தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் அமானிதப் பொருள் (வதீஅத்)
இது இன்னொருவரிடம் பிரதியீடின்றி பாதுகாப்பதற்காக வைக்கப்பட்ட சொத்தைக் குறிக்கின்றது. உதாரணமாக வேறொருவரிடம் தனது கடிகாரம், வாகனம், பணம் போன்றவற்றை அமானிதமாக வைப்பதைக் குறிப்பிடலாம்.
அமானிதப் பொருளின் (வதீஅத்) சட்டம்
வதீஅத் என்பது முறிக்கமுடியுமான அனுமதிக்கப்பட்ட ஒப்பந்தமாகும். இரு தரப்பினருக்கும் தாம் விரும்பிய நேரத்தில் ஒப்பந்தத்தை ரத்துச் செய்து கொள்ளலாம். உரிமையாளர் அதனைத் திருப்பிக் கேட்டால் ஒப்படைப்பது அவசியமாகும், அமானிதத்தைப் பொறுப்பேற்றவர் திருப்பிக் கொடுத்தால் உரிமையாளர் அதனைப் பெற்றுக் கொள்வது அவசியமாகும். இது நன்மை மற்றும் இறையச்சத்தில் ஒத்துழைப்பதில் உள்ளதாகும்.
வதீஅத் சட்டபூர்வமானதற்கான காரணம்
பொருத்தமான இடமின்மையாலோ, இயலாமை, நோய், அச்சம் காரணமாகவோ சில வேளை மனிதனுக்குத் தனது சொத்துக்களைப் பாதுகாக்கும் சக்தியில்லாமல் போகின்றது, வேறொருவரிடத்தில் அவ்வாறு பாதுகாக்கும் சக்தி இருக்கும்.
இதனால் ஒரு பக்கத்தில் மக்கள் தமது சொத்துக்களைப் பாதுகாக்கவும், மறு தரப்பில் பொறுப்பேற்றவர் நன்மைை அடைந்து கொள்ளவும் அல்லாஹ் இந்த வதீஅத் முறையை அனுமதித்துள்ளான். இதில் மக்களுக்கு இலகுபடுத்தலும், அவர்களது தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதும் உள்ளன,
வதீஅத் சட்டபூர்வமான ஒன்றாகும். அதற்கான ஆதாரம் அல்குர்ஆன், ஸுன்னா, இஜ்மாஃ, கியாஸ் ஆகியனவாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்று உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்". (நிஸா : 58)
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "உன்னை நம்பியவனிடம் அமானிதத்தை நிறைவேற்று, உனக்கு மோசடி செய்தவனுக்கு நீ மோசடி செய்யாதே." (அபூதாவூத் 3535).
அமானிதப் பொருளைப் பொறுப்பேற்பதன் சட்டம்
அமானிதப் பொருளைப் பாதுகாப்பதில் நன்மை மற்றும் இறையச்சத்தில் ஒத்துழைப்பு, அதனைப் பாதுகாப்பதற்கான பாரிய நன்மை இருப்பதனால் அதற்குத் தகுதியுடையவராகத் தன்னைக் கருதுபவர் அமானிதப் பொருளைப் பெறுப்பேற்பது விரும்பத்தக்கதாகும்.
வதீஅத்தின் பிரதான அடிப்படைகள்
அமானிதப் பொருளைப் பொறுப்பேற்றவர் முழுப்பொறுப்பையும் சுமக்கும் நிலைகள்
வதீஅத் அமானிதம் என்ற நிலையிலிருந்து உத்தரவாதம் என்ற நிலைக்கு மாறும் சந்தர்ப்பங்கள் :
அமானிதப் பொருள் பொறுப்பேற்றவரின் கையிலிருக்கும் போது அத்துமீறலோ, கவனயீனமோ இன்றி சேதமடைந்தால் அதற்காக நஷ்டஈடு கட்ட வேண்டியதில்லை, அதனை உரிய இடத்தில் பாதுகாத்து வைப்பது கடமையாகும், பொறுப்பேற்றவருக்கு அதனைப் பயன்படுத்த அனுமதித்தால் அது உத்தரவாதமளிக்கப்பட்ட கடனாக மாறிவிடுகின்றது.
அமானிதத்தைப் பொறுப்பேற்றவர் பயணம் செய்ய விரும்பி, பொருளுக்கு சேதம் ஏற்படுமென அஞ்சினால் உரியவரிடமோ, அவரது பிரதிநிதியிடமோ ஒப்படைக்க வேண்டும். முடியா விட்டால் ஆட்சியாளர் நீதமானவாரக இருக்கும் பட்சத்தில் அவரிடம் ஒப்படைக்க வேண்டும். அதுவும் முடியாவிட்டால் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு நம்பிக்கையான ஒருவரிடம் கொடுத்து விட வேண்டும்.
ஒருவரிடம் பணம் அமானிதமாக வைக்கப்பட்டு, அதனை பாதுகாப்பிற்குரிய இடத்திலிருந்து வெளியே எடுத்து, அல்லது பிரிக்க முடியாதவாறு வேறு பணத்துடன் கலந்து அனைத்தும் சேதமடைந்தால் அல்லது தவறினால் நஷ்டஈடு கட்டுவது அவசியமாகும்.
அமானிதத்தைப் பொறுப்பேற்றவர் நம்பிக்கையாளராவார், அத்துமீறலோ, கவனயீனமோ இன்றி சேதமடைந்தால் அதற்காக நஷ்டஈடு கட்ட வேண்டியதில்லை, பொருளைத் திருப்பி ஒப்படைத்தல், சேதமடைதல், கவனயீனமின்மை போன்ற வாதங்களில் தெளிவான ஆதாரங்கள் இல்லாத போது பொருளைப் பொறுப்பேற்றவரின் வாதம் சத்தியம் செய்வதுடன் ஏற்கப்படும்.
அமானிதப் பொருளைத் திருப்பி ஒப்படைப்பதன் சட்டம்
அமானிதப் பொருள் பொறுப்பேற்றவரிடம் அது அமானிதமாகும். உரியவர் திருப்பிக் கேட்கும் போது ஒப்படைப்பது அவசியமாகும். உரியவர் கேட்டதன் பின்னரும் தகுந்த காரணமின்றி ஒப்படைக்காதிருந்து, அவ்வாறே பொருள் அழிந்தால் நஷ்டஈடு கட்ட வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான் : "நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்று உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்". (நிஸா : 58)
அமானிதப் பொருள் ஒன்றிற்கு மேற்பட்டோருக்குரியதாக இருந்து, அளவை, நிறுவை, எண்ணிக்கையுடன் தொடர்பான தனது பங்கைத் தருமாறு அவர்களில் ஒருவர் வேண்டினால் அது அவருக்கு வழங்கப்படும்.