கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் வுழூ

வுழூ, மற்றும் சுத்தம் மிகச் சிறந்த மகத்தான செயல்களில் ஒன்றாகும். இப்பாடத்தில் வுழூவின் சிறப்பையும், அதனை செய்யும் முறையையும் அறிவோம்.

  • வுழூவின் சிறப்பை அறிதல்.
  • வுழூச் செய்யும் முறையை அறிதல்

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

வுழூவின் சிறப்பு

வுழூவும், சுத்தமும் ஒரு முஸ்லிமின் பதவிகளை உயர்த்தக் கூடிய மிகச் சிறந்த, மகத்தான செயல்களில் உள்ளனவாகும். அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்து ஓர் அடியான் அதனை நிறைவேற்றினால் அதன்மூலம் அவனுடைய பாவங்கள், தவறுகளுக்குப் பரிகாரமாக வுழூவை ஆக்குகின்றான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு முஸ்லிமான அல்லது முஃமினான (இறைநம்பிக்கை கொண்ட) அடியார் வுழூ செய்யும்போது முகத்தைக் கழுவினால், கண்களால் பார்த்துச் செய்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) நீருடன் அல்லது நீரின் கடைசித் துளியுடன் முகத்திலிருந்து வெளியேறுகின்றன. அவர் கைகளைக் கழுவும்போது கைகளால் பற்றிச் செய்திருந்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) தண்ணீருடன் அல்லது தண்ணீரின் கடைசித் துளியுடன் வெளியேறுகின்றன. அவர் கால்களைக் கழுவும்போது, கால்களால் நடந்து செய்த பாவங்கள் அனைத்தும் (கால்களைக் கழுவிய) நீரோடு அல்லது நீரின் கடைசித்துளியோடு வெளியேறுகின்றன. இறுதியில், அவர் பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராக (அந்த இடத்திலிருந்து) செல்கிறார்”. (முஸ்லிம் 244).

நான் வுழூச் செய்து சிறு தொடக்கை நீக்குவது எவ்வாறு?

நிய்யத் (எண்ணம்)

ஒரு முஸ்லிம் வுழூச் செய்ய நாடினால் உள்ளத்தால் அதன் மூலம் தொடக்கை நீக்குவதாக எண்ணிக் கொள்ள வேண்டும். நிய்யத் (எண்ணம்) அனைத்து செயற்களும் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான பிரதான நிபந்தனையாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே". (புஹாரி 01, முஸ்லிம் 1907). அதன் பின்னர் பின்வரும் செயல்களை ஒழுங்கு முறைப்படி அதிக இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.

பிஸ்மில்லாஹ் என்று கூற வேண்டும்.

இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவுதல்.

இரு கைகளையும் மணிக்கட்டு வரை நீரால் மூன்று முறை கழுவுதல் ஸுன்னாவாகும்.

வாய் கொப்பளித்தல்

நீரினால் வாய் கொப்பளிக்க வேணடும். அதாவது வாயினுள் நீரை செலுத்தி கடப்புச் செய்து உமிழ்ந்து விட வேண்டும். இவ்வாறு ஒரு தடவை செய்வது கடமையாகும். மூன்று தடவைகள் செய்வது ஸுன்னத்தாகும்.

மூக்கினுள் நீர் செலுத்துதல்.

அதாவது மூக்கினுள் நீரை உறிஞ்சி விட்டு பின்னர் சிந்தி விட வேண்டும். நோன்பாளியாக இல்லாமலோ, இதனால் பாதிப்பு ஏற்படாமலிருந்தாலோ சற்று அதிகமாக அவ்வாறு செய்வது விரும்பத்தக்கது. இவ்வாறு ஒரு தடவை செய்வது கடமையாகும். மூன்று தடவைகள் செய்வது ஸுன்னத்தாகும்.

முகம் கழுவுதல்

நெற்றியில் முடி முளைக்கும் இடத்திலிருந்து நாடிக்குழி வரை, மற்றும் ஒரு காது முதல் மறு காது வரை முகத்தை கழுவ வேண்டும். இரு காதுகளும் முகத்திற்கு உட்பட்ட பகுதிகளல்ல. இவ்வாறு ஒரு தடவை செய்வது கடமையாகும். மூன்று தடவைகள் செய்வது ஸுன்னத்தாகும்.

இரு கைகளையும் கழுவுதல்

விரல் நுனியிலிருந்து முழங்கை வரை இரு கைகளையும் கழுவ வேண்டும். இரு முழங்கைகளும் கழுவ வேண்டிய பகுதிக்குட்பட்டதாகும். இவ்வாறு ஒரு தடவை செய்வது கடமையாகும். மூன்று தடவைகள் செய்வது ஸுன்னத்தாகும்.

தலையை நீரினால் தடவுதல் (மஸ்ஹு செய்தல்).

இரு கைகளையும் நீரில் தொட்டு தலைமுடி ஆரம்பத்திலிருந்து பிடரி வரை கொண்டு செல்ல வேண்டும், மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே கொண்டு வருவது ஸுன்னத்தாகும். ஏனைய உறுப்புக்களைப் போன்று இதனை மூன்று முறை செய்வது ஸுன்னவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இரு காதுகளையும் மஸ்ஹு செய்தல்

தலையை மஸ்ஹு செய்த பின் அதே நீருடன் இரு ஆட்காட்டி விரல்களையும் இரு காதுகளுக்குள்ளும் நுழைத்து வெளிப்பகுதியை பெருவிரல்களால் தடவிக் கொள்ள வேண்டும்.

இரு கால்களையும் கழுவுதல்

கரண்டைக் கால் வரை இரு கால்களையும் கழுவ வேண்டும். வலதிலிருந்து ஆரம்பிப்பதும், மூன்று முறை கழுவுவதும் ஸுன்னத்தாகும். ஒரு தடவை செய்வது கடமையாகும். பாதணிகள் ஏதும் அணிந்திருந்தால் சில நிபந்தனைகளுடன் அதன் மீது மஸ்ஹு செய்யலாம்.

வுழுச் செய்யும் முறையை விளக்கும் காணொளி

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்