கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் விவாகரத்து

விவாகரத்து, அதன் அர்த்தம், அது தொடர்பான சில சட்ட திட்டங்களை இப்பாடத்தில் கற்போம்.

  • விவாகரத்தின் அர்த்தத்தை அறிதல்.
  • விவாகரத்துச் சட்டங்களுடன் தொடர்புள்ள இஸ்லாமிய சிறப்பம்சங்கள் சிலதை அறிதல்.
  • விவாகரத்தின் நன்மை, தீமைகளை அறிதல்.
  • விவாகரத்தின் வகைகளை அறிதல்.
  • இத்தா, அதன் அர்த்தம், அது தொடர்பான சில விடயங்களை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

கடுமையான ஒப்பந்தம்

இஸ்லாம் குடும்ப வாழ்வைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்தியுள்ளது. அல்குர்ஆன் வர்ணித்துள்ள பிரகாரம் கடுமையான ஓர் ஒப்பந்தத்தின் மூலம் திருமண உறவைப் பாதுகாத்துள்ளது. இக்கடுமையான ஒப்பந்தம்தான் வலியுறுத்தப்பட்ட, பலப்படுத்தப்பட்ட திருமண ஒப்பந்தமாகும்.

திருமண உறவைப் பாதுகாப்பதை வலியுறுத்தும் வகையில், கணவர்கள் தங்கள் மனைவிகளை வெறுத்தாலும் அல்லது அவர்களிடமிருந்து சில விஷயங்களை வெறுத்தாலும், அவர்களை விவாகரத்து செய்யாமல் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது. அல்லாஹ் கூறுகின்றான் : "இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை; ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்". (நிஸா : 19). கடுமையான உடன்படிக்கை முறிவுக்குள்ளாகக் கூடாது என்பதற்காக, கணவனுக்கு எதிராக ஒரு பெண்ணைக் தூண்டுவதன் மூலம் வாழ்க்கைத் துணைவர்களிடையே பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதை இஸ்லாம் கடுமையாக எச்சரித்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) கூறுகின்றார் : "ஒரு பெண்ணை அவளது கணவனுக்கெதிராக மோசடி செய்து, குழப்பிவிட்டவன் எம்மைச் சார்ந்தவனல்ல". (அபூதாவூத் 2175).

இஸ்லாத்தின் யதார்த்தவாதம்

இஸ்லாம் திருமண உறவின் தொடர்ச்சியில் ஆர்வமாக இருந்தாலும், மக்களின் உள்ளுணர்விற்கு எதிராக வராத, அவர்களின் ஆசைகளை அடிபணியச் செய்யாத அல்லது அவர்கள் மீது அழுத்தம் கொடுக்காத ஒரு யதார்த்தமான மதமாகும். மாறாக அது அவர்களது நிலமைகள், உணர்வுகள், தேவைகளைக் கவனத்திற் கொள்கின்றது. திருமண வாழ்க்கையைத் தொடர்வது பல சந்தர்ப்பங்களில் அதன் முறிவை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்பதை அல்லாஹ் அறிகின்றான், மேலும் விவாகரத்து சில சமயங்களில் தேவையாகவோ அல்லது அவசியமாகவோ இருக்கலாம் என்பதையும் அவன் அறிகின்றான். அதனால்தான், விவாகரத்தில் தீங்கு, தீவிரம் இருந்தாலும் அதற்கான அனுமதியில் பாரிய மதிநுட்பமுள்ளது.

விவாகரத்து சட்டபூர்வமாதல்

விவாகரத்து சட்டபூர்வமாவதை அறிவிக்கும் பல செய்திகள் அல்குர்ஆனிலும், ஸுன்னாவிலும் இடம்பெற்றுள்ளன. விவாகரத்தின் சட்டங்களை ஒழுங்குபடுத்தி, நெறிமுறைகளை விளக்கி அல்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் இடம்பெற்றுள்ளன. அதன் பெயரில் ஓர் அத்தியாயம் கூட அல்குர்ஆனில் உள்ளது.

மொழி ரீதியில் தலாக் என்பது

முடிச்சை அவிழ்த்து விடுவிப்பதாகும்.

மார்க்க ரீதியில் தலாக் என்பது

உடனடியாகவோ, தாமதாகவோ அமுலாகும் விதத்தில் விவாகரத்தை அறிவிக்கக் கூடிய குறிப்பட்ட சில வார்த்தைகள் மூலம் திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்தல். குறிப்பிட்ட வார்த்தை என்பது "தலாக்" (விவாகரத்து) போன்ற வெளிப்படையான வார்த்தையாகவும் இருக்கலாம், அல்லது "பாஇன்" (பிரிதல்), "ஹராம்", "இத்லாக்" (விடுவித்தல்) போன்ற சிலேடையான வார்த்தைகளாகவும் இருக்கலாம். வார்த்தையின் இடத்தில் எழுத்து, குறிப்பு உணர்த்தும் செய்கை போன்றனவும் கணக்கில் கொள்ளப்படும். தலாக் என்ற வார்த்தையுடன் "குல்உ" என்ற வார்த்தை" நீதிபதியின் "பிரித்து விட்டேன்" என்ற வார்த்தை போன்றனவும் இணைக்கப்படும்.

விவாகரத்தின் பயன்பாடுகள் சில

١
முதல் குடும்பத்தில் காணப்படாத சரியான அடிப்படைகளில் புதிய இரு குடும்பங்கள் உருவாக்க வழியைத் திறந்து விடுதல். அல்லாஹ்வின் அருள் விசாலமானது. அல்லாஹ் கூறுகின்றான் : "அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டால், அவ்விருவரையும் தன்னுடைய விசாலமான அருட்கொடையால், (ஒருவர் மற்றவரை விட்டும்) தேவையற்றவராக அல்லாஹ் ஆக்கிவிடுவான். அல்லாஹ் விசாலமான அருளுடையவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்". (நிஸா : 130).
٢
கோபம், குரோதம் நிரம்பிய வாழ்க்கை நீடிப்பதால் ஏற்படக்கூடிய பாரிய சீர்கேடுகளை தடுத்தல். இது சிலவேளை மானக்கேடான விடயங்களுக்கும் இட்டுச்செல்லும். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
٣
முதல் திருமணத்தில் இருந்து பாடம் பெற்று, அதிகமான விடயங்களில் மீள்பரிசீலனை செய்தல், ஆன்மா அதன் குறைகளை வெளிப்படையாக்கி, இரண்டாம் திருமணத்தில் அவற்றை இல்லாதொழிப்பதற்கு உதவியாக அதனை வெற்றி கொள்ள முயற்சித்தல்.
٤
வெறுப்பு, தவறான நடத்தை மற்றும் உறவுகளின் சீர்குலைவு ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் மோதல்கள் மற்றும் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவருதல்.
٥
அமைதி, நிம்மதி இல்லாத வீட்டில் வாழ நிர்ப்பந்திப்பதன் விளைவாக ஏற்படும் அழிவு தவறுகளில் வீழ்தல், நெறிபிறழ்வு மற்றும் துரதிர்ஷ்டவசமான விளைவுகளிலிருந்து விவாகரத்து குடும்ப உறுப்பினர்கள் - வாழ்க்கைத் துணைவர்கள் அல்லது அவர்களின் குழந்தைகள் - மற்றும் அவர்களின் மனநிலைகள், ஆளுமைகளை பாதுகாக்கிறது.

விவாகரத்தின் தீமைகள்

١
குடும்ப அமைப்பின் சிதறுவதுடன்,பாசம், கருணை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டப்பட்ட கூட்டை நாசப்படுத்துகின்றது.
٢
ஒன்று பகையைத் தொடர்ந்து, குழந்தைகளின் உறுப்புரிமை, சேர்க்கையை ஒருவருக்கொருவர் தட்டிக் கழித்துக்கொள்வதன் மூலம் அல்லது ஒவ்வொரு பக்கமும் ஒருவரை ஒருவர் அழுத்தும் வழிமுறையாக குழந்தைகளை உருவாக்குவதன் மூலம் விவாகரத்துக்குப் பிறகு பெற்றோர்கள் நன்றாக நடந்து கொள்ளவில்லை என்றால்; பிள்ளைகள் மனநலக் கோளாறுகள், சிந்தனை மற்றும் பண்பாட்டு ரீதியான தடம்புறழ்வுகளுக்கு ஆளாகுவர். அதன் தீய விளைவுகள் வாழ்வின் இறுதிவரை அவர்களுடன் வளர்கின்றன.
٣
தம்பதியினருக்கிடையிலான வெறுப்பு பிளவுகள் சிலவேளை அவர்களது குடும்பம் வரை நீண்டு விடுகின்றது. எனவே பிளவின் வட்டம் விரிந்து விடுகின்றது. இது இஸ்லாம் விரும்பும் சமூகப்பிணைப்பு, நல்லிணக்கத்திற்கு முரண்படுகின்றது.

விவாகரத்தின் வகைகள்

١
மீளத்தக்க விவாகரத்து
٢
மீள முடியாத சிறிய பிரிவினை விவாகரத்து
٣
மீள முடியாத பெரிய பிரிவினை விவாகரத்து

மீளத்தக்க விவாகரத்து

இது ஒரு கணவன் தனது மனைவியை முதலாவதாக அல்லது இரண்டாவதாக விவாகரத்துச் செய்து, அப்பெண் இத்தா (கருத்தரிக்காததை உறுதிப்படுத்த காத்திருக்கும் காலம்) அனுஷ்டிக்கும் காலத்தினுள் அவளது அனுமதியின்றியும், புதிய ஒப்பந்தத்திற்கான அவசியமின்றியும் மீட்டெடுக்கும் உரிமை கணவனுக்குள்ள விவாகரத்து முறையே மீளத்தக்க விவாகரத்தாகும்.

மீள முடியாத சிறிய பிரிவினை விவாகரத்து

இது முதலாவதாக அல்லது இரண்டாவதாக விவாகரத்துச் செய்து இத்தாவுடைய காலமும் நிறைவடைவதாகும். இங்கு புதிய ஒப்பந்தமின்றி மனைவியை மீட்டெடுக்க முடியாது.

மீள முடியாத பெரிய பிரிவினை விவாகரத்து

இது மூன்றாவதாக செய்யும் விவாகரத்தாகும். விவாகரத்துச் செய்யப்பட்ட தனது மனைவி வேறொரு திருமணம் செய்து அக்கணவன் இவளை முன்னேற்பாடுகள் ஏதுமின்றி விவாகரத்து செய்து அல்லது மரணித்ததன் பின் புதிய ஒப்பந்தம், புதிய மஹ்ர் மூலமே தவிர முதல் கணவனுக்கு இப்பெண்ணை மீட்டெடுக்கும் உரிமையில்லை.

மீள முடியுமான, சிறிய பிரிவினை, மற்றும் பெரிய பிரிவினை ஆகிய மூன்று விவாகரத்து முறைகள் தொடர்பான சட்டதிட்டங்கள் இஸ்லாமிய ஷரீஅத்தின் நற்பண்புகளின் தெளிவான வெளிப்பாடுகளைக் காட்டுகின்றன. விவாகரத்து ஓர் இறுதி முடிவல்ல. மீள முடியுமான மற்றும் சிறிய பிரிவினை விவாகரத்துக்களில் வாழ்க்கைத் துணைவர்கள் ஒவ்வொருவரும் பிரச்சினைகளின் அழுத்தத்திலிருந்து வெளிப்பட்டு, பின்விளைவுகளை மறுபரிசீலனை செய்யவும், கூர்ந்து நோக்கவும் ஒரு வாய்ப்பையும் போதுமான நேரத்தையும் பெறுகிறார்கள். அதேபோன்று பெரிய பிரிவினை மூலம் விவாகரத்தாகி, இரண்டாவது கணவனிடமிருந்தும் விவாகரத்தான பின்னரும் இரு தரப்பினரும் மீள முடியும் என்பதை உணர்ந்து, அது நல்ல முடிவென்பதையும் காணலாம். ஏன், உறுதியான மற்றும் பலமான அடித்தளத்தில் திருமண வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இந்த அனுபவம் பெரும்பாலும் காரணமாகின்றது.

இத்தா (காத்திருப்பு)

விவாகரத்து அல்லது மரணத்தின் மூலம் கணவனைப் பிரிந்த ஒரு பெண் மறுமணம் செய்யாமல் காத்திருக்குமாறு மார்க்கம் கடமையாக்கி, வரையறுத்த குறிப்பிட்ட காலத்திற்கே இத்தா எனப்படுகின்றது.

விவாகரத்துப் பெற்ற மனைவி தனது கணவரின் வீட்டிலேயே இத்தாக் காலத்தைக் கழிக்கலாம், அவளுக்கு செலவு செய்வது அக்கணவர் மீது கடமையாகும். அதேபோன்று இத்தா இருக்கும் பருவத்தில் அக்கணவர் மரணித்தில் குறித்த மனைவிக்கு சொத்துரிமையும் உண்டு. இத்தாக் காலத்தில் மறுமணத்திற்காக பேச்சுவார்த்தை நடத்துவது ஹராமாகும்.

இத்தா சட்டபூர்வமானதற்கான காரணம்

١
வணக்கம், முஸ்லிமான ஆணும், பெண்ணும் தமது விடயங்களை அல்லாஹ்விடம் ஒப்படைத்துள்ளனர், அவன் ஒரு தீர்ப்பைச் செய்து விட்டால் தமது அடிமைத் தனத்தை வெளிப்படுத்துவதற்காக அவனுக்குக் கட்டுப்பட விரைகின்றனர்.
٢
கணவனைப் பிரிந்த பெண் அக்கணவன் மூலம் கருத்தரிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துதல்.
٣
விவாகரத்துக்குப் பிறகு கணவனுக்கு விவாகரத்து செய்யப்பட்ட மனைவியை மீட்டெடுக்கப் போதுமான அவகாசம் வழங்குதல்.
٤
இறந்த கணவனுக்காக துக்கம் அனுஷ்டித்தல்.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்