தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் இஸ்லாத்தில் பெண்ணுரிமை
இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:
தூய்மைமிக்க இந்த இஸ்லாமிய மார்க்கம் அதன் நேரான மற்றும், நுட்பமான வழிகாட்டல்கள் மூலம் முஸ்லிம் பெண்ணில் அக்கறை செலுத்தியுள்ளது. மேலும் அவளுடைய கௌரவத்தைப் பாதுகாத்துள்ளது, அவளுடைய கண்ணியத்தையும் மகிழ்ச்சியையும் அடைவதை உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் சந்தேகம், சலனம், தீமை மற்றும் மோசமனான நடத்தைகள் ஆகியவற்றிலிருந்து வெகு தொலைவில் அவளுக்கு வசதியான வாழ்க்கைக்கான வழிமுறைகளை வழங்கியுள்ளது. மேற்கண்ட அனைத்தும் அல்லாஹ் தனது அடியார்கள் மீது பொதுவாகவும், பெண்கள் மீது குறிப்பாகவும் கொண்ட பாரிய அருளிலுள்ளதாகும். இந்த அக்கறை பல வடிவங்களில் உள்ளன.
கண்ணியமும் உயர்ந்த இடமும்.
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: "பெண்கள் விடயத்தில் அல்லாஹ் திருவசனங்களை இறக்கி, சொத்துப் பங்கீடுகளை செய்யும் வரை அறியாமைக் காலத்தில் நாங்கள் பெண்களை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை". (புஹாரி 4913, முஸ்லிம் 1479). 1400 வருடங்களுக்கு முன் இஸ்லாம் எனும் ஜோதி உதித்து, பெண்களை உயர்த்தி, பல சமூகங்கள், கோத்திரங்கள் அவர்களுக்கு செய்து வந்த பல அநீதிகளை நீக்கியது. பெண்ணிற்கு சொத்துரிமையோ, அனந்தரம் பெறும் உரிமையோ இருக்கவில்லை. கணவன் மரணித்தால் மனைவி அனந்தரமாக்கப்படுவாள், அல்லது அவருடன் உடன்கட்டை ஏறுவாள். அத்துடன் விற்பனைப் பொருளாகவும் இருந்தாள். -உதாரணத்திற்காக இங்கிலாந்தில்- இந்த வழக்கம் இருபதாம் நூற்றாண்டு ஆரம்பம் வரை இருந்துள்ளது.
ஆண், பெண்களுக்கு மத்தியில் சமத்துவம்
படைப்பின் அடிப்படை
மார்க்க சட்டதிட்டங்களைக் கட்டாயப்படுத்துவதிலும், அதனையொட்டி ஈருலகிலும் வழங்கப்படும் நன்மை, கூலிகளிலும் இஸ்லாம் ஆண், பெண்ணுக்கு மத்தியில் சமப்படுத்தியுள்ளது. அல்லாஹ் கூறுகின்றான் : "ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்". (நஹ்ல் : 97). மேலும் கூறுகின்றான் : "ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்". (நிஸா : 124). நபி (ஸல்) அவர்களிடம், விந்து வெளிப்பட்டதாக ஒருவருக்கு நினைவில்லை, ஆனால் ஈரத்தைக் காண்கிறார் என வினவப்பட்ட போது "அவர் குளிக்க வேண்டும்" என்றார்கள். விந்து வெளிப்பட்டதாக நினைவுள்ளது, ஆனால் ஈரத்தைக் காணவில்லை என வினவப்ட்ட போது "அவருக்குக் குளிப்புக் கடமையில்லை" எனக் கூறினார்கள். அப்போது உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள், பெண்ணும் அவ்வாறு கண்டால் குளிக்க வேண்டுமா? எனக் கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் "இவ்விடயத்தில் பெண்களும் ஆண்களை ஒத்தவர்கள்தான்" என பதிலளித்தார்கள். (அபூதாவூத் 236).
நபி (ஸல்) அவர்களது இத்தூதுத்துவத்தை முதன் முதலில் ஏற்றதும் கதீஜா (ரலி) என்ற ஒரு பெண்தான். எத்யோப்பியாவிற்கு முஸ்லிம்கள் மேற்கொண்ட முதல் ஹிஜ்ரத் பயணத்திலும் பெண்கள் கலந்திருந்தனர். அகபா எனும் இடத்தில் இஸ்லாத்திற்காக செய்த முதல் உடன்படிக்கையிலும் பெண்கள் கலந்திருந்தனர். அவர்களிடமிருந்தும் நபியவர்கள் மார்க்கத்தைப் பின்பற்றுவதற்காக உறுதி எடுத்தார்கள்.
இஸ்லாமிய வரலாற்றில், பெண்கள் தங்கள் நல்ல குணங்கள் மற்றும் அறிவின் மிகுதி, இஸ்லாத்தை விளங்குதல் போன்றவற்றால் அறியப்பட்ட பல உதாரணங்களைப் பதிவுசெய்துள்ளனர். ஏன் பல சந்தர்ப்பங்களில் இத்துறையில் முன்னோடியாகவே அவர்கள் திகழ்ந்துள்ளனர். அறிவியல் மற்றும் கல்வியில் பெண் முன்னோடிகள் பலரிடமிருந்து முஸ்லிம்கள் தங்கள் மதத்தின் பல விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளனர். அவர்களில் அன்னை ஆஇஷா (ரலி) குறிப்பிடத்தக்கவர்கள்.
ஐவேளைத் தொழுகைகள், இரு பெருநாள் தொழுகைகள், ஜும்ஆத் தொழுகை, மழை தேடித் தொழும் தொழுகை, ஹஜ், உம்ரா போன்ற கடமையான, ஸுன்னத்தான, ஆகுமான கூட்டுவணக்கங்களில் ஆண்களுடன் பெண்களும் பங்கெடுக்கின்றனர்.ஆண்களைப் போன்றே இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுத்தல், நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் போன்ற மார்க்க சட்டங்களில் இரு பாலரையும் சமப்படுத்தும் இன்னோரன்ன விடயங்கள் அவளுக்கும் ஏவப்பட்டுள்ளன. இருபலாருக்கும் படைப்பின் அடிப்படையிலுள்ள வேறுபாட்டுடன் தொடர்புடைய விடயங்கள் மாத்திரம்தான் விதிவிலக்களிக்கப்படும்.
இருப்பினும், இஸ்லாம், சமத்துவக் கொள்கையை ஒரு பொது விதியாக அங்கீகரித்தாலும், ஆண், பெண் இரு பாலரினது இயல்பையும் கவனித்துள்ளது. இந்த பணிகளை ஒழுங்கமைத்து ஒவ்வொரு நபரையும் சரியான இடத்தில் வைத்த பிறகு வாழ்க்கையில் ஒருங்கிணைப்புக்கு வழிவகுக்கும் பணிகளில் மாறுபாட்டை உருவாக்குகிறது. எனவே குடும்பத்தில் ஆண் அதன் பொறுப்பையும், அதற்காக செலவளித்தல், பாதுகாத்தல், நிர்வகித்தல் போன்றவற்றின் பொறுப்பையும் சுமக்கின்றான். அதே போன்று பெண்ணும் தனது வீடு, கணவன், பிள்ளைகள் விடயத்தில் பொறுப்பாளியாகவும், அவளிடம் வேண்டப்படும் பொறுப்புகளைச் சுமக்கக் கூடியவளாகவும் இருக்கின்றாள்.
இஸ்லாம் பெண்களுக்கு முழு சிவில் மற்றும் சமூக உரிமைகளையும், தனிப்பட்ட மற்றும் அரசியல் அந்தஸ்தையும் உறுதி செய்கிறது. இவை இஸ்லாத்தின் தொடக்கத்தில் இருந்து 1400 வருடங்களுக்கு முன்னால், சிவில் கொள்கைகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கோஷம் விடுவதற்கு முன்னாலே பெண்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளாகும்.
சிவில் மற்றும் சமூகவியல் பெண்ணுரிமைகள்
தனிப்பட்ட நிலை மற்றும் திருமணத்தில் பெண்களின் உரிமைகள்
ஏற்கனவே சொல்லப்பட்டதெல்லாம் இஸ்லாத்தில் பெண்ணுரிமைகளுக்கான வெறும் ஒரு சில எடுத்துக்காட்டுகளே. இல்லாவிடில் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் அதிகமதிகம் உள்ளன.