கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் தொழுகையின் (ருகூன்கள்) அடிப்படைக் கடமைகளும், (வாஜிப்கள்) அவசியம் செய்ய வேண்டியவையும்.

இப்பாடத்தில் தொழுகையின் (ருகூன்கள்) அடிப்படைக் கடமைகள், (வாஜிப்கள்) அவசியம் செய்ய வேண்டியவை, அதனை முறிக்கக் கூடியவை, மற்றும் அதில் வெறுக்கப்பட்டவை ஆகியவற்றை நாம் கற்போம்.

  • தொழுகையின் ருகூன்களை அறிதல்
  • தொழுகையின் வாஜிப்களை அறிதல்.
  • தொழுகையை முறிக்கக் கூடியவற்றை அறிதல்.
  • மறதிக்கான ஸுஜூத் பற்றி அறிதல்.
  • தொழுகையில் வெறுக்கப்பட்ட செயல்களை அறிதல்.
  • இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

    தொழுகையின் ருகூன்கள்

    இவை தொழுகையின் பிரதான பகுதிகளாகும். வேண்டுமென்றோ, தவறுதலாகவோ இவற்றை விட்டால் தொழுகை முறிந்து விடும்.

    தொழுகையின் ருகூன்கள்

    ١
    முதல் தக்பீர்
    ٢
    முடியுமான பட்சத்தி்ல் நின்று தொழுதல்
    ٣
    ஸூரா பாதிஹா ஓதுதல்
    ٤
    ருகூஃ செய்தல்
    ٥
    நடுநிலைக்கு வருதல்
    ٦
    ஸுஜூது செய்தல்
    ٧
    நடு இருப்பில் உட்கார்தல்
    ٨
    இறுதி அத்தஹிய்யாத்திற்காக உட்கார்ந்து அதனை ஓதுதல்
    ٩
    அனைத்து செயற்பாடுகளையும் அமைதியாக வேகமின்றிச் செய்தல்
    ١٠
    ஸலாம் கூறுதல்
    ١١
    அத்தூண்கள்களை ஒழுங்குமுறைப்படி செய்தல்

    தொழுகையின் வாஜிபுகள்

    இவை தொழுகையில் அவசியம் செய்ய வேண்டியவை, வேண்டுமென்றே இவற்றை விட்டால் தொழுகை முறிந்து விடும். மறதியாக விட்டால் தொழுகையைப் பூரணப்படுத்தி விட்டு, இறுதியில் மறதிக்கான ஸுஜூது செய்ய வேண்டும்.

    தொழுகையின் வாஜிபுகள்

    ١
    முதல் தக்பீர் தவிர்ந்த ஏனைய அனைத்து தக்பீர்களும்
    ٢
    ஸுப்ஹான ரப்பியல் அழீம் என ஒரு தடவை கூறுதல்
    ٣
    இமாம் மற்றும் தனித்து தொழுபவர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் எனக் கூறுதல்.
    ٤
    அனைவரும் ரப்பனா வலகல் ஹம்து எனக் கூறுதல்.
    ٥
    ஸுப்ஹான ரப்பியல் அஃலா என ஸுஜூதில் ஒரு தடவை கூறுதல்.
    ٦
    நடு இருப்பில் ரப்பிஃபிர்லீ எனக் கூறுதல்.
    ٧
    முதல் அத்தஹிய்யாத்தும் அதற்காக அமர்தலும்.

    இந்த வாஜிபுகள் மறதியின் மூலம் தளர்ந்து விடுகின்றது. அதற்கான ஸுஜூது அதனை ஈடு செய்கின்றது.

    தொழுகையின் ஸுன்னாக்கள்

    தொழுகை முறையில் வந்துள்ள ருகூன்கள், வாஜிபுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து சொல், செயல்களும் தொழுகையை முழுமைப் படுத்தக்கூடிய ஸுன்னாவாகும். அதனைப் பேணுவது அவசியமாகும். எனினும் அதனை விடுவதால் தொழுகை முறிந்து விட மாட்டாது.

    மறதிக்கான ஸுஜூத்

    தொழுகையில் ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அல்லாஹ் மார்க்கமாக்கிய இரு ஸஜ்தாக்களே மறதிக்கான ஸுஜூத் என்பதாகும்.

    எப்போது மறதிக்கான ஸுஜூது செய்ய வேண்டும்?

    ١
    தொழுகையில் ருகூஃ, ஸுஜூத், நிலை, அமர்வு போன்றவற்றில் ஒன்றை மறதியாகவோ, தவறுதலாகவோ அதிகரித்தால் அதற்காக இந்த ஸுஜூத் செய்ய வேண்டும்.
    ٢
    தொழுகையில் ஒரு ருகூன் குறைந்தால் அதனைச் செய்து விட்டு அதற்காக இறுதியில் ஸுஜூத் செய்ய வேண்டும்.
    ٣
    முதல் அத்தஹிய்யாத் போன்ற வாஜிபான ஒன்றை தவறுதலாகவோ, மறதியாகவோ விட்டால் அதற்காகவும் இந்த ஸுஜூத் செய்ய வேண்டும்.
    ٤
    எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதில் சந்தேகம் ஏற்பட்டால் உறுதியான குறைந்த எண்ணிக்கையின் படி தொழுகை முழுமைப் படுத்திவிட்டு மறதிக்கான இந்த ஸுஜூத் செய்ய வேண்டும்.

    மறதிக்கான ஸுஜூது செய்யும் முறை

    ஸுஜூது செய்யும் முறை

    ஸுஜூத் செய்யும் சந்தர்ப்பம்

    ١
    இறுதி அத்தஹிய்யாத் ஓதி விட்டு, ஸலாம் கொடுக்க முன் ஸுஜூது செய்து விட்டு ஸலாம் கொடுத்தல்.
    ٢
    ஸலாம் கொடுத்த பின் மறதிக்கான இரு ஸஜ்தாக்களையும் செய்து விட்டு மீண்டும் ஸலாம் கொடுத்தல்.

    தொழுகையை முறிக்கக்கூடியவை

    இவ்விடயங்களை செய்வதன் மூலம் தொழுகை முறிந்து விடும். அதனைமீட்ட வேண்டும்.

    தொழுகையை முறிக்கக்கூடியவை

    ١
    முடியுமான பட்சத்திலும் தொழுகையின் ஒரு ருகூன் அல்லது நிபந்தனையை வேண்டுமென்றோ மறதியாகவோ விட்டால் தொழுகை முறிந்து விடும்.
    ٢
    தொழுகையின் வாஜிப்களுள் ஒன்றை வேண்டுமென்றே விடுதல்
    ٣
    வேண்டுமென்றே பேசுதல்
    ٤
    சத்தமிட்டு சிரித்தல்
    ٥
    அவசியமின்றி தொடர்ச்சியான அசைவுகள்.

    தொழுகையில் வெறுக்கத்தக்கவை

    இவை தொழுகையின் உயிரோட்டத்தைப் போக்கி, அதன் நன்மையையும் குறைத்து விடக்கூடியவை.

    தொழுகையில் திரும்பிப் பார்த்தல்

    தொழுகையில் திரும்பிப் பார்ப்பதைப் பற்றி நபியவர்களிடம் வினவப்பட்ட போது "அது அடியானின் (கவனம் சிதறும் போது அவனது) தொழுகையில் ஷைத்தான் செய்யும் திருட்டாகும்" என்றார்கள். (புஹாரி 751).

    முகம், கை மூலம் தேவையின்றி விளையாடிக் கொண்டிருத்தல்.

    இடுப்பில் கை வைத்துக் கொண்டிருத்தல், கைவிரல்களில் நெட்டி முறித்தல்.

    தொழுகையின் சிந்தனையின்றி அதனுள் நுழைதல்

    இயற்கைத் தேவை நிறைவேற்றும் அவசியத்தினாலோ, உணவு தயார் நிலையில் இருப்பதினாலோ கவனம் சிதறதுதல்.

    உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


    பரீட்சையை ஆரம்பிக்கவும்