தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் நோன்பை முறிப்பவை
நோன்பை முறிப்பவை
நோன்பை முறிக்கும் என்ற காரணத்தினால் நோன்பாளி தவிர்ந்து கொள்ள வேண்டிய விடயங்கள்
அல்லாஹ் கூறுகின்றான் : “இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்”. (பகரா : 187).
மறதியாக யாராவது உண்டால் அல்லது பருகினால் அவரது நோன்பு செல்லுபடியாகும். பாவமேதும் கிடையாது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “தான் ஒரு நோன்பாளி என்பதை மறந்து ஒருவர் உண்டால், அல்லது பருகினால் அவர் தனது நோன்பை பூரணப்படுத்தட்டும். ஏனெனில் அவருக்கு அல்லாஹ்தான் உணவும், பானமும் வழங்கியுள்ளான். (அவருடைய நோன்பு முறியமாட்டாது)”. (புஹாரி 1933, முஸ்லிம் 1155).
2. உண்ணல் பருகலின் இடத்திலிருப்பவை
3. ஆணுறுப்பின் முன்பகுதியை பெண்குறியினுள் செலுத்துவதன் மூலம் உடலுறவு கொள்ளல். அதனுடன் விந்து வெளிப்பட்டாலும், வெளிப்படாவிட்டாலும் சரியே.
4. சுயஇன்பம் அனுபவித்தல், அல்லது சுயநினைவுடன் விந்தை வெளியேற்றுதல்.
உறக்கத்தில் தானாக விந்து வெளியாவதன் மூலம் நோன்பு முறிய மாட்டாது. நோன்பு முறியாதளவு தன்னைக் கட்டுப்படுத்த ஓர் ஆணால் முடியுமாயிருந்தால் அவருக்கு மாத்திரம் தனது மனைவியை முத்தமிடலாம்.
5. வேண்டுமென்றே வாந்தியெடுத்தல்.
தன்னை மீறி வாந்தி வெளியானால் தவறேதுமில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “நோன்பாளியாக இருக்கும் போது யாருக்கு வாந்தி வருகின்றதோ அவர் மீள நோற்கத் தேவையில்லை. யார் வேண்டுமென்றே வாந்தி எடுத்தால் அவர் அதனை மீள நோற்கட்டும்.” (அபூதாவூத் 2380, திர்மிதி 720).
6. மாதவிடாய், பிரசவதீட்டு இரத்தம் வெளியாதல்.
பகலின் இறுதி நேரத்திலாவது மாதவிடாய்,அல்லது பிரசவதீட்டு இரத்தம் வெளியானால் அப்பெண்ணின் நோன்பு முறிந்து விடுகின்றது. அல்லது மாதவிடாயுடன் இருந்து பஜ்ருக்கு பின் சுத்தமானாலும் அன்றைய தின நோன்பு செல்லுபடியாக மாட்டாது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் தொழாமலிருப்பதில்லையா, நோன்பு நோற்காமலிருப்பதில்லையா?”. (புஹாரி 1951).
நோயின் காரணமாக பெண்ணிடமிருந்து வெளியாகும் இரத்தம் வழமையான மாதவிடாய் காலத்திலோ, பிரசவத்தின் காரணமாகவோ இல்லாமலிருந்தால் நோன்பு நோற்க எவ்விதத் தடையுமில்லை.