தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் ஸூரா பாதிஹாவின் அர்த்தம்
ஸூரா பாதிஹா தொழுகையின் பிரதான தூணாகும். அதுவன்றி தொழுகையில்லை.
அல்லாஹ்வை அவனது அனைத்து பண்புகள், செயல்கள், உள்ரங்கமான, வெளிப்படையான அருட்கொடைகளை வைத்து நேசத்துடனும், மகத்துவப்படுத்தியும் நான் புகழ்கின்றேன். இரட்சகன் என்பது படைப்பாளன், ஆட்சியாளன், விரும்பியவாறு செயற்படுபவன், உபகாரம் புரிபவன் எனும் அர்த்தங்களைக் குறிக்கும்சொல்லாகும். அகிலத்தார் என்போர் அல்லாஹ் அல்லாத பிரபஞ்சத்திலுள்ள அனைத்து மனு, ஜின்கள், வானவர்கள், ஜீவராசிகள் அனைவருமாகும்.
ரஹ்மான், ரஹீம் ஆகிய இரண்டும் அல்லாஹ்வின் இரு பெயர்களாகும். ரஹ்மான் என்பது அனைத்திற்கும் அருள்புரிபவன் எனும் கருத்தைக் குறிக்கும் சொல்லாகும். ரஹீம் என்பது நல்லடியார்களுக்கு மாத்திரம் அருள்புரிபவன் எனும் கருத்தைக் குறிக்கும் சொல்லாகும்.
விசாரணை செய்து, கூலி வழங்கப்படும் நாளின் செல்வாக்குள்ள அதிபதி அவனே. இவ்வசனம் ஒரு முஸ்லிமுக்கு மறுமையை நினைவுருத்தி, நற்செயல்கள் செய்யத் தூண்டுகின்றது.
இறைவா நாம் உன்னை மாத்திரமே வணங்குகின்றோம், எந்தவொரு வணக்கத்திலும் உன்னுடன் யாரையும் இணையாக்க மாட்டோம். எமது சகல காரியங்களிலும் உன்னிடம் மாத்திரமே உதவி தேடுகின்றோம். அனைத்து காரியங்களும் உன் கையிலேயே. அதில் யாருக்கும் அனுவளவிலும் எந்த அதிகாரமும் இல்லை.
எமக்கு நேரான பாதையைக் காட்டி, அதனைப் பின்பற்றும் பாக்கியத்தைத் தந்து, உன்னை சந்திக்கும் வரை அதில் உறுதியாக இருக்கச் செய்வாயாக. நேரான பாதை என்பது அல்லாஹ்வின் பொருத்தம் மற்றும் சுவனத்தின்பால் இட்டுச் செல்லும் , இறுதித் தூதர் முஹம்மத் ஸல் அவர்கள் அவர்கள் காட்டித் தந்த இஸ்லாம் மார்க்கமாகும். அதில் நிலைத்திருப்பதைத் தவிர ஓர் அடியானுக்கு வெற்றி பெற வேறு வழி கிடையாது.
அதாவது சத்தியத்தை அறிந்து அதனைப் பின்பற்றிய நபிமார்கள், நல்லடியார்களுக்கு நேர்வழி காட்டி, அதில் நிலைத்திருக்க நீ அருள் புரிந்தாயே அந்த வழியாகும், நீ கோபித்துக் கொண்டவர்களின் வழியை விட்டும் எம்மைைத் தூரப்படுத்துவாயாக. ஏனெனில் அவர்கள் சத்தியத்தை அறிந்தார்கள். ஆனால் அதன்படி செயற்படவில்லை. மேலும் வழிகெட்டவர்களின் பாதையை விட்டும் எம்மைத் தூரப்படுத்துவாயாக. அவர்கள்தான் தமது அறியாமையின் காரணமாக நேர்வழி பெறாதவர்கள்.