தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் மார்க்க ரீதியான பாதுகாப்பு நடவடிக்கைகள்
மக்கள் மத்தியில் நோய்கள் மற்றும் தொற்றுநோய்கள் பற்றிய பீதி அலை அதிகரித்து வருவதுடன், முஸ்லிம் பாதுகாப்பு தொடர்பான உலகியல் காரணிகளைக் கடைபிடிப்பதுடன் மார்க்க ரீதியான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கடைபிடிக்க வேண்டும்.
நெருக்கடிகள், சோதனைகளின் போது ஒரு விசுவாசி முதலாவதாக, பிரதானமாக, மிக முக்கியமாகச் செய்ய வேண்டியது அல்லாஹ்விடம் ஒதுங்கி, கெடுதியைத் தடுப்பதற்காகப் பாதுகாப்புத் தேடுவதாகும்.
அல்லாஹ்விடம் இரைஞ்சி, பணிந்து, அவன்பால் தேவைகண்டு சோதனை, துன்பத்தை நீக்க அதிகமாகப்பிரார்த்திக்க வேண்டும். பிரார்த்தனைதான் ஒரு முஸ்லிமின் பாதுகாப்பு அரணாகவும், ஆயுதமாகவும் உள்ளது. அல்லாஹ்வின் ஏற்பாட்டினால் சோதனைகள் நிகழும் போது அவனிடம் பிரார்த்திப்பதன் மூலம் மாத்திரம்தான் அதனைத் தட்ட முடியும்.
அதன் மூலமே அவனிடம் நோய்நிவாரணம் தேடுதல். ஏனெனில் அனைத்துவித உள்ரங்க, வெளிரங்க நோய்களுக்கும் அதுவே மருந்தாகும். "இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்" (இஸ்ரா : 82).
இறைநம்பிக்கை, உறுதி, உண்மையுடன் நிவாரணத்திற்கான காரணிகளும் அதிகரிக்கின்றது. அல்லாஹ் கூறுகின்றான் : “இது ஈமான் கொண்டவர்களுக்கு ஒரு வழிகாட்டியும், (அரு) மருந்துமாகும்” என்று கூறுவீராக! (புஸ்ஸிலத் : 44).
அவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக பஜ்ர் தொழுகை. நபி ஸல் அவர்கள் கூறினார்கள் : "பஜ்ர் தொழுதவர் அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ளார்". (முஸ்லிம் 657).
பாதுகாப்பு முறையில் சோதிக்கப்பட ஒருவர், அல்லது நோயாளியைக் கண்டால் பிரார்த்தனை செய்வதும் முக்கியமானதாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "சோதிக்கப்பட்ட ஒருவரைக் கண்டு "அல்ஹம்து லில்லாஹில்லதீ ஆஃபானீ மிம்மப் தலாக பிஹீ வபழ்ழலனீ அலா கஸீரின் மிம்மன் கலக தஃப்ழீலா" எனக் கூறினால் அந்நோய் இவரைத் தொற்றாது". (திர்மிதி 3431).
ஏனெனில் அல்லாஹ்வை நினைவுகூர்வதைத் தொடர்ந்து பேணிவருதினால் இவ்வுலகிலும் அதிக நலவுகள் உண்டு, மறுமையிலும் மகத்தான கூலியுண்டு. காலை, மாலை திக்ருகள் ஒரு முஸ்லிம் பேண வேண்டிய முக்கியமானவற்றில் உள்ளதாகும். உள்ளம் விரிவடைதல், மன அமைதி, அலலாஹ்வின் உதவி, அவனது உயர்ந்த சன்னிதானத்தில் இவரைப் புகழ்தல் போன்றன இந்த திக்ரை ஓதுபவருக்குக் கிடைக்கும் பலன்களாகும்.
-சில பிரார்த்தனைகள், திக்ருகள் மற்றும் மார்க்க ரீதியான பாதுகாப்பு முறைகள்:
உறங்க முன் ஆயதுல் குர்ஸீ வசனத்தை ஓதுதல் :
ஒரு நபிமொழியில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது : "'நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸியை (ஸூரா பகராவின் 255ம் வசனம்) ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஓதும்! அவ்வாறு செய்தால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்!'". (புஹாரி 2311).
ஸூரா பகராவின் இறுதி இரு வசனங்கள் :
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ மஸ்ஊத் (ரலி) கூறினார்கள் : "ஸூரா பகராவின் இறுதி இரு வசனங்களை யார் ஓர் இரவில் ஓதுகின்றாரோ அதுவே அவருக்குப் போதமானதாகும்". (புஹாரி 4008, முஸ்லிம் 807).
அதிகமான தஸ்பீஹ் மற்றும் பாவமன்னிப்புக் கோரல்:
இதனை ஓர் அடியான் தொடர்ந்து பேணி வந்தால் அல்லாஹ் அவனை விட்டும் தீங்குள், சோதனைகளைத் தட்டி விடுகின்றான். அல்லாஹ் கூறுகின்றான் : "ஆனால் நீர் அவர்களிடையே இருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான்; மேலும் அவர்கள் பாவமன்னிப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை". (அன்ஃபால் : 33).