தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் இயற்கைத் தேவையை நிறைவேற்றல், அதனை சுத்தம் செய்தலின் ஒழுக்கங்கள்.
இயற்கைத் தேவையை நிறைவேற்றலின் ஒழுக்கங்கள்
மலசலகூடத்திற்குச் செல்லும் போது இடது காலை முற்படுத்தி "பிஸ்மில்லாஹ், அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் குப்ஸி வல் கபாஇஸ்" (அல்லாஹ்வின் பெயரால் (நுழைகின்றேன்) இறைவா! (அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியற்றைத் தூண்டும்) ஆண் பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்)" எனும் துஆவை ஓதுவது ஸுன்னத்தாகும்.
மலசலம் கழிக்கும் போது மக்கள் பார்வையை விட்டும் தனது மறைவிடத்தை மறைத்துக் கொள்வது முஸ்லிம் மீது கடமையாகும்.
மக்களை நோவினைப் படுத்தும் இடங்களில் மலசலம் கழிப்பது ஹராமாகும்.
திறந்த வெளிகளில் மலசலம் கழிக்கும் போது பொந்துகளில் கழிப்பதும் ஹராமாகும். ஏனெனில் அவற்றில் விஷஜன்துக்கள் இருந்து அவற்றுக்கு நோவினை ஏற்படுத்துவான், அல்லது அவை இம்மனிதனுக்கு நேவினை ஏற்படுத்தும்.
மலசலம் கழிக்கும் போது கிப்லாத் திசையை முன்னோக்கவோ, பின்னோக்கவோ கூடாது. மறைக்கக்கூடிய சுவரேதுமில்லாத வெட்டவெளிப் பகுதியில் இதனைப் பேணுவது அவசியமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "நீங்கள் மலசலம் கழிக்கும் போது கிப்லாத்திசையை முன்னோக்கவோ, பின்னோக்கவோ வேண்டாம்". (புஹாரி 394, முஸ்லிம் 264).
தனது உடலிலோ, உடையிலோ மலசலங்களில் அசுத்தங்கள் ஏதும் படாமல் கவனித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பட்டால் அவ்விடத்தைக் கழுவிக் கொள்வது அவசியமாகும்.
ஒருவன் தனது இயற்கைத் தேவையை நிறைவேற்றினால் அவனுக்கு இரண்டில் ஒன்று கடமையாகின்றது
இஸ்தின்ஜாஃ என்பது உடலில் மலசலம் வெளிப்படும் இரு துவாரங்களையும் தண்ணீரினால் சுத்தம் செய்வதைக் குறிக்கின்றது.
இஸ்திஜ்மார் என்பது உடலைத் தூய்மைப்படுத்தக் கூடிய மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட திசுக்கள் அல்லது கற்கள் மூலம் அசுத்தம்பட்ட அந்த இடங்களை சுத்தப்படுத்துவதைக் குறிக்கின்றது.
தொடக்கு
இது ஒரு மனிதனை சுத்தமடைய முன் தொழுகையை நிறைவேற்றுவதை விட்டும் தடுக்கும் உள்ரங்கமான ஒரு பண்பாகும். அசுத்தத்தைப் போன்று உணர முடியுமான ஒன்றல்ல.
ஒரு முஸ்லிமுடைய தொடக்கு பரிசுத்தமான நீரினால் வுழூ செய்வதன் மூலமோ, குளிப்பதன் மூலமோ நீங்கிவிடுகின்றது. அசுத்தம் கலந்து அதன் மூலம் நிறமோ, சுவையோ, மணமோ மாற்றமடையாத நீரே பரிசுத்தமான நீர் எனப்படுகின்றது.
தொடக்கு இரு வகைப்படும்.
சிறு தொடக்கும் அதிலிருந்து வழூச் செய்வதும்
பின்வரும் ஏதாவது ஒன்று நிகழ்ந்தால் ஒரு முஸ்லிமுடைய வுழூ முறிந்து விடுகின்றது. தொழுகைக்காக மீண்டும் வுழூச் செய்ய வேண்டும்.
1. முன், பின் துவாரத்தினூடாக மலம், சலம், காற்று போன்ற ஏதாவது வெளிப்படுதல். வுழூவை முறிக்கக் கூடியவற்றைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான் : "அல்லது நீங்கள் மல, சலம் கழித்தால்" (நிஸா : 43). தொழுகையில் காற்றுப் போய் வுழூ முறிந்து விட்டதா என சந்தேகிக்கும் நபருக்கு "சத்தம் கேட்கும் வரை, அல்லது மணத்தை நுகரும் வரை தொழுகையை விட்டு விட வேண்டாம்" என நபியவர்கள் கூறினார்கள். (புஹாரி 137, முஸ்லிம் 361).
2. இச்சையுடன் திரையின்றி அபத்தைத் தொடல். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "தனது அபத்தைத் தொட்டவர் வுழூச் செய்து கொள்ளட்டும்". (அபூதாவூத் 181).
3. ஒட்டக இறைச்சி சாப்பிடுதல். அது பற்றி நபியவர்களிடம் வுழூச் செய்ய வேண்டுமா? என வினவப்பட்ட போது "ஆம்" என பதிலளித்தார்கள். (முஸ்லிம் 360).
4. ஆழ்ந்த உறக்கம், பைத்தியம், மயக்கம், போதை போன்ற காரணங்களினால் புத்தி நீங்குதல்.