தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் ஸுன்னத்தான தொழுகை தொழுவதற்குத் தடுக்கப்பட்ட நேரங்கள்
ஸுன்னத்தான தொழுகை தொழுவதற்குத் தடுக்கப்பட்ட நேரங்கள்
இஸ்லாம் தடை செய்த சில நேரங்களைத் தவிர ஏனைய அனைத்து நேரங்களிலும் பொதுவான ஸுன்னத் தொழுகைகளைத் தாராளமாக தொழ முடியும். ஏனெனில் அக்குறிப்பிட்ட நேரங்கள் இறைமறுப்பாளர்களின் வணக்க நேரங்களாகும். அவ்வாறான நேரங்களில் விடுபட்ட கடமையான தொழுகைகளோ, பள்ளிக் காணிக்கை போன்ற சந்தர்ப்ப நிகழ்வுடன் தொடர்புபட்ட ஸுன்னத்தான தொழுகைகளோ தவிர வேறேதும் தொழுப்பட முடியாது. இது தொழுகைக்கு மாத்திரமான தடையே தவிர ஏனைய அனைத்து வித திக்ருகளையும் எந்நேரத்திலும் செய்யலாம்.
பஜ்ர் தொழுதது முதல் சூரியன் உதயமாகி ஓர் ஈட்டிப் பிரமாணம் உயரும் வரை . நடுத்தர நேரசூசி உள்ள நாடுகளில் இது சூரியன் உதித்து சுமார் 20 நிமிடங்களில் நிகழ்கின்றது.
சூரியன் உச்சிக்கு வந்தது முதல் அது சற்று மேற்குப் பக்கமாக சாயும் வரையிலான நேரம். இது ளுஹருக்கு முன்னரான சிறிதளவு நேரமாகும்.
அஸர்த் தொழுகை முதல் சூரியன் மறையும் வரை.