கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் குளிர்காலமும் சுத்தமும்

குளிர்காலப் பருவத்தில் சுத்தம் தொடர்பான பிரத்தியேக சட்டங்கள்

  • குளிர்காலத்தில் சுத்தம் செய்யும் முறையைத் தெளிவுபடுத்தல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

மழை நீர் சுத்தமானதாகும்

மழை நீர் இயல்பிலே சுத்தமானதுடன் சுத்தப்படுத்தக் கூடியதாகவும் உள்ளது. அல்லாஹ் கூறுகின்றான் : "வானத்திலிருந்து நாம் தூய்மையான நீரை இறக்கியுள்ளோம்." (புர்கான் : 48). அதேபான்று தொழுகையாளிகளின் ஆடைகளில் படரும் மழைநீர் அழுக்கு, தெரு நிலக்கீல் போன்றனவும் சுத்தமாகும்.

மாரிகாலத்தின் குளிரிலும் வுழூவைப் பரிபூரணமாகச் செய்தல்

குளிர் நீராயினும், வெந்நீராயினும் வுழூவைப் பரிபூரணமாகச் செய்வது அல்லாஹ்வை வணங்கும் முறைகளில் ஒன்றாகும். நபி ஸல் அவர்கள் கூறினார்கள் : "(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா? என்று கேட்டார்கள். மக்கள், ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், (அவை:) சிரமமான சூழ்நிலைகளிலும் வுழூவை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்துவைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவைதாம் கட்டுப்பாடுகளாகும் என்று கூறினார்கள்." (முஸ்லிம் 251).

குளிர் போன்றவற்றிலிருந்து தப்புவதற்காக சில உறுப்புகளைக் கழுவுவதில் அலட்சியமாக இருப்பது தவறாகும். முகத்தை முழுமையாகக் கழுவாமலிருப்பது, அல்லது மஸ்ஹு மாத்திரம் செய்வது, அல்லது கை, கால்களை முழுமையாகக் கழுவாமலிருப்பது போன்றவற்றை அவதானிக்கலாம். இது கூடாத செயலாகும். முடியாமான பட்சத்தில் முழுமையாக வுழூச் செய்வதே கடமையாகும், அவ்வாறில்லையினில் அதனை கொதிக்க வைத்துப் பயன்படுத்தலாம், அதுவும் முடியாவிட்டால் தயம்மும் செய்யலாம்.

குளிர்காலத்தில் வுழூச் செய்வதற்காக நீரை கொதிக்க வைக்கலாம், அதனால் நன்மை குறைந்து விடாது, அத்துடன் வுழூச் செய்த பின் உறுப்புக்களை உலர்த்திக் கொள்ளவும் முடியும், அதனாலும் நன்மை குறைந்து விடாது. இவ்வாறு செய்யாவிடில் பாதிப்பு ஏற்படுமாக இருந்தால் அல்லது வுழூவை முழுமையாகச் செய்ய முடியாமல் போகுமாக இருந்தால் இவற்றை செய்வது அவசியாகும்.

தயம்மும்

தயம்மும் என்பது இரு கைகளாலும் மண்ணில் அடித்து, பின் அதனால் முகத்தைத் தடவி, பின் இடது கையால் வலது கை மணிக்கட்டு வரையும், பின் வலது கையால் இடது கை மணிக்கட்டு வரையும் தடவிக்கொள்ளல் ஆகும்.

எப்போது தயம்மும் செய்யலாம்?

தண்ணீர் அறவே இல்லாவிடில், அல்லது தேவையுடைய நேரத்தில் பற்றாக்குறையாக இருப்பது, அதனைப் பயன்படுத்தி வுழூச் செய்வதால் நோய், அல்லது கடும் குளிர் காரணமாக அதிக சிரமம் ஏற்படல் போன்ற சந்தர்ப்பங்களில் தயம்மும் செய்யலாம்.

பாதணிகள் மீது மஸ்ஹு செய்தல்

பாதணிகள் மீது மஸ்ஹு செய்தல் என்பது : இரு கால்களையும் மூடக்கூடிய அமைப்பிலுள்ள பாதணிகள் அல்லது சாக்ஸ்களை அணிந்த நிலையில் வுழூ செய்யும் ஒருவர் தலையை மஸ்ஹு செய்த பின் பாதணிகளைக் கலற்ற வேண்டிய அவசியமில்லை, அதற்கு மேலால் கால்களின் மேற்பகுதியில் மஸ்ஹு செய்யலாம்.

பாதணிகளில் மஸ்ஹு செய்ய சில நிபந்தனைகள் உண்டு.

١
பாதணிகள் இரண்டும் தூய்மையானதாக இருக்க வேண்டும்.
٢
அவ்விரண்டும் காலை (வுழுவில் கழுவ வேண்டிய பகுதியை) மறைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
٣
இரு கால்களையும் கழுவி பரிபூரணமாகச் செய்த வுழூவிற்குப் பின்னால் அவ்விரண்டையும் அணிந்திருக்க வேண்டும்.

பாதணிகளில் மஸ்ஹு செய்வதற்கான கால எல்லை

ஊரிலிருப்பவருக்கு ஒரு நாள்.
பிரயாணிக்கு மூன்று நாட்கள் .

பாதணி அணிந்ததன் பின் முதல் தடவை மஸ்ஹு செய்ததிலிருந்தே கால எல்லை ஆரம்பிக்கின்றது.

கால எல்லை முடிவடைந்த பின் வுழூச் செய்ய விரும்பினால், குளிப்பு கடமையாக இருந்தால், அல்லது பரிபூரணமான வுழூவின்றை அணிந்திருந்தால் பாதணிகளைக் கலற்றுவது அவசியமாகும்.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்