன.

    மர்ம உறுப்பின் முடிகளை நீக்குதல்

    இது மர்ம உறுப்பில் முளைக்கும் கனமான முடிகளை மழிப்பதன் மூலமோ வேறு வழிகளிலோ நீக்குதலைக் குறிக்கின்றது.

    மீசையை கத்தரித்தல்

    மீசையை வளர விடுவது அனுமதிக்கப்பட்டதே தவிர ஸுன்னத்தல்ல. எனினும் அதனை ஒரு முஸ்லிம் வளர விட்டால் அளவுக்கதிகமாக வளர்க்காமல் கத்தரிப்பதன் மூலமோ, குறைப்பதன் மூலமோ கவனித்துக் கொள்வது அவசியமாகும்.

    தாடி வளர்த்தல்

    இரு தாடைகள் மற்றும் நாடிப்பகுதியில் வளரும் தாடியை அவ்வாறே வளர்ப்பதை இஸ்லாம் ஊக்குவிக்கின்றது. அதாவது நபியவர்களது ஸுன்னாவைப் பின்பற்றி அதை மழிக்காமல் அவ்வாறே வளர விட்டு வைக்க வேண்டும்.

    மிஸ்வாக் செய்தல்

    பல் துலக்குவதற்காக அராக் எனும் குச்சி, அல்லது வேறு பொருட்களைப் பயன்படுத்துவதே மிஸ்வாக் எனப்படுகின்றது. இது ஸுன்னத்தான ஒரு வணக்கமாகும்.

    நகங்களை வெட்டுதல்

    அழுக்கு, ஊத்தைகள் தங்கியிருக்காமல் இருக்க நகங்களைக் கவனித்து வெட்டிக் கொள்வது அவசியமாகும்.

    அக்குள் முடிகளை நீக்குதல்

    அக்குள் பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசாமலிருப்பதற்காக அதன் முடிகளை பிடுங்கவதன் மூலமோ, வேறு சவரக்கத்திகள் மூலமோ நீக்குவது அவசியமாகும்.

    மடிப்புகளைக் கழுவுதல்

    மடிப்புகள் என்பது விரல்களுக்கு இடையில் உள்ள இடுக்குகள், வளைவுகளாகும். அவற்றைக் கழுவுவது ஸுன்னத்தாகும்.

    மலசலத்தை சுத்தம் செய்தல், வாய் கொப்பளித்தல், மூக்கினுள் நீர் செலுத்தி சிந்தி விடுதல்.

    இயற்கைத் தேவைகளை நிறைவேற்றுதல், அதன் ஒழுக்கங்கள், மற்றும் வுழூவின் பாடங்களில் இம்மூன்றும் ஏற்கனவே கூறப்பட்டுவிட்டது.

    உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


    பரீட்சையை ஆரம்பிக்கவும்