கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் மூடநம்பிக்கைகளைக் களைதல்

இஸ்லாம் குறைகளற்ற இயற்கையுணர்வு, சரியான பகுத்தறிவுக்குரிய மார்க்கமாகும். இதனால்தான் மனிதர்களது ஆன்மீக, லௌகீக விடயங்களை சீர்குலைக்கும் அனைத்து வித மூடநம்பிக்கைகள், கற்பனைக் கதைகளுக்கு எதிராக இஸ்லாம் போராடுகின்றது. அவற்றில் சிலதை இப்பாடத்தில் கற்போம்.

  • மூடநம்பிக்கைகள், கற்பனைக் கதைகள் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாட்டை அறிதல்.
  • தவறான சில சிந்தனைகளில் இஸ்லாமிய சட்டத்தை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

இந்தப் பாடத்தின் மொழிபெயர்ப்பு பின்வரும் மொழிகளில் கிடைக்கிறது:

இஸ்லாத்திற்கு முன்னர் அரபிகளும், பிற சமூகத்தினரும் கட்டுக்கதைகள், மூடநம்பிக்கைகள், கற்பனைகளின் பிணைக் கைதிகளாகவே இருந்தனர். பூமியின் நாலாத்திசைகளிலும் இவை பரவியிருந்தது, எந்தச் சமூகமும் தப்பவில்லை. எந்தளவுக்கெனில் அல்குர்ஆனைக் கூட ஆரம்பத்தில் சூனியம், கட்டுக்கதைகளின் ஒரு பகுதியாகவே அரபுகள் கருதினர்.

இஸ்லாம் தனது ஒளியைக் கொண்டுவந்து நேர்வழி காட்டிய போது ஆத்மா மற்றும் அறிவின் தூய்மைக்கு உத்தரவாதமளிக்கும் சட்டங்கள் மற்றும் விதிகள் மூலம் கட்டுக்கதைகள், மூடநம்பிக்கைகள், கற்பனைகளின் பிடியிலிருந்து பகுத்தறிவை விடுவித்தது. பிற சக்திகளின்றி அல்லாஹ்விடம் மாத்திரம் சார்ந்திருக்க வழி காட்டியது. அவற்றில் சில :

சூனியம், கண்கட்டிவித்தைகளைக் களைதல்

சூனியம், கண்கட்டி வித்தை, சாஸ்திரம் போன்ற அனைத்து வகைகளையும் இஸ்லாம் தடை செய்துள்ளது. அவற்றை இணைவைப்பு, வழிகேடாக ஆக்கியுள்ளது. சூனியக்காரன் ஈருலகிலும் வெற்றிபெற மாட்டான் என்பதையும் இஸ்லாம் அறிவித்துள்ளது. அல்லாஹ் கூறுகின்றான் : "சூனியக்காரன் எங்கிருந்து வந்தாலும் வெற்றி பெற மாட்டான்". (தாஹா : 69).

அதே போன்றுதான் ஒரு முஸ்லிம் சூனியக்காரர்கள், சாஸ்திரக்காரர்களிடம் செல்வதையும், அவர்களிடம் ஆரோக்கியம், சிகிச்சை, பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வேண்டுவதையும் இஸ்லாம் தடை செய்துள்ளதுடன், அவ்வாறு செய்வோர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டவற்றை மறுத்தவர் எனவும் வர்ணித்துள்ளது. ஏனெனில் நலவு, கெடுதி அனைத்தும் அல்லாஹ்விடமே உள்ளது, அவன் மாத்திரமே மறைவானவற்றை அறிகின்றான். நபியவர்கள் கூறினார்கள் : "யார் ஒரு ஜோசியரிடம் சென்று, அவன் கூறுவதை உண்மைப்படுத்துகின்றானோ அவன் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதை மறுத்தவனாவான்". (ஆதாரம் : ஹாகிம் 15).

நலவு, கெடுதி அல்லாஹ்விடமே உள்ளது.

மனிதன், ஜின், மரங்கள், கற்கள், எவ்வளவு பாரிய கோல்களாக இருப்பினும் அவை அல்லாஹ்வின் மகத்துவத்தைப் பறைசாற்றுவதாகவே உள்ளன. பிரபஞ்சத்தில் தாக்கம் செலுத்தக்கூடிய வழமைக்கு மாறான சக்தி எந்த மனிதருக்கும் இல்லை. படைத்தல், கட்டளை பிரப்பித்தல், வல்லமை, திட்டமிட்டு நிர்வகித்தல் அனைத்தும் அல்லாஹ்வின் கட்டளைப்படியே உள்ளன. அல்லாஹ் கூறுகின்றான் : "படைத்தலும், கட்டளையிடுதலும் அவனுக்கே உரியன. அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ் பாக்கியமுடையவனாகி விட்டான்". (அஃராப் : 54).

அந்தப் படைப்பினங்களின் பிரமாண்டத்தையும், அவற்றின் நுட்பமான ஆக்கத்திறனயைும் ஆராய்ந்தவர் அனைத்து வணக்கங்களும் செலுத்தப்பட வேண்டிய திட்டமிடும் வல்லமை கொண்ட ஓரே இரட்சகனே அவற்றைப் படைத்துள்ளான் என்பதை அறிந்து கொள்வார். அவன்தான் படைப்பாளன். அவனல்லாதோர் படைப்பினங்களே. அல்லாஹ் கூறுகின்றான் : இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்! (புஃஸ்ஸிலத் : 41).

மறைவனவை, எதிர்காலம் ஆகியவற்றை அல்லாஹ் மாத்திரமே அறிகின்றான்.

மறைவனவை, எதிர்காலம் ஆகியவற்றை அல்லாஹ் மாத்திரமே அறிகின்றான் என அவன் அறிவித்துள்ளான். சாஸ்திரக்காரர்களோ, கண்கட்டிவித்தைக்காரர்களோ மறைவானவற்றை அறிவார்களென யாராவது கருதினால் அவன் பொய்யனாவான். அல்லாஹ் கூறுகின்றான் : "அவனிடமேமறைவானவற்றின் திறவுகோல்கள் உள்ளன" (அன்ஆம் : 59)

ஏன், படைப்பினங்களில் சிறந்தவர் இறைத்தூதர் ஸல் அவர்கள் கூட தனக்கென எவ்வித நலவோ, கெடுதியோ செய்ய அதிகாரம் பெற்றிருக்கவில்லை. மறைவானவற்றையோ, எதிர்காலம் பற்றியோ அன்னார் அறியமாட்டார். அவ்வாறிருக்க அன்னாரை விடத் தரத்தில் குறைந்தவர்கள் எவ்வாறு அறிய முடியும்? அல்லாஹ் கூறுகின்றான் : "அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அஃராப் : 188)

சகுனம், துற்குறி பார்ப்பதைத் தடுத்துள்ளது

பொருட்கள், நிறங்கள், வார்த்தைகள் மூலம் சகுனம், துற்குறி பார்ப்பதை இஸ்லாம் தடுத்துள்ளது . அதே நேரம் நல்ல எதிர்பார்ப்பு, எதிர்காலம் பற்றிய நேர்மறையான பார்வையை ஏவியுள்ளது.

ஒருவர் தனது பயணத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஒரு பறவையைக் கண்டால், அல்லது அதன் ஓசையைக் கேட்டால் தனது பயணத்தை பூரணப்படுத்தாமல் இடைநிறுத்தி விடுவது தீய சகுணத்திற்கோர் உதாரணமாகும். இது இணைவைப்பென நபியவர்கள் வர்ணித்துள்ளார்கள் . "சகுணம் பார்ப்பது இணைவைப்பாகும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் . (அபூ தாவூத் 3912, இப்னுமாஜா 3538). ஏனெனில் இந்த ககுணம் அல்லாஹ் மாத்திரம்தான் பிரபஞ்சத்தை நிர்வகிக்கும், மறைவானவற்றை அறிந்தவன் என்ற முஸ்லிமின் பலமான நம்பிக்கைக்கு முரண்படுகின்றது. எனவே ஒரு பறவை அல்லது பிராணிகளில் ஒன்றைக் கண்டவுடன் தீயது நடக்குமென துற்குறி பார்ப்பதை இஸ்லாம் தடுத்துள்ளது.

மறுபுறம் நற்குறி, நல்ல எதிர்பார்ப்பு, அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைத்தல், அது தொடர்பான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதை இஸ்லாம் ஏவியுள்ளது. நபியவர்கள் நல்ல எதிர்ப்பார்ப்பைக் காட்டும் நல்ல வார்த்தைகளை நேசிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். (புஹாரி 5776, முஸ்லிம் 2224).

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்