கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் ஸுன்னத்தான நோன்பு

வருடத்தில் ஒரு மாதம் நோன்பு நோற்பதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். எனினும் கூலிகளும், வெகுமதிகளும் அதிகரிக்கும் நோக்கிற்காக வேறு சில தினங்களிலும் நோன்பு நோற்பதை ஊக்கப்படுத்தியுள்ளான். இப்பாடத்தில் அவ்வாறான சில ஸுன்னத்தான நோன்புகளையும் அவற்றின் சிறப்புகளையும் அறிவோம்.

  • ஸுன்னத்தான நோன்பின் சில வகைகளை அறிதல்.
  • இவ்வகை நோன்புகளின் சிறப்பு, கூலிகளை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

இந்தப் பாடத்தின் மொழிபெயர்ப்பு பின்வரும் மொழிகளில் கிடைக்கிறது:

வருடத்தில் ஒரு மாதம் நோன்பு நோற்பதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். எனினும் முடியுமானவர்களுக்கு வேறு சில தினங்களிலும் நோன்பு நோற்பதை ஊக்கப்படுத்தியுள்ளான். கூலிகளும், வெகுமதிகளும் அதிகரிக்கவே இந்த ஊக்குவிப்பு வந்துள்ளது. அவ்வாறான தினங்கள் வருமாறு :

1. ஆஷூரா தினம்.

ஆஷூரா தினம் என்பது இஸ்லாமிய நாட்காட்டியில் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் பத்தாவது தினமாகும். அத்தினத்தில் தான் அல்லாஹ் நபி மூஸா (அலை) அவர்களை பிர்அவ்னிடமிருந்து பாதுகாத்தான். அன்னாரைப் பாதுகாத்ததற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியும், எமது நபி (ஸல்) அவர்கள் அத்தினத்தில் நோன்பு நோற்றதால் அவர்களைப் பின்பற்றியும் முஸ்லிம்கள் அத்தினத்தில் நோன்பு நோற்கின்றனர். ஆஷூரா நோன்பைப் பற்றி அன்னாரிடம் வினவப்பட்ட போது "முன்சென்ற வருடத்தின் பாவங்களுக்கான பரிகாரமாகும்" எனக் கூறினார்கள். (முஸ்லிம் 1162), அதற்கு முன்தினமான ஒன்பதாவது தினத்திலும் நோற்பது ஸுன்னத்தாகும். "அடுத்த வருடம் நான் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோற்பேன்" என நபியவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 1134).

2. அரபா தினம்

அரபா தினம் என்பது இஸ்லாமிய நாட்காட்டியில் பன்னிரண்டாம் மாதமான துல்ஹஜ் மாதத்தின் ஒன்பதாவது தினமாகும். அத்தினத்தில் தான் ஹஜ் செய்யச் சென்றோர் மக்காவிலுள்ள அரபா மைதானத்தில் ஒன்று கூடி, அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிந்து, இரைஞ்சுகின்றார்கள். வருடத்தின் சிறந்த தினங்களில் இதுவும் ஒன்றாகும். ஹஜ் செய்யாதவர்கள் அத்தினத்தில் நோன்பு நோற்பது ஸுன்னத்தாகும். அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 1162).

3. ஷவ்வால் மாத ஆறு நோன்புகள்.

ஷவ்வால் என்பது இஸ்லாமிய நாட்காட்டியில் பத்தாவது மாதமாகும். யார் ரமழான் மாதம் நோன்பு நோற்று, அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவராவார் என நபி (ஸல்) கூறினார்கள்.(முஸ்லிம் 1164).

4. ஒவ்வொரு மாதமும் மூன்று தினங்கள் நோன்பு நோற்றல்.

''ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்குமாறும். 'ளுஹா' நேரத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுமாறும். உறங்குவதற்கு முன் வித்ருத் தொழுகையை தொழுது விடுமாறும் இந்த மூன்று விஷயங்களை என் தோழர்(ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்!'' என அபூஹுரைரா (ரலி) கூறினார்கள். (புஹாரி 1981, முஸ்லிம் 721).

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்