தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் வக்பு செய்தல்
அல்லாஹ் தாராளமாக சொத்துக்களை வழிங்கிய செல்வந்தர்கள் தமது வாழ்விலும், மரணத்தின் பின்னும் நன்மைகளை அடைந்து கொள்ளும் நோக்கிலும் தேவையுடையோருக்கு பாரிய பலன்கள் கிட்டும் நோக்கிலும் தமது சொத்துக்களில் இருந்து குறிப்பிட்ட பகுதியை அதன் அசல்தன்மை உரிமையாளரிடம் இருக்கின்ற நிலையில் பலன் தொடரும் வகையில் தடுத்து வைத்து நல்ல வழிகளில் செயலவு செய்ய விரும்புகின்றனர். அவனை வழிப்படுதலையும், வணக்கங்களையும் அதிகரிக்க ஆர்வம் கொள்கின்றனர். எனவே மரணத்தின் பின் தமது சொத்துக்களை முறையாகக் கையாளாதோரிடம் சென்றடையலாம் என அஞ்சி அதிலிருந்து ன்றனர். இதனால்தான் அல்லாஹ் அச்சொத்துக்கள் மூலம் பயனடைவதற்காக வக்ப் செய்வதை சட்டபூர்வமாக்கியுள்ளான்.
இது அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்து சொத்தின் உரிமையை தடுத்து வைத்துக் கொண்டு, அதன் பலன்களை இறைபாதையில் விடுதல் என்பதைக் குறிக்கின்றது.
வக்பு செய்வதன் சட்டம்
வக்பு செய்தல் விரும்பத்தக்க ஒரு வணக்கமாகும். இது மிகச் சிறந்த தர்மங்களில் ஒன்றாகவும், நலவு,உபகாரம், நன்மைகளில் மகத்தான, அதிகளவிலான பரந்தளவில் பயனளிக்கக் கூடியதாகவும் உள்ளது. மரணத்துடன் தொடர்பறுந்து விடாத நற்செயல்களில் இதுவும் ஒன்றாகும்.
வக்பு சட்டபூர்வமானதற்கான காரணம்
மார்க்கத்திலும், ஈருலகிலும் பல நலவுகள் இருப்பதால் அல்லாஹ் வக்பு செய்வதை சட்டபூர்வமாக்கியுள்ளான், எனவே ஓர் அடியான் தனது சொத்துக்களை அல்லாஹ்வுக்காக வக்பு செய்வதன் மூலம் கிடைக்கும் கூலிகளை பெரிதாக்கிக் கொள்கின்றான். மரணத்தின் பின்னாலும் அதன் நன்மைகள் தொடர்கின்றன. யாருக்காக வக்பு செய்யப்பட்டதோ அவர்கள் அதிலிருந்து பயனடைவதுடன் உரிமையாளருக்காகப் பிரார்த்தனையும் செய்கின்றனர். எனவே சமூகம் மேலும் ஒன்றிணைகின்றது.
இது அல்லாஹ்வும் அவனது தூதரும் மிக அதிகமாக ஆர்வமூட்டிய தர்மங்களில் ஒன்றாகும். ஏனெனில் இது நற்செயல்களில் நிலையான, உறுதியான தர்மமாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் : "நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்". (ஆல இம்ரான் : 92).
இப்னு உமர்(ரலி) கூறுகின்றார் : (என் தந்தை) உமர் இப்னு கத்தாப்(ரலி) கையில் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றிருந்தார்கள். அதன் விஷயத்தில் ஆலோசனை பெறுவதற்காக நபி(ஸல்) அவர்களிடம் சென்றார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நான் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றுள்ளேன். அதைவிடச் சிறந்த ஒரு செல்வத்தை (இதுவரை) நான் அடைந்ததேயில்லை. எனவே, அதை நான் என்ன செய்யவேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் விரும்பினால் அந்த நிலத்தை நீங்களே வைத்துக் கொண்டு அதன் விளைச்சலை தர்மம் செய்யுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே உமர்(ரலி) அவர்களும் 'அதை (எவருக்கும்) விற்கக் கூடாது; அன்பளிப்பாக வழங்கக் கூடாது; வாரிசுச் சொத்தாகவும் எவருக்கும் அதை வழங்கக் கூடாது' என்ற நிபந்தனைகளை விதித்து அறக்கொடையாக (வக்ஃபாக) வழங்கினார்கள். அ(தன் வருமானத்)தை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், அல்லாஹ்வின் பாதையிலும், வழிப் போக்கர்களுக்கும், விருந்தினர்களுக்கும் தர்மம் செய்தார்கள். அதைப் பராமரிக்கப் பொறுப்பேற்றிருப்பவர், அதிலிருந்து நியாயமான அளவில் உண்பதிலும் (அதிலிருந்து எடுத்துத் தனக்கென்று) சேகரித்து வைக்காமல், பிறருக்கு உணவளிப்பதிலும் குற்றமில்லை (என்றும் எழுதி வைத்தார்கள்.) (புஹாரி 2737, முஸ்லிம் 1632).
வக்பின் வகைகள்
உதாரணமாக ஒருவர் பள்ளிவாயில், மாணவர்களுக்காக ஒரு கல்வி நிலையம், பலவீனமானவர்கள், வறியவர்கள், அநாதைகள், விதவைகள் போன்றோருக்காக ஒரு கட்டிடம் போன்றவற்றை வக்பு செய்வதைக் குறிப்பிடலாம்.
வீடொன்று நிர்மாணித்து அதனைத் தனது வாரிசுகளுக்காக வக்பு செய்தல், அல்லது ஒரு விளைநிலத்தை வக்பு செய்து, அதன் வருமானத்தை அவர்களுக்காக வைத்தல் போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம்.
வக்பு இரு விடயங்களில் ஒன்றின் மூலம் நிறைவேறும்
வக்பு செய்வதன் நிபந்தனைகள்
வக்பு செய்வதற்கென குறிப்பிட்ட அளவொன்று கிடையாது, மக்களின் வசதி, வாய்ப்புகளுக்கேற்ப நிலைமை மாறும். தனக்கு வாரிசுக்காரர் யாருமில்லாத செல்வந்தர் தனது முழுச் சொத்தையும் வக்பு செய்யலாம், வாரிசுக்காரர் உள்ள செல்வந்தர் சொத்தில் ஒரு பகுதியை வக்பு செய்து விட்டு மீதியை அவர்களுக்கு விட்டுவைக்கலாம்.
வக்பு அல்லாஹ்வுக்காக காலவரையறையின்றி பொதுவாக செய்யப்படும் வணக்கமாகும்.ஒரு நிலம், வீடு, வயல் போன்றவற்றை அல்லாஹ்விற்காக ஒருவர் வக்பு செய்தால் அவை அவரது உரிமம், பரிவர்த்தனையிலிருந்து வெளியேறிவிடுகின்றன. எனவே அவை விற்கப்பட முடியாது, அன்பளிப்புச் செய்யப்பட முடியாது, அனந்தரமாகப் பெறப்பட முடியாது, மீளப் பெற முடியாது. வக்பு செய்தவர் மரணித்த பின் குடும்பத்தார் அதனை விற்கவும் முடியாது, ஏனெனில் இது வாரிசுக்காரர்களின் உரிமைக்கு அப்பாற் சென்று விட்டது.
வக்பு செய்வதற்குரிய வார்த்தையை ஒருவர் மொழிந்தால், அல்லது அதனை உணர்த்தக் கூடிய ஒரு செயலைச் செய்தால் வக்பு உறுதியாகிவிடும், பயனடைவோர் அதனை ஏற்றுக்கொள்ளும் வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டியதில்லை. அதேபோன்றுதான் ஆட்சித் தலைவரின் அனுமதியும் அவசியமில்லை. வக்பு உறுதியாகிவிட்டால் அதனை முறிக்கும் விதத்தில் அதில் பரிவர்த்தனை செய்தல் கூடாது.
அல்லாஹ் தூய்மையானவன், தூய்மையானதையே அவன் ஏற்றுக் கொள்வான். ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் திருப்தியை நாடி ஒரு பொருளை வக்பு செய்ய விரும்பினால் தனது சொத்துக்களில் மிகச் சிறந்த, பெறுமதி மிக்க, தனக்கு மிக விருப்பமானதை வக்பு செய்வதே சிறந்தது, அதுதான் உபகாரம் நன்மையில் முழுமையானதாகும்.
வக்பு செய்யும் வழிகளில் மிகச் சிறந்தது அனைத்து காலங்களிலும், இடங்களிலும் முஸ்லிம்கள் பயனடைய முடியுமானஅமைப்பில் பொதுப்படையக வக்பு செய்வதாகும். உதாரணமாக பள்ளி வாயில்கள், மாணவர்கள், இறைபாதையில் அறப்போர் புரிவோர், உறவினர்கள், முஸ்லிம்களில் வறியவர்கள், பலவீனமானவர்கள் போன்றோருக்கு வக்பு செய்வதைப் போன்றாகும்