கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் நோன்பு விட அனுமதிக்கப்பட்டவர்கள்

அல்லாஹ் தனது அடியார்கள் சிலர் மீது கொண்ட இரக்கத்தின் காரணமாகவும், அவர்களுக்கு இலகுபடுத்திக் கொடுக்கவும் ரமழான் மாதத்தில் நோன்பை விட சலுகை வழங்கியுள்ளான். இப்பிரிவினர்கள் பற்றி இப்பாடத்தில் கற்போம்.

நோன்பை விட அல்லாஹ் அனுமதித்த பிரிவினர்களை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

இந்தப் பாடத்தின் மொழிபெயர்ப்பு பின்வரும் மொழிகளில் கிடைக்கிறது:

நோன்பு விட அனுமதிக்கப்பட்டவர்கள்

அல்லாஹ் தனது அடியார்கள் சிலர் மீது கொண்ட இரக்கத்தின் காரணமாகவும், அவர்களுக்கு இலகுபடுத்திக் கொடுக்கவும் ரமழான் மாதத்தில் நோன்பை விட சலுகை வழங்கியுள்ளான்.

1. நோன்பு பிடிப்பதன் மூலம் பாதிப்புக்குள்ளாகும் நோயாளி

அவருக்கு நோன்பை விட்டுவிட்டு ரமழானுக்குப் பிறகு ஒரு நாளில் அதனை மீள நோற்கலாம்.

2. நோன்பு நோற்க இயலாதவர்.

தள்ளாடும் வயது, தீராத நோய் போன்ற காரணங்களால் நோன்பு நோற்க முடியாதவர்கள் அதனை விட்டுவிட்டு ஒவ்வொரு நாளுக்குப் பதிலாக தான் வசிக்கும் ஊரிலுள்ள பிரதான உணவிலிருந்து சுமார் ஒரு கிலோ ஐநூறு கிராம் அளவு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.

3. மாதவிடாய், பிரசவ இரத்தம் உள்ள பெண்கள்.

இவ்விருவரும்நோன்பு நோற்பது ஹராமாகும். செல்லுபடியாகவும் மாட்டாது. ரமழானுக்குப் பிறகு விடுபட்ட நோன்புகளை அவ்விருவரும் மீள நோற்க வேண்டும்.

4. கர்ப்பிணி பெண் மற்றும் பாலூட்டும் அன்னை

அவ்விருவரும் நோன்பு நோற்பதால் தமக்கோ தமது குழந்தைகளுக்கோ பாதிப்பு ஏற்படுமென அஞ்சினால் நோன்பை விட்டுவிட்டு ரமழானுக்குப்பிறகு மீள நோற்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "நோன்பைப் பற்றி உமக்குக் கூறுகின்றேன் உட்காரும், நிச்சயமாக அல்லாஹ் பிரயாணிகளுக்குத் தொழுகையின் பாதியைத் தளர்த்தியுள்ளான். பிரயாணி, கர்ப்பிணி, பாலூட்டும் அன்னை ஆகியோருக்கு நோன்பைத் தளர்த்தியுள்ளான்". (இப்னுமாஜா 1667).

5. பிரயாணி

ஒரு பிரயாணி தனது பிரயாணத்தின் போதும், நான்கு நாட்களுக்குக் குறைவாக தற்காலிகமாக ஓரிடத்தில் தங்கியிருக்கும் போதும் நோன்பை விட்டுவிட்டு ரமழானுக்குப் பிறகு அதனை மீள நோற்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான் : “எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்”. (பகரா : 185).

ரமழானில் நோன்பை விட்டவரின் நிலை என்ன?

தகுந்த காரணமின்றி நோன்பை விட்ட அனைவரும் தமது இரட்சகனுக்குச் செய்த மாபெரும் பாவத்திற்காக உடனடியாக அல்லாஹ்விடம் பாவமீட்சி பெற்று, பாவமன்னிப்புக் கோர வேண்டும். அத்தினத்தை மாத்திரம் மீள நோற்க வேண்டும். ஆனால் உடலுறவு மூலம் நோன்பை முறித்தவர் அத்தினத்தை மீள நோற்பதுடன் அப்பாவத்திற்காக வேறு பரிகாரமும் செய்ய வேண்டும். முதல்கட்டமாக முஸ்லிமான ஓர் அடிமையை வாங்கி உரிமையிடல் வேண்டும். இஸ்லாம் பல சந்தர்ப்பங்களில் மனிதன் மனிதனுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து அவனை விடுவிக்க வலியுறுத்துகின்றது. தற்காலத்தைப் போன்று அடிமைகள் இல்லாவிடில் அடுத்த கட்டமாக இரண்டு மாதங்கள் தொடராக நோன்பு நோற்க வேண்டும். அதற்கும் சக்தியில்லாவிட்டால் இறுதிக் கட்டமாக அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்