கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் ஜும்ஆத் தொழுகை

ஒரு முஸ்லிம் நிறைவேற்ற வேண்டிய பிரதான கடமைகளுள் ஜும்அத் தொழுகை முதன்மையானது. அதன் சிறப்பு, சட்டதிட்டங்கள் பற்றி இப்பாடத்தில் கற்போம்.

1. ஜும்ஆத் தொழுகையின் சிறப்பை அறிதல்.2. ஜும்ஆத் தொழுகை நிறைவேற்றும் முறை, சட்டங்களை அறிதல்.3. ஜும்ஆத் தொழுகை விட அனுமதிக்கப்பட்டவர்களை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

ஜும்ஆத் தொழுகை

அல்லாஹ் வெள்ளிக்கிழமை ளுஹர் வேளையில் ஒரு தொழுகையை விதியாக்கியுள்ளான். அது இஸ்லாத்தின் பாரிய அடையாளச் சின்னங்களுள் ஒன்றாகவும், அதன் கடமைகளில் மிக வலியுறுத்தப்பட்டதாகவும் உள்ளது. வாரத்தில் ஒரு தடவை அவ்வேளையில் முஸ்லிம்கள் ஒன்று கூடி, இமாம் வழங்கும் நல்ல பல உபதேசங்கள், வழிகாட்டல்களை செவியேற்கின்றனர். பின்னர் ஜும்ஆத் தொழுகையைத் தொழுகின்றனர்.

ஜும்ஆ நாளின் சிறப்பு

வார நாட்களில் மகத்தான மிகச்சிறந்த நாள் வெள்ளிக்கிழமையாகும். ஏனைய நாட்களை விட இத்தினத்தை அல்லாஹ் தேர்வு செய்துள்ளன். ஏனைய நேரங்களை விட பல விதத்திலும் மேம்படுத்தியுள்ளான். அவற்றுள் சில வருமாறு:

பிற சமுதாய மக்களுக்கு இல்லாமல் முஹம்மத் (ஸல்) அவர்களின் இச்சமுதாயத்திற்கு இத்தினத்தை அல்லாஹ் பிரத்யேகமாக ஆக்கியுள்ளான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எமக்கு முன்னோர்களை விட்டும் அல்லாஹ் வெள்ளிக்கிழமையை மறக்கடிக்கத்து விட்டான் யூதர்களுக்கு சனிக்கிழமையும் கிறிஸ்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் இருந்தது. அல்லாஹ் எம்மை அனுப்பி வெள்ளிக்கிழமையை அருளியுள்ளான்". (முஸ்லிம்: 856).

அத்தினத்தில் தான் ஆதம் (அலை) படைக்கப்பட்டார்கள். மறுமை நிகழ்வதும் அத்தினத்தில் தான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "சூரியன் உதிக்கும் நாட்களில் சிறந்தது வெள்ளிக்கிழமையாகும். அதில் தான் ஆதம் (அலை) படைக்கப் பட்டார்கள். அதில் தான் அவர்கள் சுவனத்தில் நுழைவிக்கப்பட்டார்கள். அதே தினத்தில் தான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். மறுமை நிகழ்வதும் அத்தினத்தில் தான்". (முஸ்லிம்: 854).

ஜும்ஆத் தொழுகை யாருக்கு கடமை?

١
ஆண்கள். பெண்களுக்கு அது கடமையில்லை.
٢
பருவமடைந்த பகுத்தறிவுள்ளவர்கள். பைத்தியக்காரர்கள் மற்றும் பருவமடையாத சிறுவர்களுக்கு கடமையில்லை.
٣
பிரதேச வாசி. பிரியாணிக்கோ கிராம, நகரப் புறமல்லாத நாட்டுப் புறங்களில் வசிப்பவர்களுக்கு கடமையில்லை.

ஜும்ஆத் தொழுகையின் முறையும் சட்டங்களும்

ஜும்ஆத் தொழுகைக்கு தயாராகுதல்

ஜும்ஆத் தொழுகைக்கு முன்னாள் குளித்து அழகான உடையணிந்து குத்பாப் பிரசங்கம் ஆரம்பிக்க முன்னரே பள்ளிக்குச் செல்வது ஸுன்னத்தாகும்.

ஜும்ஆப் பிரசங்கம்

முஸ்லிம்கள் பள்ளியில் ஒன்று கூடுவர். இமாம் அவர்களுக்கு முன்னாள் வந்து மிம்பர் படிகளில் ஏறி மக்களை முன்னோக்கி இரு பிரசங்கங்கள் செய்ய வேண்டும். இரண்டிற்கும் மத்தியில் சற்று உட்கார வேண்டும். இறையச்சம் நல்ல வழிகாட்டல்கள், இறைவசனங்களை அவர்களுக்கு போதிக்க வேண்டும்.

தொழுகைக்கு சமூகந் தந்தவர்கள் பிரசங்கத்தை செவிமடுப்பது அவசியமாகும். பேசுவதோ, பிரசங்கத்திலிருந்து பயனடையாமல் கவனம் சிதறுவதோ கூடாது. அது பள்ளியில் உள்ள விரிப்பு, சிறு கற்கள், மணலை வைத்து விளையாடுவதாக இருந்தாலும் சரி.

பின்னர் இமாம் மிம்பரிலிருந்து இறங்கி, சத்தமாக ஓதி இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்த வேண்டும்.

ஜும்ஆத் தொழுகை தவறியவர்.

மக்கள் கூட்டம் சேரும் போது தான் ஜும்ஆத் தொழுகை விதியாகும். அது தவறினால், அல்லது தகுந்த காரணத்திற்காக தொழவில்லை என்றால் அதற்குப் பதிலாக ளுஹர் தொழ வேண்டும். ஜும்ஆ அவரிடமிருந்து செல்லுபடியாக மாட்டாது.

ஜும்ஆத் தொழுகைக்கு தாமதமாக வந்தால்

ஜும்ஆத் தொழுகைக்கு தாமதமாக வந்து, இமாமுடன் ஒரு ரக்அத்தை விட குறைந்தளவில் சேர்ந்தால் அவர் அதனை ளுஹராகப் பூரணப் படுத்த வேண்டும்.

பெண்கள், பிரயாணிகள் போன்ற ஜும்ஆ கடமையில்லாதவர்களும் அதனை முஸ்லிம் சமூகத்துடன் சேர்ந்து தொழுதால் அது செல்லுபடியாகும். அதன் மூலம் ளுஹர் தொழ வேண்டியதில்லை.

ஜும்ஆவுக்கு சமூகளிப்பதன் அவசியம்

ஜும்ஆ கடமையானவர்கள் அதற்கு சமூகமளிப்பதை இஸ்லாம் மிகவும் வலியுறுத்தியுள்ளதுடன் அதனை விட்டு உலக இன்பங்களில் மூழ்குவதை எச்சரிக்கின்றது. அல்லாஹ் கூறுகின்றான் : “ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்”. (ஜும்ஆ : 9)

ஜும்ஆத் தொழுகைக்கு வராதோருக்கு அல்லாஹ் என்ன எச்சரிக்கை விடுத்துள்ளான்?

மார்க்கத்திலுள்ள தகுந்த காரணமின்றி ஜும்ஆவைத் தவறவிடுபவருடைய உள்ளத்தில் முத்திரையிடுவதாக அல்லாஹ் எச்சரித்துள்ளான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "யார் அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களை விடுகின்றாரோ அவருடைய உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிடுகின்றான்". (அபூதாவூத் 1052, அஹ்மத் 15498). முத்திரையிடுதல் என்பது அதற்குத் திரையிட்டு, மூடிவிடுகின்றான். மேலும் நயவஞ்சகர்கள், பாவிகளுடைய உள்ளங்களைப் போன்று அறியாமையையும், வன்நெஞ்சத்தையும் அதில் வைத்து விடுகின்றான்.

ஜும்ஆவை விடுவதற்குரிய தகுந்த காரணம் எது?

ஜும்ஆ கடமையான ஒருவருக்கு அதனை விடுவதற்கான தகுந்த காரணம் : வழமைக்கு மாறான கடுமையான சிரமமோ, வாழ்க்கை, ஆரோக்கியத்திற்கு பாரிய இடையூறு ஏற்படுமென அச்சமோ ஏற்படுதல்.

தொழில், பணிகளுக்குச் செல்வது ஜும்ஆவை விடுவதற்கான தகுந்த காரணமா?

இரண்டு நிலைகளைத் தவிர தொடர்ந்து பணிக்குச் செல்வது ஜும்ஆவை விடுவதற்கான தகுந்த காரணமல்ல :

ஜும்ஆவை யாருக்கு விட முடியும்?

1. அந்தப் பணியில் பாரிய ஒரு பொது நலன் இருத்தல் வேண்டும். அவர் ஜும்ஆவை விட்டுவிட்டு அப்பணியிலிருந்தாலே தவிர அந்நலன் உருவாக மாட்டாது. அவர் அதை விடுவதால் பாரியதொரு சேதம் ஏற்படும். அப்பணியில் அவருக்குப் பதில் வேறுயாருமில்லை. (இச்சந்தர்ப்பத்தில் ஜும்ஆவை விடலாம்).

உதாரணங்கள்

١
அவசர நிலைமைகள் மற்றும் அவசர காயங்களுக்கு சிகிச்சையளிக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவு வைத்தியர்.
٢
திருட்டு, மற்றும் குற்றச் செயல்கள் இடம்பெறாமலிருக்க மக்களது உடமைகள், வீடுகளைக் காவல் காக்கும் காவலர், காவல் துறையினர்.
٣
ஒரு வினாடியும் நிறுத்த முடியாமல் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய பாரிய தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் கண்காணிப்புப் பணிகளில் பணியாற்றுபவர்.

ஜும்ஆவை யாருக்கு விட முடியும்?

2. அந்த வேலை மட்டுமே அவரது வாழ்வாதாரத்தின் ஒரே வழியாக இருந்து, அந்த வேலையைத் தவிர அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான உணவு, பானம் மற்றும் தேவையான பொருட்களை அவர் ஈடுகட்ட வேண்டிய வேறு பணி அவரிடம் இல்லை. வேறொரு வேலை கிடைக்கும் வரை, அல்லது தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் தேவையான உணவு, பானம் மற்றும் தேவையான பொருட்களை அவர் ஈடுகட்ட முடியுமானளவு வாழ்வாதாரம் கிடைக்கும் வரை நிர்ப்பந்தம் என்ற ரீதியல் ஜும்ஆவை விட்டுவிட்டு பணியைத் தொடரலாம். அத்துடன் நின்று விடாமல் தனக்குப் பொருத்தமான பிறிதொரு வேலையைத் தேடுவதும் அவசியமாகும்.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்