தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் வானவர்களை நம்புதல்
வானவர்களை நம்புவதன் அர்த்தம்
வானவர்களின் இருப்பை ஆணித்தரமாக உண்மைப்படுத்துவதுடன், அவர்கள் மனு, ஜின் உலகங்களை விட்டும் வேறுபட்ட மறைவான உலகைச் சார்ந்தவர்கள் என நம்புதலாகும். அவர்கள் இறையச்சமுள்ள கண்ணியவான்கள். அல்லாஹ்வை உண்மையாக வணங்கக் கூடியவர்கள். அவன் ஏவியதை அமுல்படுத்துவார்கள். ஒருபோதும் அவனுக்கு மாறு செய்ய மாட்டார்கள். அல்லாஹ் கூறுகின்றான் : “மாறாக அவர்கள் கண்ணியமான அடியார்கள். எந்த வார்த்தை மூலம் அவர்கள் அவனை முந்திவிட மாட்டார்கள். அவனது கட்டளைப் படியே செயல்படுவார்கள்”. (அன்பியாஃ : 26, 27).
வானவர்களை நம்புவதன் முக்கியத்துவம்
இறைநம்பிக்கையின் ஆறு அம்சங்களில் வானவர்களை நம்புவதும் ஒன்றாகும். அல்லாஹ் கூறுகின்றான் : “(இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்” (பகரா : 285). நபி (ஸல்) அவர்கள் இறைநம்பிக்கையைப் பற்றி : “நீர் அல்லாஹ்வையும், அவனது வானவர்கள், வேதங்கள், தூதர்கள், மறுமை நாளையும், விதியையும் நம்புவதாகும் என்றார்கள்”. (முஸ்லிம் : 08).
வானவர்களை நம்புவது அனைத்து முஸ்லிம்கள் மீதும் கடமையாகும். அதனை மறுப்பவன் நெறிபிறழ்ந்து, வழி தவறிப்போகின்றான். அல்லாஹ் கூறுகின்றான் : “எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிட்டார்”. (நிஸா : 136). மேற்கண்ட விடயங்களை மறுத்தவனுக்கு இறைநிராகரிப்பாளன் எனப் பொதுவாகக் கூறியுள்ளான் .
வானம் அதிலுள்ளவர்களின் சுமையால் கனத்துவிட்டதாக நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள். அங்கு நிலையிலோ, ருகூஃவிலோ, ஸுஜூதிலோ ஒரு வானவர் அல்லாஹ்வை வணங்காமல் ஒரு சாண் அளவு கூட இடமில்லை.
வானவர்களை நம்புதவதன் உள்ளடக்கம் எவை?
நாம் நம்பிக்கை கொள்ள வேண்டிய வானவர்களின் சில பண்புகள்
அல்லாஹ் வானவர்களுக்குப் பல பொறுப்புக்களை சாட்டியுள்ளான். அவற்றுள் சில :
ஒரு மனிதன் விபத்திலிருந்து மயிரிழையில் உயிர்தப்புவதைப் பார்த்து நாம் பலதடவை வியக்கிரோம். அல்லாஹ்வின் கட்டளைப் பிரகாரம் மனிதர்களை ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பதும் வனவர்களின் பணிகளில் உள்ளது என்பதை நாம் மறந்துவிடலாகாது.