தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் அல்லாஹ்வை விசுவாசித்தல்
அல்லாஹ்வை விசுவாசிப்பதன் அர்த்தம்
அல்லாஹ் ஒருவன் உள்ளான் என்பதையும், அவனது பரிபாலனத் தன்மை, இறைமை, பெயர், பண்புகள் அனைத்திலும் தனித்தவன் என்பதை ஆணித்தரமாக உண்மைப்படுத்துதல்.
படைத்தவனுக்குப் பணிவதன் வெளிப்பாடுகளில் ஸுஜூத் மிக மகத்தானது.
அல்லாஹ்வை ஏற்பது மனிதனிடம் உள்ள இயற்கை உணர்வாகும். அதற்கான ஆதாரத்தைத் தேடுவதில் சிரத்தை எடுக்கும் அவசியமில்லை. இதனால்தான் பல்வேறுபட்ட மதத்தினர், பிரிவனர்களில் அதிகமானவர்கள் அல்லாஹ் இருப்பதை ஏற்றுள்ளனர்.
அல்லாஹ் ஒருவன் உள்ளான் என்பதை நாம் உளப்பூர்வமாக உணர்கின்றோம். சிலர் இதனை அழிக்கவோ, புறக்கணிக்கவோ முயற்சித்தாலும் நம்முடைய நம்பிக்கையான உள்ளுணர்வு மூலமாகவும், ஒவ்வொரு நபரின் ஆத்மாவிலும் அல்லாஹ் நிறுவியிருக்கும் மதத்தின் உள்ளுணர்வின் மூலமாகவும் நாம் துன்பத்திலும் சோதனையிலும் அவனையே நாடுகிறோம்.
அல்லாஹ்வின் உள்ளமைக்கு உறுதியான சான்றாக அழைப்பவர்களுக்கு அவன் பதிலளித்தல், கேட்பவர்களுக்கு கொடுத்தல், துன்பத்திற்குள்ளானவர்களுக்கு பதிலளித்தல் போன்ற நிகழ்வுகளை இதோ நாம் பார்த்துக் கொண்டும், கேட்டுக்கொண்டும் தான் இருக்கின்றோம்.
அல்லாஹ்வின் உள்ளமைக்கான சான்றுகள் குறிப்பிட்டுக் கூறுவதையும், மட்டுப்படுத்துவதையும் விட மிகத் தெளிவானதாகும். அவற்றுள் சில :
புதிதாக உருவாகும் ஒவ்வொரு பொருளையும் உருவாக்கக் கூடிய ஒருவன் நிச்சயமாக இருக்க வேண்டும் என்ற நியதி அனைவரும் அறிந்த விடயமாகும். இதோ எல்லா நேரங்களிலும் நாம் காணும் இந்த பல உயிரினங்கள் அவற்றை உருவாக்கிய ஒரு படைப்பாளனை நிச்சயம் கொண்டிருக்க வேண்டும். அவன் தான் கண்ணியமிக்க அல்லாஹ் ஆவான். ஏனெனில் எந்தவொரு படைப்பும் அதன் படைத்தவன் இல்லாமலிருக்க முடியாது. அதே போன்று அப்பொருள் தன்னைத் தானே படைத்துக் கொள்ளவும் முடியாது. ஏனெனில் எப்பொருளும் தன்னைத் தானே படைத்துக் கொள்ளமாட்டாது. அல்லாஹ் கூறுகின்றான் : "எப்பொருளும் இன்றி அவர்கள் படைக்கப்பட்டனரா அல்லது அவர்கள் படைக்கின்றவர்களா?" (அத்தூர்: 35). இவ்வசனத்தின் அர்த்தம் என்னவெனில் அவர்கள் படைப்பாளன் இல்லாமல் படைக்கப்படவும் இல்லை, அவர்களே தம்மைத்தாமே படைத்துக் கொள்ளவும் இல்லை. எனவே அல்லாஹ்தான் அவர்களது படைப்பாளனாக இருக்க வேண்டும்.
வானம், பூமி, நட்சத்திரங்கள், மரங்கள் உட்பட இப்பிரபஞ்சம் சீராக இயங்குவதே இவற்றுக்கு ஒரு படைப்பாளன் உண்டு என்பதை ஆணித்தரமாக அறிவிக்கின்றது. அவன்தான் உயர்ந்தவனாகிய அல்லாஹ்வாகும். "இது அனைத்துப் பொருட்களையும் மிக நுட்பமானதாக்கிய அல்லாஹ்வின் செயலாகும்". (நம்லு : 88).
இந்த கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் - எடுத்துக்காட்டாக - சீர்குழையாத ஒரே நிலையான அமைப்பில் இயங்குகின்றன, ஒவ்வொரு கிரகமும் ஒரு சுற்றுப்பாதையில் செல்கிறது, அவை அவற்றின் எல்லைகளைத் தாண்டமாட்டாது. அல்லாஹ் கூறுகின்றான் : "சூரியன் சந்திரனை அடைய முடியாது. இன்னும் இரவு பகலை முந்தக்கூடியதுமில்லை. இவை ஒவ்வொன்றும் தக்குரிய வட்ட வரைபில் நீந்திச் செல்கின்றன". (யாஸீன் : 40).