கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் ஒரு கணவராக நபி (ஸல்) அவர்கள்

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியை, தனது வீட்டில் நபியவர்கள் மனைவியருடன் நடந்து கொண்ட முறைகளை இப்பாடத்தில் கற்போம்.

  • நபி (ஸல்) அவர்களின் வீட்டு நிலைமைகளை அறிந்து கொள்ளுதல்.
  • தனது குடும்பத்தினருடன் நபியவர்கள் நடந்து கொண்ட அன்னாரின் உயர்ந்த குணங்களை அறிதல்.
  • மனைவிமார்களுடன் நடந்து கொள்ளும் முறையில் நபி (ஸல்) அவர்களை பின்பற்றுதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

நபிமார்களைப் பின்பற்றுதல், அவர்களது நற்பண்புகளை எடுத்தொழுகுதல், அவர்களைப் போன்றே நற்காரியங்கள் செய்தல் என்பவற்றில் மனிதர்களுக்கு ஆதாரமாக அமைவதற்காக அல்லாஹ் தனது தூதர்களை மனிதர்களாக ஆக்கியுள்ளது அவனது மதிநுட்பத்திலுள்ளதாகும். அல்லாஹ்வுடைய மார்க்கம், நபி (ஸல்) அவர்களின் வழிமுறை ஆகியவற்றைப் பின்பற்றி, அன்னாரின் வழி நடப்பதிலேயே ஒரு மனிதனின் ஈருலக சுபீட்சம் தங்கியுள்ளது. எனவே தனது வீட்டிலோ, வாழ்வின் ஏனைய விடயங்களிலோ நபியவர்களைப் பின்பற்றுவதற்காக அன்னாரின் வாழ்வைப் புரட்டிப் படிக்க ஒரு முஸ்லிம் ஆர்வம் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்களது குடும்ப வாழ்க்கைதான் அனைத்து மனித சமூகத்திற்கும் ஒரு முன்னுதாரணம். அல்லாஹ்வின் திருப்தி, மற்றும் ஈருலக சுபீட்சத்தை எதிர்பார்க்கும் ஒவ்வொரு குடும்பத்தினரும் அவசியம் பின்பற்ற வேண்டிய முன்னுதாரணமும் அன்னாரின் வாழ்க்கைமுறைதான். அல்லாஹ் கூறுகின்றான் : "நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது". (அஹ்ஸாப் : 21).

தனது மனைவியரிடுனான நபி (ஸல்) அவர்களின் நற்குணங்கள் சில :

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆஇஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "உங்களில் மனைவியரிடத்தில் சிறந்தவரே உங்களில் சிறந்தவராகும், நான் எனது மனைவியரிடத்தில் சிறந்தவராவேன்". (திர்மிதீ 3895). தமது மனைவியருடன் சிறப்பாக நடக்குமாறு நபியவர்கள் தனது சமூகத்து ஆடர்வர்களுக்குப் பணிக்கின்றார்கள். அவ்வாறு நடப்போரைப் பாராட்டியுள்ளார்கள். தான் இதில் சிறந்த முன்மாதிரி என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

மனைவியரின் நியாயமான ஆசைகளுக்கு முக்கியத்துவமளித்து, அவற்றில் நபியவர்கள் கவனம் செலுத்துவார்கள்.

ஆஇஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "நபி (ஸல்) அவர்கள் என்னைத் தம் மேல் துண்டால் மறைத்துக் கொண்டிருக்க பள்ளிவாசல் வளாகத்தில் (ஈட்டியெறிந்து) விளையாடிக் கொண்டிருந்த அபிசீனியர்களை நான் (என் வீட்டிலிருந்தபடி) பார்த்துக் கொண்டிருந்தேன். நானாகச் சடைந்துவிடும் வரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்". (புஹாரி 5236, முஸ்லிம் 892). கணவன் புத்திசாலியாகவும், தன் மனைவியின் ஆசைகளில் அக்கறையுள்ளவனாகவும், அவளுடைய உளவியல் தேவைகளைப் மதித்து, அவளுக்காக அவற்றை நிறைவேற்றுவது நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதில் உள்ளதாகும்.

ஏன் அதையும் தாண்டி ஒரு மனிதன் தனது மனைவியுடன் கொஞ்சிக் குழாவுவதைக் கூட நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கப்பட்ட பொழுதுகோக்காகக் கணித்துள்ளதுடன், அதைத் தடை செய்யப்பட்ட ஒன்றாக இருப்பதை மறுத்துள்ளார்கள். அன்னார் கூறினார்கள் : "மூன்று விடயங்களைத் தவிர அல்லாஹ்வை நினைவுகூராமலிருக்கும் அனைத்தும் வீணானதாகும். அவையாவன : தனது வில்லிலிருந்து அம்பெறிதல், தனது குதிரையைப் பயிற்றுவித்தல், மனைவியுடன் கொஞ்சிக் குழாவுதல்". (அஹ்மத் 17337).

ஆஇஷா (ரலி) கூறுகின்றார்கள் : "நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்த போது நபியவர்களுடன் ஓட்டப்பந்தயம் செய்து, அதில் வெற்றியும் பெற்றேன். எனது மேனியில் சதை போட்ட பின் மற்றுமொரு நாள் அன்னாருடன் ஓட்டப்பந்தயம் செய்து அதில் அன்னார் வெற்றி பெற்று விட்டு, "இது அதற்கு பதில்" என்றார்கள்". (அபூ தாவூத் 2257). எனவே நபியவர்கள் தனது மனைவியருடன் கொஞ்சி, விளையாடுவார்கள், அவர்களது வேலைப்பளுக்களை இலகுபடுத்திக் கொடுப்பார்கள். எனவே திருமண வாழ்க்கை சலிப்பானதாக, சோர்வானதாக இருக்க மாட்டாது.

குடும்பப் பிரச்சினைகளக் கையாள்வதில் நபியவர்களின் மதிநுட்பம்

குடும்ப அங்கத்தவர்களிடையே பிரச்சினைகள் இல்லாமல் எந்த வீடும் இருக்க மாட்டாது. இவ்வாறான பிரச்சினைகளைக் கையாள்வதில் நபி(ஸல்) அவர்கள் எமக்கு ஓர் உதாரணப்புர்சராக இருந்துள்ளார்கள். அனஸ் இப்னு மாலிக் (ரலி) கூறுகின்றார் : (ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரிடம் இருந்(து கொண்டிருந்)தார்கள். நபியவர்களுடைய மற்றொரு துணைவியார் உணவுப் பண்டமுள்ள தட்டு ஒன்றை (நபியவர்களுக்காகப் பணியாள் ஒருவரிடம்) கொடுத்தனுப்பினார்கள். (அப்போது) நபி(ஸல்) அவர்கள் எவருடைய வீட்டில் தங்கியிருந்தார்களோ அந்தத் துணைவியார் (ரோஷத்தில்) அந்தப் பணியாளரின் கையைத் தட்டிவிட்டார். அந்தத் தட்டு (கீழே விழுந்து) உடைந்துவிட்டது. உடனே (ஆத்திரப்படாமல்) நபி(ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டின் துண்டுகளை ஒன்று சேர்த்தார்கள். பிறகு தட்டிலிருந்த உணவை (மீண்டும்) அதிலேயே ஒன்று சேர்க்கலானார்கள். மேலும், (அங்கிருந்த தோழர்களை நோக்கி), 'உங்கள் தாயார் ரோஷப்பட்டுவிட்டார்'' என்று கூறினார்கள். பின்னர் அந்தப் பணியாளை (அங்கேயே) நிறுத்திவிட்டு தாமிருந்த வீட்டுக்கார (துணைவியா)ரிடமிருந்து மற்றொரு தட்டைக்கொண்டு வரச் செய்து, உடைபட்ட தட்டுக்குரியவரிடம் நல்ல தட்டை (மாற்றாக)க் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். உடைந்த தட்டை உடைக்கப்பட்ட வீட்டிலேயே வைத்துவிட்டார்கள். (புஹாரி 5225).

நபி (ஸல்) அவர்களின் மனைவியரோ அல்லது அவரது வீட்டு மக்களிடமோ இயற்கையான உணர்வுகளால் வெளிப்பட்ட செயல்களால் அன்னாரின் மனம் நெருக்கடிக்குள்ளாகவில்லை.எல்லாச் சூழ்நிலைகளையும் சாதுர்யத்துடனும் விவேகத்துடனும் கையாள்வார்கள். அச்சூழ்நிலை சண்டை சச்சரவுகளை ஏற்படுத்துவதாக இருந்தாலும், தனது விவேகத்தாலும், உணர்ச்சியின்மை, கோபப்படாமையாலும் நிலைமையை மாற்றி, எல்லா தரப்பினருக்கும் நியாயம் செலுத்துவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தனது மனைவியரின் கோபங்களையும், அன்னாரிடம் மறுத்துப் பேசுவதையும் ஏற்றுக்கொள்வார்கள். அச்சந்தர்ப்பத்திலும் அழகிய முறையில், இரக்கத்துடனேயே நடந்து கொள்வார்கள். ஆயிஷா (ரலி) கூறினார்கள் : "என்னிடம் நபி (ஸல்) அவர்கள் , 'எப்போது நீ என்னைக் குறித்து திருப்தியுடன் இருக்கிறாய்; எப்போது நீ என் மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் நன்றாக அறிந்து வைத்துள்ளேன்'' என்று கூறினார்கள். அதற்கு நான், 'எப்படி நீங்கள் அறிந்துகொள்வீர்கள்?' என்று கேட்டேன். அதற்கவர்கள், 'என்னைக் குறித்து நீ திருப்தியுடன் இருக்கும்போது (பேசினால்), 'முஹம்மதுடைய இரட்சகன் மீது சத்தியமாக' என்று கூறுவாய்! என் மீது கோபமாய் இருந்தால், 'இப்ராஹீம்(அலை) அவர்களின் இரட்சகன் மீது சத்தியமாக' என்று கூறுவாய்'' என்று கூறினார்கள். நான், 'அல்லாஹ்வின் மீதாணையாக! ஆம் (உண்மைதான்,) இறைத்தூதர் அவர்களே! நான் தங்களின் பெயரைத்தான் கோபித்துக் கொள்வேன். (தங்களின் மீதுன்று)'' என்று கூறினேன்". (புஹாரி 5228, முஸ்லிம் 2439).

மனைவியருடனான நபி (ஸல்) அவர்களது அன்பு

நபி (ஸல்) அவர்களது அன்பு தனது மனைவியருடனான அழகிய, நல்ல உறவில் பிரதிபலித்தது. அவர்கள் மீது கொண்ட அன்பின் காரணமாகவும்,இலகுபடுத்தும் விதத்திலும் தனது வீட்டு அலுவல்களில் அவர்களுக்கு நபியவர்கள் துணைபுரிவார்கள்.தனது தேவைகளைத் தானே நிறைவேற்றிக் கொள்வதுஅன்னாரது நற்குணங்களில் உள்ளதாகும்.

அன்னை ஆஇஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் தனது வீட்டில் என்ன செய்வார்கள்? என வினவப்பட்ட போது, அன்னையாவர்கள் : "நபி (ஸல்) அவர்கள் தனது குடும்பத்தினருக்கு பணிவிடை செய்வார்கள், தொழுகை நேரம் வந்ததும் தொழுகைக்கு சென்று விடுவார்கள்" என்று கூறினார்கள். (புகாரி 676). மற்றும் ஒரு நபிமொழியில் : "நபி (ஸல்) அவர்கள் அறுந்த செருப்பைத் திருத்துவார்கள், ஆடைகளைத் தைத்துக் கொள்வார்கள். உங்களில் ஒருவர் தனது வீட்டு வேலைகளைச் செய்வது போன்றே நபியவர்களும் செய்வார்கள்" எனக் கூறினார்கள். (அஹமத் 25341).

மனைவியருடனான பாசத்தின் சில வடிவங்கள் :

١
விருப்பத்துக்குரிய சொற்களைப் பயன்படுத்தி அவர்களை அழைத்தல்
٢
உணவு ஊட்டி விடுதல்.
٣
அவர்களை நேசிப்பதை அவர்களிடம் வெளிப்படையாக எடுத்துரைத்தல்.
٤
அவர்களது பேச்சுக்களை செவிமடுத்து, முக்கியத்துவமளித்தல்

விருப்பத்துக்குரிய சொற்களைப் பயன்படுத்தி அவர்களை அழைத்தல்

தனது மனைவி ஆஇஷா (ரலி) அவர்களை பரிவுடன் "ஆஇஷ்" என அழைப்பார்கள். (ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள், 'ஆஇஷ்! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு ஸலாம் உரைக்கிறார்'' என்றார்கள். (புஹாரி 3768). மேலும் அன்னையரை நபியவர்கள் சில சமயங்களில் செக்கச் சிவந்தவளே என்றும் அழைப்பார்கள்.

கணவன் மனைவிக்கு உணவு ஊட்டிவிடுதல்.

ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு உபதேசித்தார்கள் : "நீங்கள் செய்த (நல்ல) செலவு எதுவாயினும் தருமமேயாகும். நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் இடுகிற ஒரு கவளம் (உணவு) கூட (தருமமேயாகும்.)". (புஹாரி 2742).

தனது நேசத்தை கணவன் மனைவியிடம் வெளிப்படையாக கூறுதல்

அம்ர் இப்னு ஆஸ் (ரலி) கூறினார்கள் : "நபி(ஸல்) அவர்கள் 'தாத்துஸ் ஸலாஸில்' எனும் போருக்கான படைக்கு (தளபதியாக்கி) என்னை அனுப்பி வைத்தார்கள். அப்போது நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, 'மக்களிலேயே உங்களுக்கு மிகப் பிரியமானவர்கள் யார்?' என்று கேட்டேன். அவர்கள், 'ஆஇஷா'' என்று பதிலளித்தார்கள்". (புஹாரி 3662, முஸ்லிம் 2384).

அவர்களது பேச்சுக்களை செவிமடுத்து, முக்கியத்துவமளித்தல்

உம்மு ஸர்ஃ அவர்களுடைய நீண்ட ஹதீஸ் இதனை அறிவிக்கின்றது. அதில் "ஆஇஷா (ரலி) அவர்கள் 11 பெண்களுடைய கதைகளைக் கூறினார்கள். அவர்கள் அனைவரும் ஓரிடத்தில் உட்கார்ந்து தத்தமது கணவர்மார்களுடன் நடந்த சம்பவங்களை கதைத்துக் கொண்டிருந்தார்கள். அதனை அன்னை ஆஇஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் முழுமையாக கூறி முடிக்கும் வரை நபியவர்கள் செவிமடுத்துக் கொண்டிருந்தார்கள்" என இடம்பெற்றுள்ளது.

தனது மனைவியருக்காக நபி (ஸல்) அவர்கள் தன்னை அலங்கரித்துக் கொள்ளல்

நபி (ஸல்) அவர்கள் வீட்டினுள் நுழையும் போது முதலில் என்ன செய்வார்கள்? என ஆஇஷா (ரலி) அவர்களிடம் வினவப்பட்ட போது "மிஸ்வாக்" என பதிலளித்தார்கள். (முஸ்லிம் 253). மேலும் ஆஇஷா(ரலி) அறிவிக்கின்றார்கள் : "நபி (ஸல்) அவர்களுக்கு, அவர்களிடம் இருந்தவற்றிலேயே நல்ல மணமுடைய வாசனைப் பொருளை நான் பூசிவந்தேன். எந்த அளவிற்கென்றால் அந்த நறுமணப் பொருளின் மினுமினுப்பை அவர்களின் தலையிலும் அவர்களின் தாடியிலும் என்னால் காணமுடிந்தது". (புஹாரி 5923).

தனது மனைவியர் மீதான பற்றுமாறா விசுவாசம்

இந்த விசுவாசத்தின் தெளிவான வடிவங்களில் ஒன்று கதீஜா (ரலி) அவர்கள் மரணித்துப் பல வருடங்களாகியும் அம்மையார் மீது நபியவர்கள் கொண்டிருந்த பற்றாகும். அதற்கு ஓர் எடுத்துக்காட்டுதான் நபியவர்களின் புதல்வி ஸைனப் (ரலி) தனது கணவர் அபுல் ஆஸை விடுவிக்க எத்தனித்த போது- அபுல் ஆஸ் அம்மையாரை இஸ்லாத்திற்கு முன்னர் மணந்து, பத்ருப் போரில் கைதியாக வந்திருந்தார்- கதீஜா (ரலி) அவர்களுடைய மாலையை தண்டப் பணமாகக் கொடுத்தனுப்பினார்கள். அம்மாலையைக் கண்டதும் நபியவர்களின் மனது மிகவுமே இலகி விட்டது. "நீங்கள் விரும்பினால் அவருடைய மாலையை அவரிடமே திருப்பிக் கொடுத்து, கைதியையும் அவருக்காக விடுவித்தால்.." என்று கூறினார்கள். (அபூதாவூத் 2692) நபியவர்களின் இவ்அன்புறுதி அன்னையரின் காலத்தை அடையாத, சமகாலத்தில் வாழ்ந்திடாத ஆஇஷா (ரலி) அவர்களையே ரோசப்பட வைத்தது. அவர்கள் கூறுகின்றார்கள் : "கதீஜா(ரலி) அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போல் நபி(ஸல்) அவர்களின் வேறெந்த மனைவியின் மீதும் ரோஷப்பட்டதில்லை. நான் (நபி(ஸல்) அவர்களிடம்) அவரைப் பார்த்ததில்லை. ஆனால், நபி(ஸல்) அவர்கள் அவரை அதிகமாக நினைவு கூர்ந்து (புகழ்ந்து பேசி) வந்தார்கள். அவர்கள் சில வேளைகளில் ஆட்டை அறுத்து அதைப் பல துண்டுகளாகப் பிரித்து, பிறகு அதை கதீஜாவின் தோழிகளிடையே (பங்கிட) அனுப்பி விடுவார்கள். சில வேளைகளில் நான் நபி(ஸல்) அவர்களிடம், 'உலகில் கதீஜாவைத் தவிர வேறெந்தப் பெண்ணும் இல்லாததைப் போல் நடந்து கொள்கிறீர்களோ'' என்று கேட்டதுண்டு. அப்போது அவர்கள், 'அவர் (புத்திசாலியாக) இருந்தார்; (சிறந்த குணமுடையவராக) இருந்தார். (இப்படி, இப்படியெல்லாம் இருந்தார்.) மேலும், எனக்கு அவர் வாயிலாகத்தான் பிள்ளைச் செல்வம் கிடைத்தது'' என்று பதில் கூறினார்கள்.". (புஹாரி 3818, முஸ்லிம் 2435).

தமது மனைவியருக்கிடையிலான நபி (ஸல்) அவர்களின் நேர்மையின் எடுத்துக்காட்டுகள் :

١
வசிப்பிடம் மற்றும் தங்குதல். நபியவர்கள் தமது மனைவியரிடத்தில் சரி சமமாக நாட்களைப் பகிர்வார்கள், பாகுபாடின்றி அனைவரிடமும் செல்வார்கள். வேறு ஏதாவது இடையில் வந்தால், அவர்களின் அனுமதியைக் கேட்பார்கள். ஆஇஷா (ரலி) அறிவிக்கின்றார்கள் : "நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையான போது எனது வீட்டில் சிகிச்சை பெற பிற மனைவியரிடம் அனுமதி கோரினார்கள். அவர்களும் அனுமதியளித்தனர்". (புஹாரி 198, முஸ்லிம் 418).
٢
பயணத்திலும் நீதமாக நடத்தல், பயணத்தின் போது சீட்டுக் குழுக்குவார்கள். எந்த மனைவியின் பெயர் குழுக்களில் தெரிவாகுமோ அவர்களையே அழைத்துச் செல்வார்கள்.
٣
ஒரு விதவையைத் திருமணம் செய்தால் தனிமையைப் போக்க மூன்று நாட்கள் அம்மனைவியிடம் தங்குவார்கள், பின்னர் ஏனைய மனைவியர்களைப் போன்றே நாட்களைப் பகிர்வார்கள்.
٤
நபி (ஸல்) அவர்கள் மனைவியரிடத்தில் செலவு செய்தல், பொருளாதாரம் போன்ற சக்திக்குட்பட்ட விடயங்களில் நீதமாக நடந்து கொள்வார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியரை மதித்து, அவர்களிடம் ஆலோசனை பெறல்

ஹுதைபியா உடன்படிக்கையின் போது தனது மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் ஆனோசனை கேட்டதை விட இதற்கு வேறு தெளிவான ஆதாரம் அவசியமில்லை. நபியவர்கள் முஸ்லிம்களிடம் பிராணிகளை அறுத்து, தலைமுடிகளை மழிக்குமாறு வேண்டிய போது யாரும் முன்வரவில்லை, அப்போது உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் சென்று மக்கள் நிலையைக் கூறினார்கள். அப்போது அன்னையவர்கள் : "அல்லாஹ்வின் தூதரே!, அவர்கள் கட்டுப்பட வேண்டுமென விரும்புகிறீர்களா? தாங்கள் வெளியே சென்று, உங்களது ஒட்டகங்களை அறுத்து, முடி சிரைப்பவரை அழைத்து மழிக்கும் வரை யாருடனும் கதைக்க வேண்டாம்" என ஆலோசனை வழங்கினார்கள். அப்போது நபியவர்கள் வெளியே சென்று யாருடனும் கதைக்காது தமது பிராணிகளை அறுத்தார்கள். முடி திருத்துனரை அழைத்து தனது முடியை மழித்தார்கள். ஏனைய முஸ்லிம்களும் நபியவர்கள் செய்ததைப் போன்றே செய்தனர்.(புஹாரி 2731).

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்