கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் ரமழானில் நோன்பு நோற்றல்.

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் நான்காவது தூணாகவும், பாரிய அடிப்படையாகவும் உள்ளது. நோன்பின் அர்த்தம், அதன் சிறப்பு, ரமழான் மாதத்தின் சிறப்பு என்பவற்றை இப்பாடத்தில் கற்போம்,

  • நோன்பின் அர்த்தம், அதன் சிறப்பு என்பவற்றை அறிதல்.
  • ரமழான் மாதத்தின் சிறப்பை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

இந்தப் பாடத்தின் மொழிபெயர்ப்பு பின்வரும் மொழிகளில் கிடைக்கிறது:

வருடத்தில் ஒரு மாதம் முழுதும் நோன்பு நோற்பதை அல்லாஹ் முஸ்லிம்களுக்கு கடமையாக்கியுள்ளான். அதுதான் புனித ரமழான் மாதமாகும். அதில் நோன்பு நோற்பதை இஸ்லாத்தின் மிகப் பெரும் தூண்களில் நான்காம் தூணாக ஆக்கியுள்ளான். அல்லாஹ் கூறுகின்றான் : “ஈமான் கொண்டோர்களே! நீங்கள் இறையச்சமுடையோர் ஆவதற்காக உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது”. (பகரா : 183).

நோன்பு என்பதன் அர்த்தம்

பஜ்ர் உதயமானதிலிருந்து- பஜ்ர் அதான் ஒலிக்கும் நேரம்- சூரியன் அஸ்தமிக்கும்- மஃரிப் அதான் ஒலிக்கும் நேரம்- வரை உண்ணல், பருகல், உடலுறவு கொள்ளல் மற்றும் சில விடயங்களைத் தவிரந்து கொள்வதன் மூலம் அல்லாஹ்வை வணங்குவதே இஸ்லாத்தில் நோன்பாகும்.

ரமழான் மாதத்தின் சிறப்பு

இஸ்லாமிய நாட்காட்டியில் சந்திர மாதங்களில் ஒன்பதாவது மாதமே ரமாழானாகும். இதுதான் வருடத்தில் சிறந்த மாதமாகும். ஏனைய மாதங்களை விட அல்லாஹ் இம்மாதத்திற்கு பல சிறப்புக்களை வைத்துள்ளான். அவற்றில் சில :

1. வேதங்களில் மகத்தானது இறங்குவதற்கு இம்மாதத்தைத் தான் அல்லாஹ் குறிப்பாக தேர்வு செயதுள்ளான்.

அதுதான் சங்கை மிக்க அல்குர்ஆனாகும். அல்லாஹ் கூறுகின்றான் : “ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்”. (பகரா : 185).

2. சுவன வாயில்கள் திறக்கப்படுவது இம்மாதத்தில் தான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "ரமழான் நுழைந்து விட்டால் சுவன வாயில்கள் திறக்கப்படுகின்றன. நரக வாயில்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்". (புஹாரி 3103, முஸ்லிம் 1079). பாவங்களைத் துறந்து நன்மைகளைச் செய்வதன் மூலம் அல்லாஹ்வை அடியார்கள் முன்னோக்கவே இவ்வேற்பாட்டை அவன் செய்துள்ளான்.

3. இம்மாதத்தில் பகலில் நோன்பு நோற்று, இரவில் நின்று வணங்குபவருடைய முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "எவர் ரமழான் மாதத்தில் ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் நோன்பு நோற்கிறாரோ அவருடை முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன". (புஹாரி 1910, முஸ்லிம் 760). மேலும் கூறினார்கள் : "எவர் ரமழான் மாதத்தில் ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் இரவில் நின்று வணங்குகிறாரோ அவருடை முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன". (புஹாரி 1905, முஸ்லிம் 759).

4. அதில்தான் வருட்டத்திலேயே மிக மகத்தான இரவுள்ளது.

அதுதான் லைலதுல் கத்ர் எனும் கண்ணியமிக்க இரவாகும். அதில் நற்செயல் புரிவது பல காலங்கள் நற்செயல் புரிவதை விடச் சிறந்ததாக அல்லாஹ் அறிவித்துள்ளான். "கண்ணியமிக்க இரவானது ஆயிரம் மாதங்களை விட சிறந்ததாகும்". (கத்ர் : 3). அந்த இரவில் ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் இரவில் நின்று வணங்குபவருடை முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. இது ரமழானின் இறுதிப் பத்து தினங்களில் ஒன்றாகும். அது எந்த இரவு என்பது சரியாக யாரும் அறியமாட்டார்கள்.

நோன்பின் சிறப்பு

நோன்பு நோற்பது பற்றி மார்க்கத்தில் பல சிறப்புக்கள் வந்துள்ளன. அவற்றில் சில :

1. பாவங்கள் மன்னிக்கப்படுதல்.

அல்லாஹ்வை நம்பி, அவனது ஏவல்களுக்குக் கட்டுப்பட்டு, நோன்பு பற்றி வந்துள்ள சிறப்புக்களை உண்மைப்படுத்தி அல்லாஹ்விடத்தில் நன்மையை எதிர்பார்த்து நோன்பு நோற்பவருடைய முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "எவர் ரமழான் மாதத்தில் ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் நோன்பு நோற்கிறாரோ அவருடை முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன". (புஹாரி 1910, முஸ்லிம் 760).

2. நோன்பாளி அல்லாஹ்வை சந்திக்கும்போது அவனிடமிருந்து கிடைக்கும் வெகுமதி, இன்பங்களைப் பார்த்து சந்தோசப்படுகின்றான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு திறக்கும் போது, மற்றது தனது இரட்சகனை சந்திக்கும் போதாகும்.". (புஹாரி 1805, முஸ்லிம் 1151).

3. சுவனத்தில் ரய்யான் எனும் வாயிலுள்ளது. நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் அதனூடாக உள் நுழைய முடியாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''சொர்க்கத்தில் 'ரய்யான்' என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! 'நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!'' (புஹாரி 1896, முஸ்லிம் 1152).

4. நோன்பாளிக்கான கூலி, வெகுமதிகளை அல்லாஹ் தன் பக்கம் சேர்த்துள்ளான்.

யாருடைய வெகுமதியும் கூலியும் மகத்தான தயாளன், கருணையுள்ள கொடையாளனின் பொறுப்பில் இருக்கின்றதோ அவருக்காக அவன் தயாரித்து வைத்துள்ளதை எண்ணி நற்செய்தி பெறட்டும். அல்லாஹ் கூறியதாக நபி ஸல் அவர்கள் கூறினார்கள் : ''நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு(மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!'' என்று அல்லாஹ் கூறினான். (புஹாரி 1904, முஸ்லிம் 1151).

நோன்பின் உள்நோக்கு.

ஈருலகிலுமுள்ள பல உள்நோக்குகளுக்காகவும், பல நுட்பங்களுக்காகவும் அல்லாஹ் நோன்பை விதியாக்கியுள்ளான். அவற்றில் சில :

1. இறையச்சை உண்டாக்குதல்.

ஏனெனில் நோன்பு என்பது ஓர் அடியான் தனக்கு விருப்பமானதை விட்டு, இச்சைகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தனது இரட்சகளை நெருங்கும் ஒரு வணக்கமாகும்.

2. பாவங்களைக் களைவதற்கான ஒரு பயிற்சியாகும்.

ஏனெனில் நோன்பாளி அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அனுமதிக்கப்பட்டதையே தவிர்ந்து கொள்வதானது அவனை தடுக்கப்பட்ட பாவங்களை விட்டும் தனது இச்சையைக் கட்டுப்படுத்த மிகப் பெரும் சக்தி பெற்றவனாக ஆக்குகின்றது.

3. வறியவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு உதவுதல்.

ஏனெனில் பட்டினி, ஒன்று கிடைக்காமல் இருப்பது போன்றவற்றின் அனுபவம், மற்றும் நெடுங்காலமாக வறியவர்களாக இருப்போரை நினைவுகூர்வது போன்றன நோன்பில் கிடைக்கின்றது. எனவே மனிதன் தனது வறிய சகோதரர்களையும், அவர்கள் பட்டினி, தாகம் ஆகிய கசப்பான அனுபவங்களால் எவ்வளவு சிரமப்படுகின்றனர் என்பதை நினைவுகூர்ந்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முயற்சிக்கின்றான்.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்