கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் பயணம் மற்றும் சுத்தம்

சுத்தம் தொடர்பான குறிப்பிட்ட சில நிலைகள் பயணங்களின் போது ஒரு முஸ்லிமுக்கு ஏற்படுகின்றது. பயணங்களில் சுத்தத்துடன் தொடர்பான சில சட்டங்களை இப்பாடத்தில் கற்போம்.

பயணத்தில் சுத்தம் பற்றிய சட்டங்களை அறிதல்

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

ஊரில் தங்கியிருக்கும் போது மனிதனுக்குக் கிடைக்கும் அதிகமான வசதிகள், மற்றும் பொருட்கள் நெருக்கத்திலியே சிரமமின்றி பெற்றுக் கொள்ளல் போன்ற நிலைகள் பயணங்களில் மாறிவிடுகின்றன. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள் :''பயணம் வேதனையில் ஒரு பகுதியாகும். அது ஒருவரின் உணவையும் பானத்தையும் உறக்கத்தையும் தடுத்து விடுகிறது. எனவே, ஒருவர் தம் தேவையை முடித்ததும் விரைந்து தம் குடும்பத்தாரிடம் செல்லட்டும்.'' (புஹாரி 1804, முஸ்லிம் 1927). பயணிகள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சுத்தம் போன்றவற்றின் சட்டதிட்டங்களும் இதில் உள்ளடங்குகின்றன.

இயற்கைத் தேவையை நிறைவேற்றப் பொருத்தமான இடத்தைத் தெரிவு செய்தல்

நிழல் பெறும் இடங்கள், மரங்கள், ஓய்வெடுக்கவென பாதையோரங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இடங்கள் போன்ற மக்கள் அதிகமாக வந்து போகும் இடங்களில் இயற்கைத் தேவையை நிறைவேற்றி, அசுத்தப்படுத்துவது ஹராமாகும்.

பாலைவனம் போன்ற இடங்களில் இயற்கைத் தேவையை நிறைவேற்றும் போது சிறுநீர் படாமலும் அதன் துளிகள் தெளிக்காமலும் இருக்க நீர் உரிஞ்சக் கூடிய தளர்வான இடத்தைத் தேடுவது விரும்பத்தக்கது என அறிஞர்கள் கூறுகின்றனர். எனவே கடினமான நிலப்பகுதி, காற்று வீசும் திசை போன்றவற்றைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

இயற்கைத் தேவை நிறைவேற்றும் நிலையில் மறைவெடுத்துக் கொள்ளல்

மக்களை விட்டும் தூரமாகுவதன் மூலமோ, தடுப்பு ஒன்றை வைப்பதன் மூலமோ இயற்கைத் தேவை நிறைவேற்றும் போது மக்களை விட்டும் மறைவெடுத்துக் கொள்வது அவசியமாகும். முஃகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். அப்போது அவர்கள், முஃகீரா! தண்ணீர் குவளையை எடுங்கள்! என்று கூறினார்கள். அதை நான் எடுத்துக் கொண்டு அவர்களுடன் புறப்பட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடந்து (என் கண்ணுக்கெட்டாத தூரத்திற்குச்) சென்று என்னைவிட்டு மறைந்து இயற்கைக் கடனை நிறைவேற்றி விட்டு (திரும்பி) வந்தார்கள். (முஸ்லிம் 274). மற்றுமொரு நபிமொழியில் : "நபியவர்கள் இயற்கைத் தேவைக்காச் சென்றால் (மக்களை விட்டும்) தூரச் செல்வார்கள்" என இடம்பெற்றுள்ளது. (அஹ்மத் 15660).

அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி) அவர்கள் நபியவர்களைப் பற்றிக் கூறும்போது : "நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றச் செல்லும் மறைவிடங்களிலேயே மேடு அல்லது பேரீச்சந்தோட்டம் ஆகியனவே அவர்களுக்கு மிகவும் விருப்பமானவையாக இருந்தன" எனக் கூறுகின்றார். (முஸ்லிம் 342). இதனால்தான் அதிகமாக மறைவெடுத்துக் கொள்வதற்காக "நபியவர்கள் இயற்கைத் தேவை நிறைவேற்றும் போது தரைக்கு நெருங்கும் வரை ஆடையை உயர்த்த மாட்டார்கள்" என சில அறிவிப்புக்களில் இடம்பெற்றுள்ளது. (அபூதாவூத் 14, திர்மிதி 14).

தயம்மும்

தயம்மும் என்பது இரு கைகளாலும் மண்ணில் அடித்து, பின் அதனால் முகத்தைத் தடவி, பின் இடது கையால் வலது கை மணிக்கட்டு வரையும், பின் வலது கையால் இடது கை மணிக்கட்டு வரையும் தடவிக்கொள்ளல் ஆகும்.

தங்கியிருக்கும் சந்தர்ப்ங்களை விட பயணங்களில் தயம்மும் செய்வது அதிகமாகும். நீர் கிடைக்காமை, அல்லது பருகத் தேவையென்பதால் பற்றாக்குறை போன்ற தயம்மும் செய்வதற்கான காரணங்கள் அதிகமாக பயணங்களிலேயே நிகழ்கின்றன.

அதேபோன்று நோய், கடுங்குளிர் போன்ற காரணங்களினால் வுழூச் செய்வதில் கடும் சிரமம் ஏற்படும் போதும் தயம்மும் செய்ய அனுமதிக்கப்படுகின்றது. இங்கு குளிர் என்பது நோய் அல்லது கடுந்துன்பம் ஏற்படுமென அஞ்சக்கூடியளவு கடுமையான குளிராகும். சாதாரண குளிருக்காக தயம்மும் செய்ய முடியாது.

நீர் இல்லையெனில் அருகில் போய்வரும் தூரத்திலிருந்து கொண்டு வர முடியாமலும், அதிக குளிரெனில் அதனை சூடேற்ற முடியாமலும் இருக்கும் போதுதான் தயம்மும் செய்ய முடியும்.

பாதணிகள் மீது மஸ்ஹு செய்தல்

பாதணிகள் மீது மஸ்ஹு செய்தல் என்பது : இரு கால்களையும் மூடக்கூடிய அமைப்பிலுள்ள பாதணிகள் அல்லது சாக்ஸ்களை அணிந்த நிலையில் வுழூ செய்யும் ஒருவர் தலையை மஸ்ஹு செய்த பின் பாதணிகளைக் கலற்ற வேண்டிய அவசியமில்லை, அதற்கு மேலால் கால்களின் மேற்பகுதியில் மஸ்ஹு செய்யலாம்.

பாதணிகள் இரண்டும் தூய்மையானதாக இருத்தல், அவ்விரண்டும் காலை (வுழுவில் கழுவ வேண்டிய பகுதியை) மறைக்கக் கூடியதாக இருத்தல், இரு கால்களையும் கழுவி பரிபூரணமாகச் செய்த வுழூவிற்குப் பின்னால் அவ்விரண்டையும் அணிந்திருத்தல் போன்றன பாதணிகள் மீது மஸ்ஹு செய்வதற்கு நிபந்தனையிடப்படும். தொடர்ந்து அணிபவராக இருந்தால் ஊரிலிருப்பவருக்கு ஒரு நாளும், பிரயாணிக்கு மூன்று நாட்களும் மஸ்ஹு செய்யலாம்.

கால எல்லை முடிவடைந்த பின் வுழூச் செய்ய விரும்பினால், குளிப்பு கடமையாக இருந்தால், அல்லது பரிபூரணமான வுழூவின்றை அணிந்திருந்தால் பாதணிகளைக் கலற்றுவது அவசியமாகும்.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்